என் மலர்tooltip icon

    கணினி

    வாட்ஸ்அப் செயலியில் இனி அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

    விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த விடாமல் அவர்கள் மீது தடை விதிக்க முடியும். இந்நிலையில், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக வாட்ஸ்அப் தற்சமயம் அறிவித்துள்ளது.

    தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்புவது மற்றும் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் இவ்வாறு செய்ய உதவுவோர் சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்சமயம் அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், டிசம்பர் 7 ஆம் தேதிக்கு பின் விதிகளை மீறுவோர் வாட்ஸ்அப் மூலம் சட்டப்படி நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். 



    உலகம் முழுக்க பல கோடி பேர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலி அதிகளவு மற்றும் தானியங்கி முறையில் குறுந்தகவல்களை அனுப்புவதற்காக உருவாக்கப்படவில்லை. இவ்வாறு செய்வது வாட்ஸ்அப் விதிகளுக்கு எதிரானது ஆகும்.

    2019, டிசம்பர் 7 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலியின் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப் விதிகளை மீறும் அக்கவுண்ட்களை கண்டறியும் வழிமுறைகளை மேம்படுத்தி இருக்கிறோம்.

    மக்கள் வாட்ஸ்அப் செயலியை கொண்டு வியாபாரங்களுக்கு தொடர்பு கொள்ள நினைத்தனர். இதன் காரணமாகவே வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி துவங்கப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
    ஃபேஸ்புக் வாட்ச் சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் மொழிகளை சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆன்-டிமாண்ட் வீடியோ சேவையில் புதிய பகுதிகளை சேர்க்க அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. ஃபேஸ்புக் வாட்ச் சேவையை மாதம் 72 கோடி பேரும், தினமும் 14 கோடி பேரும் பயன்படுத்தி வரும் நிலையில், சேவையை மேலும் பிரபலப்படுத்த புதிய வசதிகளை வழங்க ஃபேஸ்புக் சோதனை செய்கிறது.

    அறிமுகமான ஒரு வருடத்தில் ஃபேஸ்புக் வாட்ச் சேவையை தினமும் 14 கோடி பேர் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் முதல் அதிகபட்சம் 26 நிமிடங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என ஃபேஸ்புக் சமீபத்தில் தெரிவித்தது.

    வாட்ச் சேவையை கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட அனுபவங்களை வழங்குவதே எங்களின் நோக்கம். இதற்கு பல்வேறு வீடியோ தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் வீடியோ தொகுப்புகளை வழங்குகிறோம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் பரேஷ் ராஜ்வாத் தனது வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.



    பயனர்களுக்கு அதிகளவு வீடியோக்களை வழங்க, ஃபேஸ்புக் தொடர்ந்து சர்வதேச பிராண்டுகளுடன் புதுப்புது ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வருகிறது. ஃபேஸ்புக் ஒரிஜினல்ஸ் தவிர, உலகம் முழுக்க வீடியோ தயாரிப்பாளர்களுடன் ஃபேஸ்புக் கூட்டணி அமைத்து வருகிறது.

    ஃபேஸ்புக் வாட்ச் சேவை கனடாவில் துவங்கப்படுகிறது. முன்னதாக இந்தியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் என உலகம் முழுக்க சுமார் 43 நாடுகளில் வாட்ச் சேவையில் விளம்பரங்களுக்கான வசதியை ஃபேஸ்புக் சேர்த்தது. 

    தற்சமயம் ஃபேஸ்புக்கின் வாட்ச் சேவை 17 மொழிகளில் கிடைக்கும் நிலையில், புதிதாக கன்னடா, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் ஸீவிடிஷ் போன்ற மொழிகளுக்கான வசதி சேர்க்கப்படுகிறது.
    உலகில் அதிகம் பேர் விளையாடும் வீடியோ கேமாக பப்ஜி இருக்கிறது. இதனை உலகம் முழுக்க எத்தனை பேர் விளையாடுகின்றனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



    பப்ஜி மொபைல் கேம் உலகில் அதிகம் பேர் விளையாடும் வீடியோ கேமாக இருக்கிறது. இதனை உலகம் முழுக்க சுமார் 10 கோடி பேர் விளையாடி வருகின்றனர். டென்சென்ட் நிறுவனத்தின் பேட்டில் ராயல் கேம் கடந்த மாதம் 14.6 கோடி டாலர்களை வருவாயாக ஈட்டியது.

    இதில் பெரும்பான்மை தொகை இன்-கேம் பர்சேஸ் மூலம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் விளையாடுவோர் ஸ்கின் மற்றும் காஸ்டியூம்களை வாங்கி கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகின்றனர். கிரேட் வால் செக்யூரிட்டீஸ் எனும் நிறுவனம் வெளியிட்ட விவரங்களில் பப்ஜி மொபைல் மொத்தம் 7.6 கோடி டாலர்களை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.



    இந்தியா, சீனா மற்றும் பல்வேறு இதர நாடுகளில் பப்ஜி மொபைல் கேமிற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் வருவாயில் அசுர வளர்ச்சியை பப்ஜி மொபைல் பெற்றிருக்கிறது. எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து டென்சென்ட் கேமில் சண்டை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை குறைத்ததது.

    சமீபத்திய அப்டேட்டில் ப்பஜி மொபைல் சுமார் 40 கோடி டவுன்லோடுகளை கடந்ததாகவும், தினமும் சுமார் ஐந்து கோடி பேர் பப்ஜி கேமினை விளையாடி வருவதாக தெரிவித்தது.
    சியோமியின் புதிய Mi பேண்ட் 4 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி நிறுவனம் தனது Mi பேண்ட் 4 சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய Mi பேண்ட் சாதனத்தில் 0.95 இன்ச் AMOLED கலர் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ் கொண்டிருக்கும் புதிய Mi பேண்ட் 4 மாடலுடன் 77 வகையான வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன.

    மேலும் இந்த பேண்ட் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டிருக்கிறது. இதில் 6-ஆக்சிஸ் ஹை-பிரெசிஷன் சென்சார் மற்றும் 6 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 மாடல் அவெஞ்சர்ஸ் எடிஷனும் கிடைக்கிறது. இத்துடன் கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் மற்றும் ஐயன் மேன் ரிஸ்ட் பேண்ட்களும் கிடைக்கின்றன.



    சியோமி Mi பேண்ட் 4 சிறப்பம்சங்கள்:

    - 0.95 இன்ச் 120x240 பிக்சல் AMOLED 24பிட் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ்
    - நேரம், நடக்கும் தூரம், இதய துடிப்பு, செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கும்
    - வாய்ஸ் அசிஸடண்ட் சேவைக்கு மைக்ரோபோன்
    - பி.பி.ஜி. (Photoplethysmography) / இதய துடிப்பு சென்சார்
    - உடல்நலனை கண்காணிக்கும், உறக்கத்தை டிராக் செய்யும்
    - டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் + டிரை-ஆக்சிஸ் கைரோ, கேபாசிட்டிவ் வியர் மாணிட்டரிங் சென்சார்
    - 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - ப்ளூடூத் 5.0 LE, என்.எஃப்.சி.
    - 135 எம்.ஏ.ஹெச். / 125 எம்.ஏ.ஹெச். (என்.எஃப்.சி.) பேட்டரி

    Mi பேண்ட் 4 பிளாக், பரிவுன், புளு, ஆரஞ்சு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 என்.எஃப்.சி. எடிஷன் விலை 229 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை 349 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.3500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவன சாதனங்களில் வழங்க பிரத்யேக இயங்குதளத்தை அந்நிறுவனம் உருவாக்கி வரும் நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    கூகுள் நிறுவனம் ஹூவாயுடனான வியாபார உறவுகளை முறித்துக் கொள்வதாக கடந்த மாதம் அறிவித்தது. இதனால் கூகுள் சேவைகள் மற்றும் பிளே ஸ்டோர் உள்ளிட்டவற்றை ஹுவாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் சொந்தமாக இயங்குதளத்தை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாயின் புதிய இயங்குதளம் ஓக் ஒ.எஸ். (Oak OS) என அழைக்கப்படலாம் என்றும் இது ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



    ஹூவாயின் சொந்த இயங்குதளம் சீனாவில் ஹாங்மெங் ஒ.எஸ். என்ற பெயரிலும் சர்வதேச சந்தையில் ஓக் ஒ.எஸ். என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாயின் சொந்த இயங்குதளம் ஆர்க் ஒ.எஸ். என அழைக்கப்படலாம் என கூறப்பட்டது.

    ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர அலுவலகங்களில் ஹூவாய் ஆர்க் ஒ.எஸ். பெயரை பதிவு செய்திருந்தது. எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஹூவாய் நிறுவனம் ஹாங் மெங் ஒ.எஸ். / ஓக் ஒ.எஸ். இயங்குதளத்தை தீவிரமாக சோதனை செய்ய துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் உரிமை, பிளே ஸ்டோர் மற்றும் இதர சேவைகளுக்கான அப்டேட்கள் ஆகஸ்டு மாத இறுதியில் நிறைவடைகிறது. இதன் பின் ஹூவாய் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
    கேமிங் பிரியர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் அதுபோன்ற கம்ப்யூட்டர்களுக்கென பிரத்யேக பதிப்பு தயாராகி விட்டது.
    குறைவான சிறப்பம்சங்கள் கொண்ட கணினிகளில் இயங்கும் வகையில் பப்ஜி கேமின் லைட் வெர்ஷன் உருவாக்கப்படுகிறது. விரைவில் பப்ஜி லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை பப்ஜி லைட் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    எனினும், பப்ஜி லைட் அறிமுகமாக இருக்கும் சரியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. பப்ஜி லைட் பதிப்பின் முதல் பீட்டா பதிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த கேம் உலகம் முழுக்க 15 நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மை நாடுகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை ஆகும்.

    பப்ஜி லைட் கேம் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என அந்நிறுவன ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பதிவில் சரியான அறிமுக தேதி பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக பப்ஜி லைட் வெர்ஷன் உலகம் முழுக்க 15 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.


    கம்ப்யூட்டர்களுக்கான பப்ஜி போன்று இல்லாமல் பப்ஜி லைட் கேமினை பயனர்கள் இலவசமாக விளையாட முடியும். இதற்கு பயனர்கள் முதலில் அதிகாரப்பூர்வ லான்ச்சரை பெற வேண்டும். இதை கொண்டு தான் கேமினை டவுன்லோடு செய்து அனைத்து கேம் ஃபைல்களையும் இன்ஸ்டால் செய்ய முடியும்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று பப்ஜி லைட் கேம் குறைந்த அளவு சிறப்பம்சங்கள் இருக்கும் கம்ப்யூட்டர்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பப்ஜி லைட் கேமினை கம்ப்யூட்டரில் விளையாட குறைந்தபட்சம் தேவைப்படும் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கம்ப்யூட்டரில் பப்ஜி லைட் விளையாட தேவையான சிறப்பம்சங்கள்:

    - விண்டோஸ் 7, 8, அல்லது 10 (64பிட்)
    - இன்டெல் கோர் ஐ3, 2.4 ஜிகாஹெர்ட்ஸ்
    - 4 ஜி.பி. ரேம்
    - இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 4000
    - 4 ஜி.பி. மெமரி
    கோடாக் நிறுவனத்தின் உரிமையாளரான சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் லிமிட்டெட் இந்தியாவில் பட்ஜெட் விலையில் இரண்டு பெரிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.



    சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை கோடாக் பிராண்டிங்கில் அறிமுகம் செய்துள்ளது. 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய டி.வி.க்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன.



    கோடாக் 49 இன்ச் டி.வி.

    கோடாக் 49 இன்ச் டி.வி. 50FHDXPRO என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் 49-இன்ச் ஃபுல் ஹெச்.டி. 16:9 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 178 டிகிரி வியூவிங் ஆங்கில், 300 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் இந்த டி.வி. 1110x110 எம்.எம். அளவில் 12.2 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஸ்டான்ட் உடன் இந்த டி.வி.யின் எடை 12.3 கிலோ ஆகும். 

    புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. வைபை வசதி கொண்டிருக்கும் இந்த டி.வி.யில் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், கோடாக் ஸ்மார்ட் வால் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் LAN, 2 AV IN, 3 யு.எஸ்.பி., 1 வி.ஜி.ஏ., 1 பி.சி. ஆடியோ இன் மற்றும் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோவிற்கு டி.வி.யின் கீழ் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 



    கோடாக் 43 இன்ச் டி.வி.

    கோடாக் 43 இன்ச் டி.வி.யில் ஃபுல் ஹெச்.டி. 16:9 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 178 டிகிரி வியூவிங் ஆங்கில், 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. 970x100 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட் டி.வி. ஸ்டான்ட் இல்லாமல் 7.7 கிலோவும், ஸ்டான்ட் உடன் 7.8 கிலோ எடை கொண்டிருக்கிறது.

    இந்த டி.வி.யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் டூயல்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. இதில் பில்ட்-இன் வைபை, ஆண்ட்ராய்டு 7.1 மற்றும் கோடாக் ஸ்மார்ட் வால் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் LAN, 2 AV IN, 2 யு.எஸ்.பி., 1 பி.சி. ஆடியோ இன் மற்றும் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோவிற்கு டி.வி.யின் கீழ் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் கோடாக் 43-இன்ச் டி.வி. விலை ரூ.20,999 என்றும் 49-இன்ச் டி.வி. விலை ரூ.24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டி.வி. மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
    ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இனி ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் இருக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இனி ஃபேஸ்புக் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஹூவாய் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த முடியும். இந்த செயலிகளுக்கான அப்டேட்களும் தொடர்ந்து வழங்கப்படும்.

    எனினும், இனி வெளியாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்று பிரபலமாக இருக்கும் செயலிகளை தங்களது சாதனங்களில் பிரீ-இன்ஸ்டால் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.



    பல்வேறு நாடுகளில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் ட்விட்டர் மற்றும் புக்கிங்.காம் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்கப்படுகின்றன. இது குறித்து ட்விட்டர் மற்றும் புக்கிங் ஹோல்டிங்ஸ் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ஃபேஸ்புக்கின் புதிய முடிவு ஹூவாய் நிறுவன விற்பனைக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஹூவாய் நிறுவன சாதனங்கள் அதிகளவு விற்பனையை பதிவு செய்த நிலையில், ஃபேஸ்புக்கின் புதிய அறிவிப்பு அந்நிறுவன வியாபாரத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது.

    ஃபேஸ்புக் நிறுவன நடவடிக்கைக்கு ஹூவாய் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர் டேட்டாவை சேமிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மேம்பட்ட கேமரா யு.ஐ., புதிய ஸ்டிக்கர்கள், ஸ்டோரிக்களில் ஷாப்பிங் செய்யும் வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

    அந்த வரிசையில் தற்சமயம் புதிதாக டேட்டா சேவர் அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. 

    இன்ஸ்டாகிராமின் புதிய டேட்டா சேவர் அம்சம் பயனர் தேர்வு செய்யும் வரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரீ-லோடு மற்றும் டவுன்லோடு செய்யாது. பயனர் க்ளிக் செய்த பின் மட்டுமே அதிக ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் டவுன்லோடு செய்யும்.



    இதன் மூலம் பயனர்கள் பார்க்க விரும்பும் மீடியாக்களை அவர்களே தேர்வு செய்யும் வசதியை அவர்களுக்கு வழங்குகிறது. இவ்வாறு செய்யும் போது பயனர் டேட்டாவும் சேமிக்கப்படுகிறது. இதுதவிர இந்த அம்சத்தை ஆன் செய்ததும், மீடியா எதுவும் டவுன்லோடு ஆகாது என்பதால் புகைப்படங்கள் வேகமாக லோடு ஆகும்.

    புதிய டேட்டா சேவர் அம்சத்தை இயக்க இன்ஸ்டாகிராம் செயலியின் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- மொபைல் டேட்டா யூஸ் -- நெவர், வைபை ஒன்லி, செல்லுலார் + வைபை உள்ளிட்ட ஆப்ஷன்களில் நீங்கள் விரும்புவதை தேர்வு செய்யலாம். 

    இணைய வேகம் குறைவாக இருக்கும் நாடுகளை குறிவைத்து புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சம் சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் வழங்க துவங்கி இருக்கும் நிலையில், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிகிறது.
    டைவா எனும் நிறுவனம் இந்தியாவில் ரூ.12,000 பட்ஜெட்டில் பில்ட்-இன் சவுண்ட்பாருடன் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.



    டைவா நிறுவனம் இந்தியாவில் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பில்ட்-இன் சவுண்ட்பார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த டி.வி.யில் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பமும் பிரத்யேக கிரிக்கெட் பிக்சர் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    டைவாவின் புதிய ஸ்மார்ட் டி.வி. D32SBAR எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் 32 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே 1366x768 பிக்சல் தர ரெசல்யூஷன் மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. வைடு கலர் கமுட் உடன் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.

    இந்த ஸ்மார்ட் டி.வி. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் D32SBAR ஸ்மார்ட் டி.வி.யில் பிளே ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 யு.எஸ்.பி. போர்ட்கள், ஆப்டிக்கல் அவுட்புட், வைபை மற்றும் லேண் உள்ளிட்ட போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரத்யேக கிரிக்கெட் பிக்ச்சர் மோட் வழங்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகளை சிறப்பான அனுபவத்தில் கண்டுகளிக்க முடியும்.

    இதுதவிர சரவுண்ட் சவுண்ட் மற்றும் மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டிருக்கிறது. ஆடியோ தரத்தை சிறப்பாக வழங்கும் நோக்கில் புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பில்ட்-இன் சவுண்ட்பார் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டைவா D32SBAR டி.வி. விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் விற்பனை டைவாவின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இத்துடன் இரண்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் ஒரு வருடத்திற்கான வாரண்டியை மை டைவா செயலியில் பதிவு செய்து இலவசமாக பெற முடியும்.
    ஆப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இவை இந்த கம்ப்யயூட்டர் சிறப்பாக செயலாற்றும் வல்லமையை வழங்குகிறது. புதிய மேக் ப்ரோவுடன் 6K HDR மாணிட்டரான ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடலையும் ஆப்பிள் அறிமுகம் செய்தது.

    டிராஷ்கேன் வடிவமைப்பு, குறைவான அப்கிரேடுகள் காரணமாக 2017 ஆம் ஆண்டே ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ சாதனத்தை மேம்படுத்துவதாக அறிவித்தது. எனினும், மேக் ப்ரோ அப்டேட் காலதாமதமாகி நேற்று (ஜூன் 3) நடைபெற்ற டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    புதிய மேக் ப்ரோ சாதனத்தின் வடிவமைப்பு முந்தைய மேக் ப்ரோவை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய மேக் ப்ரோவும் ஸ்டீல் பாடி, முன்புறம் மெஷ் பேனல் மற்றும் மேல்புற கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களே இயக்கக்கூடிய வகையில் எட்டு PCIe ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் ஆப்பிள் புதிதாக MPX மாட்யூல் ஒன்றை வடிவமைத்துள்ளது. இது PCIe மற்றும் தண்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டியை இணைக்கிறது. இதன் மூலம் கம்ப்யூட்டர் மிக எளிதாக குளிர்ச்சி பெறும். மேக் ப்ரோ மாடலில் 8-கோர் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் சியான் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.



    இது 12 கோர், 16 கோர், 24 கோர் மற்றும் 28 கோர் போன்ற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் மெமரி 1.5 டி.பி. (1500 ஜி.பி.) துவங்கி பயனர்கள் அதிகபட்சம் இரண்டு MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் AMD ரேடியான் வீகா II ஜி.பி.யு.க்களும் அதிகபட்சம் 56 டெராஃபிளாப்கள் கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது.

    இதன் பேஸ் மாடல் விலை 5,999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,15,220) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 32 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் AMD ரேடியான் ப்ரோ 580X ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த மாடல்களின் சிறப்பம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.



    இதன் கனெக்டிவிட்டியை பொருத்தவரை தண்டர்போல்ட் 3, யு.எஸ்.பி. டைப் ஏ, டூயல் 10 ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட்கள், வைபை, ப்ளூடூத் 5 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் எடை 18 கிலோ ஆகும். மேக் ப்ரோ பயனர்கள் ஆப்பிளின் புதிய ஆஃப்டர்-பர்னர் எனும் சாதனத்தை சேர்த்துக் கொள்ள முடியும். இது ஆட்-இன் வீடியோ அக்சல்லரேட்டர் கார்டு ஆகும். இதை கொண்டு 8K தரத்தில் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். 

    மேக் ப்ரோ சாதனத்துடன் ஆப்பிள் அறிமுகம் செய்த ப்ரோ டிஸ்ப்ளே XDR சிறப்பான வடிமைப்பை கொண்டிருக்கிறது. இது மேக் ப்ரோ சாதனத்திற்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோ டிஸ்ப்ளே XDR 32-இன்ச் 6K ரெட்டினா மாணிட்டர் ஆகும்.



    இது அதிகபட்சம் 1600நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1,000,000:1 காண்டிராஸ்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது. இதனை ஆப்பிள் எக்ஸ்டிரீம் டைனமிக் ரேன்ஜ் என அழைக்கிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய மாணிட்டர் 10-பிட் கலர் மற்றும் சூப்பர் வைடு வியூவிங் ஆங்கில்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.
     
    இந்த மாணிட்டரின் விலை 4999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,45,933) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பேனல் கொண்ட ஆன்டி-கிளேர் ஆப்ஷன் விலை 5000 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கழற்றக்கூடிய ப்ரோ ஸ்டாண்டு விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.69,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிகபட்சம் ஆறு 6K ப்ரோ டிஸ்ப்ளே XDR மாணிட்டர்களை இயக்கும் வல்லமை கொண்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர் நிகழ்வினை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது.



    ஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர்கள் நிகழ்வின் கீநோட் உரையை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது. டி.வி. ஒ.எஸ். 13 என அழைக்கப்படும் புதிய இயங்குதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சமாக மல்டி-யூசர் சப்போர்ட் இருக்கிறது. இத்துடன் ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை பரிந்துரை செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொருத்தர் அதிக நேரம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளை பொருத்து புதிய இயங்குதளம் அவர்களுக்கான பரிந்துரையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுதவிர பல்வேறு யூசர் ப்ரோஃபைல்களிடையே மாற்றிக் கொள்வதும் மிக எளிமையாக மாற்றப்படுகிறது. இதற்கென டி.வி. ஒ.எஸ். இயங்குதளத்தில் கண்ட்ரோல் சென்டர் எனும் வசதி வழங்கப்படுகிறது. புதிய டி.வி. ஒ.எஸ். 13 தளத்தில் எக்ஸ் பாக்ஸ் வசதி மற்றும் பிளே ஸ்டேஷன் டூயல்ஷாக் 4 கண்ட்ரோல்களுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் ஆப்பிள் டி.வி.-யிலேயே கேம்களை விளையாட முடியும். தோற்றத்தை பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் பி.பி.சி. நேச்சுரல் ஹிஸ்ட்ரியுடன் இணைந்து புதிதாக ஆழ்கடல் சார்ந்த ஸ்கிரீன்சேவர்களை வழங்குகிறது. 



    புதிய டி.வி. இயங்குதளத்தில் பயனர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென பல்வேறு ப்ரோஃபைல்களை உருவாக்கி பயன்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் ஏற்றபடி தனித்துவம் வாய்ந்த பரிந்துரைகளை ஆப்பிள் வழங்கும். 

    இத்துடன் பாடல்களை கேட்கும் போதே அந்த பாடல்களுக்கான வரிகளை பார்க்கும் வசதி புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் வழங்குகிறது. டி.வி. ஒ.எஸ். 13-இல் பல்வேறு யூசர் ப்ரோஃபைல்கள் மற்ற தளங்களில் இருப்பதை போன்றே இருக்கும். இத்துடன் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் இடையே மாறுவதும் மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.
    ×