என் மலர்tooltip icon

    கணினி

    கூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.



    கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்லைன் அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

    தனியுரிமை ஆடம்பரமாக இருக்கக் கூடாது, அது உலகம் முழுக்க அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு அதிகளவு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.



    இந்நிலையில், “கூகுளின் பரவலான சேவைகளில் சிறப்பான பிரைவசி செட்டிங் மற்றும் கண்ட்ரோல்களை அறிமுகம் செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதனை சரியாக செயல்படுத்தும் நோக்கில் சரியான வகையில் முதலீடு செய்து வருகிறோம். தொடர்ந்து எங்களது சேவைகளில் புதுமை மற்றும் பயனர்களின் ஆன்லைன் அனுபவத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மேம்பட்ட அம்சங்களை வழங்குவோம்,” என கூகுள் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலர் கெய்த் என்ரைட் தெரிவித்தார்.

    “உலகம் முழுக்க இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள் கூகுளின் இலவச மற்றும் கட்டண சேவைகளை பயன்படுத்துவோர் சமளவில் தனியுரிமையை பெற வேண்டும், கூகுள் இதனை சரியாக வழங்கவே முயற்சிக்கிறது,”

    புதிய அம்சங்களில் பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களில் கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது ஒரே க்ளிக் செய்து அவற்றை இயக்கும் வசதி, சர்ச் மற்றும் மேப்ஸ் என பல்வேறு சேவைகளில் இன்காக்னிட்டோ மோட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த அம்சத்தை இனிமேல் இயக்க முடியாது.



    வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் 2.16.60.26 பதிப்பின் புதிய மாற்றங்கள் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் 2.16.60 என அழைக்கப்படுகிறது.

    புதிய ஐ.ஓ.எஸ். பதிப்பில் வாட்ஸ்அப் பயனர்கள் மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாதது குறி்ப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். ஏற்கனவே வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தற்சமயம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் இந்த வசதி நீக்கப்பட்டு இருக்கிறது.



    புதிய மாற்றங்களுக்கு பயனரின் தனியுரிமை தவிர வேறு ஏதும் காரணம் இருப்பதாக தெரியவில்லை. தற்சமயம் வாட்ஸ்அப் க்ரூப்களில் மற்றவர்களின் ப்ரோஃபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர வாட்ஸ்அப் தனது போட்டோ ஆல்பம் தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அதன்படி புதிய தோற்றத்தில் போட்டோ ஆல்பம் அதன் மொத்த டவுன்லோடு அளவுடன் இடம்பெற்றிருக்கும். புதிய அப்டேட்டிற்கு பின் பயனர்கள் தங்களது அக்கவுண்ட்டை அழிக்க முற்படும் போது தங்களின் மொபைல் நம்பரை மாற்ற வாட்ஸ்அப் பரிந்துரைக்கிறது. பெரும்பாலான பயனர்கள் புதிய நம்பர் கிடைத்ததும், பழைய அக்கவுண்ட்டை அழிக்க முற்படுவதால் வாட்ஸ்அப் இவ்வாறு செய்கிறது.

    இதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்கால அப்டேட்களில் இன்டராக்டிவ் பட்டன்களை சேர்க்கவும் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் இந்த அம்சம் அனுப்பப்படும் மீடியா அல்லது குறுந்தகவல்களை சார்ந்து இயங்கும் என தெரிகிறது.

    புகைப்படம் நன்றி: WABetaInfo
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சில மாதங்களுக்கு முன் சோதனை செய்யப்பட்ட அம்சம் தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக மார்ச் மாதத்தில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இருமாதங்கள் சோதனைக்கு பின் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக கேட்க முடியும்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். தற்சமயம் புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே க்ளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். இந்த அம்சம் தவிர புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் CVE-2019-3568 பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.



    சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. வாய்ஸ் கால் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

    இது பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜி.பி.எஸ். லொகேஷன், மின்னஞ்சல், பிரவுசர் ஹிஸ்ட்ரி, மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குவதை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.



    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து சார்பில் நடத்தப்படும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் வலைதளத்தை திறக்கும் போது லோகோவுக்கு அடுத்து நான்கு புள்ளிகள் இடம்பெற்றிருக்கிறது.



    அதனை க்ளிக் செய்ததும் கூகுள் வார்த்தையில் O மற்றும் L எழுத்துக்கள் கிரிக்கெட் பந்து மற்றும் விக்கெட்களாக மாறும் அனிமேஷன் காட்சிகள் தோன்றுகிறது. இத்துடன் டூடுளை க்ளிக் செய்ததும் கூகுள் சர்ச் பக்கம் ஒன்று திறக்கிறது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவுறும் வரை இருக்கும். இன்று துவங்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டாவது போட்டி நாளை மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதுகின்றன. 
    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய பிராசஸருடன் 2019 ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை ஐபாட் ஆகும். 

    2019 ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய ஐபாட் மாடலில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்பட்டுள்ளது. இதே பிராசஸர் ஐபோன் 7 மாடலில் வழங்கப்பட்டது.

    புதிய ஐபாட் டச் மாடலில் பழைய பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதில் முந்தைய மாடலில் இல்லாத பல்வேறு அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் உள்ளிட்டவை முதல்முறையாக ஐபாட் டச் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 



    புதிய பிராசஸர், 256 ஜி.பி. மெமரி தவிர 2019 ஐபாட் மாடலின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 4-இன்ச் டிஸ்ப்ளே, ஹோம் பட்டன், கேமராக்கள் உள்ளிட்டவை முந்தைய மாடல்களில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபாட் மாடலில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய தலைமுறை ஐபாட் டச் மாடலில் கேமிங் அனுபவம் சீராக இருக்கும் என்றும், காட்சிகள் மிகவும் அழகாக தெரியும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவற்றில் ஏ.ஆர். அனுபவங்கள் பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஐபாட் டச் மாடல் ஸ்பேஸ் கிரே, வைட், கோல்டு, புளு, பின்க் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 32 ஜி.பி. மாடல் விலை ரூ.18,900, 128 ஜி.பி. மாடல் ரூ.28,900 என்றும் 256 ஜி.பி. மாடல் விலை ரூ.38,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெறுகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், ஃபேஸ்புக் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் வருடாந்திர விளம்பர கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.



    ட்விட்டரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது.



    இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்தது ஆகும். இது வாட்ஸ்அப் (ஐ.ஜி.) க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மூன்றவாது திட்டத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும். இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் விளம்பரங்கள் தோன்றுவதை போன்று செயல்படும். 

    இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் அதிகளவு ரிச்சர் ஃபார்மேட்களை புகுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்குவது மட்டுமின்றி வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் தளமாக வாட்ஸ்அப் இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் நினைக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் படி பயனர்கள் இனி ஸ்டோரியை இங்கும் ஷேர் செய்ய முடியும் என கூறப்படுகிறது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரியை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்யும் வசதி ஏற்கனவே வழங்கப்படுகிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியிலும் இதே அம்சம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்று இல்லாமல், வாட்ஸ்அப்பில் இதனை பயனர்கள் தானாக ஷேர் செய்ய வேண்டும். இன்ஸ்டாகிராமில் இது தானாக நடைபெறும் வகையில் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் காண்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோட் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியை ஐ.ஓ.எஸ். தளங்களில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.151 பதிப்பில் இதற்கான வசதி சோதனை நடைபெறுகிறது.

    இதில் புதிய கியூ.ஆர். கோட் பட்டன் காணப்படுகிறது. இது வாட்ஸ்அப் செயலியின் ப்ரோஃபைல் பகுதியில் காணப்படுகிறது. கியூ.ஆர். கோட் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் கியூ.ஆர். கோட் உருவாக்கப்பட்டு விடும். இதனை மற்றவர்களுடன் மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும்.



    இந்த அம்சம் மூலம் பயனர்கள் மிக எளிமையாக காண்டாக்ட்களை நேரடியாக செயலியில் இருந்தபடி சேர்க்க முடியும். இது இன்ஸ்டாகிராமின் நேம்டேக் அம்சம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியின் ஸ்னேப்கோட் அம்சங்களை போன்று இயங்குகிறது. கியூ.ஆர். கோட் உறுதி செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் அட்ரஸ் புக் பகுதியில் தேவையான விவரங்களை தானாக பதிவு செய்து கொள்ளும்.

    கியூ.ஆர். கோடை முதல் முறை உருவாக்கும் போது, வாட்ஸ்அப் அதனை ரிவோக் செய்வதற்கான வசதி வழங்கப்படும், இதனை நிறுத்தி கியூ.ஆர். கோடை்களை ரீபிளேஸ் செய்து அவற்றை வேலை செய்ய வைக்கலாம். இந்த அம்சங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால், இவை வாட்ஸ்அப் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: wabetainfo
    போட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏர்டோப்ஸ் 411 வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது.



    போட் லைஃப்ஸ்டைல் நிறுவனம் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை தொடர்ந்து புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ஏர்டோப்ஸ் 411 என அழைக்கப்படுகிறது. முன்னதாக ஏர்டோப்ஸ் சீரிசில் ஏர்டோப்ஸ் 511 என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் புதிய இயர்பட்ஸ் மெல்லிய வடிவமைப்பில், அதிக சவுகரியம் வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏர்டோப்ஸ் 411 மாடலுடன் சார்ஜிங் கேஸ் மற்றும் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் HSP, HFP, A2DP மற்றும் AVRCP போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்படுகிறது. இது 33 மீட்டர் வரை சீராக வேலை செய்யும். 



    இத்துடன் இந்த இயர்போன்கள் 6 எம்.எம். மற்றும் 50 எம்.ஏ.ஹெச். டைனமிக் டிரைவர்களுடன் கிடைக்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி 3.5 மணி நேரங்களுக்கு பிளேடைம் மற்றும் 80 மணி நேர ஸ்டான்ட்பை வழங்கும் என போட் தெரிவித்து இருக்கிறது.

    போட் ஏர்டோப்ஸ் 411 மாடலில் IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இயர்பட்ஸ்-ஐ அழுத்திப்பிடித்து வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை இயக்கலாம். பின் இதை கொண்டே அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும்.

    ஏர்டோப்ஸ் 411-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய 1.5 மணி நேரம் ஆகும். இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் முழுமையாக சார்ஜ் ஆக 1.5 மணி நேரம் ஆகும். இந்தியாவில் போட் ஏர்டோப்ஸ் 411 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
    ஹெச்.பி. நிறுவனம் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.பி. நிறுவனம் பெய்ஜிங் கேமிங் நிகழ்வில் ஒமன் மற்றும் ஹெச்.பி. பெவிலியன் கேமிங் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. இவற்றில் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் மாடலும் அடங்கும். இது லிக்விட் மெட்டல் காம்பவுன்ட் கூல்டு சி.பி.யு. கொண்ட முதல் லேப்டாப் ஆகும். இதன் விற்பனை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்குகிறது.

    ஹெச்.பி. ஒமன் எக்ஸ் 2எஸ் உலகின் முதல் டூயல் ஸ்கிரீன் கேமிங் லேப்டாப் ஆகும். இதில் 15-இன்ச் 1080 பிக்சல் அல்லது 4K டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் இரண்டாவது ஸ்கிரீன் 6-இன்ச் தொடுதிரை வசதி கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 240Hz  ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே இந்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த லேப்டாப் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், NVIDIA GeForce RTX 2080 கிராஃபிக்ஸ், பி.சி.ஐ. எஸ்.எஸ்.டி. மற்றும் இன்டெல் ஆப்டேன் மெமரி மற்றும் எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 3 யு.எஸ்.பி. 3.1 டைப் ஏ போர்ட்கள், ஒரு தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஒரு ஹெச்.டி.எம்.ஐ. 2.0 போர்ட், ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ஒமன் எக்ஸ் 2எஸ் லேப்டாப்பில் ஒமன் டெம்பெஸ்ட் கூலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் மூன்று பக்கங்களில் வென்டிங் மற்றும் 5 வழிகளில் காற்றோட்டம் புகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 வோல்ட் ஃபேன் மாட்யூல் ஒன்றும் 3-ஃபேஸ் மோட்டார் மற்றும் ஃபுளுயிட் டைனமிக் பேரிங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் பயனர்களுக்கு ரியல்-டைம் ஸ்கிரீன் மிரரிங், ஆர்.ஜி.பி. லைட்டிங்கை கஸ்டமைஸ் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஒமன் எக்ஸ் 2எஸ் லேப்டாப் மாடலுடன் ஹெச்.பி. நிறுவனம் ஒமன் 15 மற்றும் ஒமன் 17 லேப்டாப்களை அறிமுகம் செய்தது. இவை முந்தைய மாடல்களை விட 20 மற்றும் 18 சதவிகிதம் வரை மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்களிலும் ஒமன் டெம்பெஸ்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
     
    ஹெச்.பி. நிறுவனம் பெவிலியன் கேமிங் 15 மற்றும் புதிய ஹெச்.பி. பெவிலியன் கேமிங் 17 லேப்டாப்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்களில் 9 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / ஐ7 பிராசஸர், NVIDIA GeForce GTX 1660 டி.ஐ. கிராஃபிக்ஸ் மற்றும் மேக்ஸ் கியூ டிசைன் கொண்டிருக்கிறது.
    சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டினை விற்பனை செய்கிறது.



    ஸ்மார்ட்போனின் மெமரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டை விற்பனை செய்கிறது.

    புதிய மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் சாதனத்தில் அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும். முன்னதாக இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது அமேசான் தளத்தில் 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.31,540) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    சான்டிஸ்க் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டு ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 512 ஜி.பி. எஸ்.டி. கார்டை விட இருமடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது உலகின் முதல் 1 டி.பி. எஸ்.டி. கார்டு ஆகும். 

    தற்சமயம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் வெற்றிகரமான சாதனமாக இருக்கிறது. அந்த வகையில் சியோமியின் புதிய Mi பேண்ட் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய Mi பேண்ட் கலர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய சாதனம் Mi பேண்ட் 4 என அழைக்கப்படலாம் என்றும் இதில் டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி Mi பேண்ட் 4 சாதனத்தில் சியோ ஏ.ஐ. விர்ச்சுவல் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    சியோமி நிறுவனம் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. தாய்வான் நாட்டின் என்.சி.சி. தளத்தில் Mi பேண்ட் 4 சாதனத்தின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் போன்று சியோ ஏ.ஐ. கொண்டு வானிலை, ஸ்மார்ட் சாதனங்களை இயக்குவது மற்றும் மொழி பெயர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.


    புகைப்படம் நன்றி: SlashLeaks

    இத்துடன் புதிய சாதனத்தில் பட்டன் நீக்கப்பட்டு Mi பேண்ட் 4 கேபாசிட்டிவ் கண்ட்ரோல் கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி சியோமி Mi பேண்ட் 4 மாடலில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, இதய துடிப்பு சென்சார், பி.பி.ஜி. மாணிட்டர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    என்.எஃப்.சி. மூலம் மொபைல் பேமண்ட் செய்யும் வசதி கொண்ட மாடலை சியோமி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த சாதனம் சீனாவில் மட்டும் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. புதிய Mi பேண்ட் 4 பற்றி இதுவரை அதிகளவு தகவல்கள் வெளியாகவில்லை.

    புதிய Mi பேண்ட் 4 சியோமியின் ரஃபேல், டாவின்சி மற்றும் பைக்சிஸ் குறியீட்டு பெயர்களை கொண்டு உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2019 நான்காவது காலாண்டில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாக ஐ.டி.சி. தெரிவித்தது.
    2019 ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    2019 முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை ஆறு சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருக்கிறது.

    ஆய்வின் படி மத்திய அரசி்ன் புதிய ஆன்லைன் விதிமுறைகளிலும் ஆன்லைன் சேனல்கள் 19.6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது தெரியவந்து இருக்கிறது. இதில் சியோமி நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 8.1 சதவிகிதமும் சாம்சங் நிறுவனம் 4.8 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இறு நிறுவனங்களை தொடர்ந்து விவோ நிறுவனம் மூன்றாவது இடத்திலும், ஒப்போ நிறுவனம் நான்காவது இடத்தில் இருக்கின்றன. 



    கவர்ச்சிகர சலுகைகள் மற்றும் புதிய அறிமுகம் உள்ளிட்டவற்றின் மூலம் சியோமி, சாம்சங், ரியல்மி மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை 2019 முதல் காலாண்டில் 40.2 சதவிகிதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என ஐ.டி.சி. இந்தியா ஆய்வு மேலாளர் உப்சனா ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையின் மொத்த மொபைல் போன் விற்பனையில் ஃபீச்சர் போன் மாடல்கள் ஐம்பது சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன. 2019 முதல் காலாண்டில் மொத்தமாக 32.3 கோடி மொபைல் போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 42.4 சதவிகிதம் சரிவாகும்.
    ×