என் மலர்
கணினி
சியோமியின் ரெட்மி பிராண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி லேப்டாப் ஒன்றும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், புதிய ரெட்மி லேப்டாப் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது ரெட்மி பிராண்டின் முதல் லேப்டாப் மாடலாக இருக்கும். இதுவரை ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஹூவாய் நிறுவனமும் தனது லேப்டாப்களை துணை பிராண்டான ஹானர் பெயரில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. ஹூவாய் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இதுவரை மேட்புக் சீரிஸ் பெயரிலும் ஹானர் பிராண்டு மேஜிக்புக் சீரிஸ் பெயரில் கணினி சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

கோப்பு படம்
புதிய ரெட்மி லேப்டாப் மாடல்கள் சியோமியின் Mi நோட்புக் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய லேப்டாப்பில் பிரத்யேக கிராஃபிக்ஸ், விலை உயர்ந்த சேசிஸ் உள்ளிட்டவை நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரெட், புளு மற்றும் கார்பன் ஃபைபர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, MIUI 10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் ரெட்மி போனில்: 48 எம்.பி., 8 எம்.பி. மற்றும் 13 எம்.பி. என மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும், முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். #Samsung
சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று 0.8 மைக்ரான் பிக்சல்களை பயன்படுத்துகிறது.
பிக்சல் அளவு ஒன்று தான் என்ற வகையில், புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் அளவில் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாக புகைப்படம் எடுக்கும் போது அதிக வெளிச்சத்தை உள்வாங்கும். இதனால் புகைப்படம் வழக்கமான சென்சார்களை விட அதிக தெளிவாக இருக்கும். இந்த சென்சார் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.
அந்த வகையில் புதிய 64 எம்.பி. சென்சார் சாம்சங்கின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சாரை எதிர்பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் வழக்கமாக தனது கேலக்ஸி நோட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஒவ்வொரு ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

புதிய சாம்சங் கேமரா சென்சார் குறைந்த வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இவ்வாறு வழங்க டெட்ராசெல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரே புகைப்படமாக வழங்கும்.
சாம்சங்கின் 48 எம்.பி. கேமராவும் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இந்த கேமரா சென்சார் 64 எம்.பி. தரத்திலும் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. சாம்சங் புதிய 64 எம்.பி. ISOCELL சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது. இது அதிகபட்சம் 100 டெசிபல் திறன் கொணிடிருப்பதால் நிறங்களை மிக நுட்பமாக பிரதிபலிக்கும்.
புதிய சென்சார் உற்பத்தி பணிகள் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என்றும் இது ஸ்மார்ட்போன்களிலும் அதே காலக்கட்டத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை 2019 ஆண்டு இறுதியில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. #WhatsApp
பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலிக்கான வசதி 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக விண்டோஸ் போன் தளங்களில் வாட்ஸ்அப் சேவை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை விண்டோஸ் 10 தளங்களில் பயன்படுத்த முடியாது.

மேலும் இந்த செயலிக்கான அப்டேட்களும் வழங்கப்படாது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு விண்டோஸ் போன் 8.0 தளத்தில் வாட்ஸ்அப் வசதி நிறுத்தப்பட்டது. தற்சமயம் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் தளங்களின் பட்டியலை அந்நிறுவனம் தனது வலைதளத்தில் மாற்றியிருக்கிறது.
விண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கும் நிலையில், அந்நிறுவனம் சர்வதேச விண்டோஸ் தளத்துக்கான (Universal Windows Platform - UWP) புதிய செயலியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி சமீபத்திய விண்டோஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது IO2019 நிகழ்வில் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டிருக்கிறது. #IO2019
கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் கூகுள் சர்ச், கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் வழங்க இருக்கும் அம்சங்களை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் புதிய அம்சங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவ்வாறு டார்க் தீம், பில்ட்-இன் 5ஜி வசதி, ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோகஸ் மோட் உள்ளிட்டவை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
5ஜி மற்றும் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கான வசதி
ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் மடிக்கக்கூடிய சாதனங்களில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் முதல் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு கியூ இருக்கிறது. கூகுள் நிறுவனம் தனது டெவலப்பர்களுக்கு வேகமான கனெக்டிவிட்டி வழங்கவும், கேமிங் மற்றும் ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) அனுபவத்தை மேம்படுத்தும் டூல்களை வழங்குகிறது.

லைவ் கேப்ஷன் அம்சம்
கூகுள் அறிவித்திருக்கும் அடுத்த அம்சம் காது கேட்பதில் குறைபாடு கொண்டிருப்பவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. லைவ் கேப்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் ஒரு க்ளிக் செய்ததும், போனில் இயங்கும் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும். குரல் ஒலிக்கத் துவங்கியதும் கேப்ஷன்கள் தானாக திரையில் தோன்றும். இந்த அம்சம் வைபை அல்லது மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றில் இயங்கும்.
நோட்டிஃபிகேஷன்களுக்கு ஸ்மார்ட் ரிப்ளை
கூகுள் தனது புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய அம்சம் அனைத்து மெசேஜிங் செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷன்களுக்கு ரிப்ளை அனுப்ப பரிந்துரைக்கும்.

பிரத்யேக பிரைவசி பகுதி
ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் கூகுள் பிரத்யேக ‘பிரைவசி செக்ஷன்’ ஒன்றை செட்டிங்ஸ்-இல் கொண்டு வருகிறது. இது ஒற்றை இடத்தில் மிகமுக்கிய கண்ட்ரோல்களை இயக்க வழி செய்கிறது. லொகேஷன் டேட்டாவை இயக்க புதிதாக லொகேஷன் அம்சம் சேர்க்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எந்தெந்த செயலிகளுக்கு லொகேஷன் விவரங்களை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.
ஃபோகஸ் மோட்
மொபைல் போனின் பயன்பாட்டை பயனர்கள் சிறப்பாக இயக்க ஏதுவாக கூகுள் ஃபோகஸ் மோட் அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் செயலிகளை தேர்வு செய்து அவற்றை சைலண்ட் மோடில் வைக்க முடியும். ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யாமலேயே செக்யூரிட்டி அப்டேட்களை பெறலாம்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பில் இன்று முதல் 13 பிராண்டுகளை சேர்ந்த சுமார் 21 சாதனங்களில் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple
ஆப்பிள் நிறுவனம் புதிய செயலிகள், அம்சங்கள் மற்றும் டெவலப்மென்ட் டூல்களை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மென்பொருள் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பினை வலிமைப்படுத்த இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் மாதம் 3 ஆம் தேதி துவங்குகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டி.வி. உள்ளிட்டவற்றை இயக்கும் இயங்குதளங்களை அப்டேட் செய்ய இருக்கிறது. இவற்றில் ஐபோன் செயலிகான மேப்ஸ், ரிமைண்டர்ஸ், மெசேஜ் போன்றவற்றை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்த இருக்கிறது.

இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர உடல்நலம் சார்ந்து இயங்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அப்டேட்களின் மூலம் பயனர்கள் ஆப்பிள் மியூசிக், விரைவில் வெளியாக இருக்கும் டி.வி. பிளஸ் வீடியோ ஸ்டிரீமிங் சேவை உள்ளிட்ட புதிய சேவைகளை இயக்க முடியும் என தெரிகிறது.
2007 இல் புதிய ஐபோன் அறிமுகம் செய்தது முதல் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் இயங்குதளங்களை ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவன சேவைகள் எப்போதும் வித்தியாசமாகவும், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் அளவு சிறப்பானதாகவும் இருந்து வருகிறது.
ஆப்பிள் உருவாக்கும் மென்பொருள்கள் அந்நிறுவன ஹார்டுவேருடன் சிறப்பாக இயங்குகிறது. புதிய அப்டேட்களின் மூலம் பயனர்கள் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் வருவாய் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பேமண்ட்களுக்கென ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook
ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கொண்டு ஃபேஸ்புக்கில் க்ரிப்டோகரென்சி சார்ந்த பணப்பரிமாற்றங்களை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில், சொந்தமாக பிட்காயின் உருவாக்குவதற்கென ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரிப்டோகரென்சி சார்ந்த பேமண்ட் முறையை கொண்டு பிட்காயினுக்கு இணையான டிஜிட்டல் காயின்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஃபேஸ்புக் தன்பங்கிற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.
மீண்டும் பிளாக்செயின் ஆத்தின்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை. எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இயக்குவதற்கான வசதியை வழங்க முடியும் என சூக்கர்பர்க் தெரிவித்தார்.
பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு டேட்டாவை இயக்க அனுமதியளிக்கும் போது பிளாக்செயின் அவர்களுக்கு அதிகளவு சுதந்திரத்தை வழங்கும். ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்பட்ட பிளாக்செயின் பிரிவின் பொறியியல் பிரிவுக்கான தலைவராக எவான் செங் நியமிக்கப்பட்டார்.
ஹூவாய் நிறுவனம் 8K ரெசல்யூஷனில் உலகின் முதல் 5ஜி டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Huawei
ஹூவாய் நிறுவனம் உலகின் முதல் 5ஜி டி.வி.யை இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொலைகாட்சியில் உயர் ரக 8K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் இது பிரீமியம் சாதனங்கள் பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஹூவாய் தனது 8K டி.வி.யை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யலாம் என்றும் இதில் 5ஜி மாட்யூல் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதனை ஹூவாய் சாத்தியப்படுத்தும் பட்சத்தில் இது உலகின் முதல் 5ஜி டி.வி.யாக இருக்கும். பின் இந்த டி.வி.யில் நேரடியாக அளவில் மிகப்பெரிய தரவுகளை டவுன்லோடு செய்யலாம்.
கணினி சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டியாக ஹூவாய் விளங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் கணினி சந்தையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்க ஹூவாய் முயற்சிக்கிறது. ஹூவாய் நிறுவனம் தற்சமயம் டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

2019 ஆண்டின் முதல் காலாண்டில் ஹூவாய் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உயர்-ரக மின்சாதனங்களில் 8K ரெசல்யூஷன் மிகவும் மேம்பட்ட டி.வி. ஸ்கிரீனாக இருக்கும். இது வழக்கமான ஃபுல் ஹெச்.டி. டி.வி.க்களில் இருப்பதை விட 16 மடங்கு அதிக பிக்சல்களை கொண்டிருக்கும்.
இது ஸ்மார்ட் டி.வி. என்பதால் இதில் வைபை வசதி வழங்கப்படும். 5ஜி வசதி கொண்டிருக்கும் போது இதில் ஃபைபர் ஆப்டிக்ஸ், டி.டி.ஹெச். அல்லது வழக்கமான கேபிள் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இது வீட்டில் இருக்கும் மற்ற மின்சாதனங்களுக்கு ரவுட்டர் ஹப் போன்று செயல்படும்.
தற்சமயம் சாம்சங் நிறுவனம் உலகின் மிகப்பெரும் டி.வி. உற்பத்தியாளராக இருக்கிறது. சமீபத்தில் சாம்சங் தனது சொந்த 8K டி.வி.யை அறிமுகம் செய்தது. எனினும், இதில் 5ஜி வசதி வழங்கப்படவில்லை. சாம்சங் நிறுவனத்தின் 8K டி.வி. விலை 4999 டாலர்கள் (ரூ.3,46,268) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவன செயலி மற்றும் இதர சேவைகள் சார்ந்து புதிய அறிவிப்புகள் வெளியானது. #Facebook
ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்8 2019 நிகழ்வின் முதல் நாளில் அந்நிறுவனம் புதிய அம்சங்கள் மற்றும் அந்நிறுவன சமூக வலைதள சேவைகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் அந்நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் புதிய மாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் சமூக வலைதளங்களில் தனியுரிமை சார்ந்து பல்வேறு வசதிகளை வழங்குவது பற்றியும் எஃப்8 2019 துவக்க நிகழ்வில் விவரிக்கப்பட்டது. எஃப்8 2019 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மெசஞ்சர்:
மெசஞ்சர் செயலியின் அடித்தளத்தை மாற்றியமைத்திருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இது முந்தைய பதிப்பை விட மெமரி குறைவானதாகும். புதிய அப்டேட் மூலம் மெசஞ்சரில் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டோரிஸ் மற்றும் மெசேஞ்களை பயன்படுத்த தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மெசஞ்சர் டெஸ்க்டாப் சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெசஞ்சர் செயலி உலகம் முழுக்க விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

ஃபேஸ்புக்:
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக எஃப்.பி.5 (FB5) அறிவித்திருக்கிறது. இது ஃபேஸ்புக்கில் புதிய வடிவமைப்பை வழங்குகிறது. இது முந்தைய பதிப்புகளை விட எளிமையாகவும், அதிவேகமாகவும் இருக்கும். ஃபேஸ்புக் செயலி மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளில் புதிய மாற்றங்களுக்கான அப்டேட் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. புதிய வடிவமைப்பு மட்டுமின்றி பல்வேறு புதிய வசிதகளை சேர்க்க இருக்கிறது.

வாட்ஸ்அப்:
வாட்ஸ்அப் செயலியில் பிஸ்னஸ் கேட்டலாக் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் செயலியினுள் பிஸ்னஸ் கேட்டலாக் பார்க்க முடியும். இத்துடன் ஃபேஸ்புக்கின் போர்டல் சேவையில் வாட்ஸ்அப் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்ட அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஆகுலஸ் குவெஸ்ட் மற்றும் ஆகுலஸ் ரிஃப்ட் எஸ்:
ஆகுலஸ் குவெஸ்ட் வி.ஆர். ஹெட்செட் மற்றும் ஆகுலஸ் ரிஃப்ஸ் எஸ் வி.ஆர். ஹெட்செட் சாதனங்கள் மே 21 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இத்துடன் வியாபாரங்களுக்கான புதிய ஆகுலஸ் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை கொண்டாடும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பயனர்கள் அவரவர் விரும்பும் கிரிக்கெட் ப்ரியர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

வாட்ஸ்அப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இவற்றை பயனர்கள் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த பேக்களில் கிரிக்கெட் சார்ந்த பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருக்கும். புதிய ஸ்டிக்கர்கள் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவை வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.115 பதிப்பில் பெறலாம்.
ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வரும் நாட்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. கிரிக்கெட் ஸ்டிக்கர் பேக் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் டவுன்லோடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp
ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது. விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பயனர்கள் அவரவர் விரும்பும் கிரிக்கெட் ப்ரியர்களுக்கு அனுப்பி மகிழலாம்.
வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கொண்டு பயனர்கள் தங்களது கருத்துக்களை புது வழிகளில் வெளிப்படுத்த முடியும். வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை டவுன்லோடு செய்தபின் பயனர்கள் அவற்றை வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு அனுப்ப முடியும்.

ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வரும் நாட்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. கிரிக்கெட் ஸ்டிக்கர் பேக் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் டவுன்லோடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஜெப் ஸ்பேஸ் என்ற பெயரில் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. #Zebronics
ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட், இந்தியாவில் புதிதாக ஜெப்-ஸ்பேஸ் கார் என்ற பெயரில் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சலிப்பில்லாத நீண்டநேர இசை அனுபவத்தை பெற்றிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு மடிக்கணினியில் பிடித்த நிகழ்ச்சியை நீண்டநேரம் கண்டுகளித்திடவும் கூடுதலாக விளக்குகள் பொருத்தப்பட்டும் உள்ளது.
இந்த பூம்பாக்ஸ் வடிவமைப்பானது பழைய நினைவுகளை தூண்டுவதோடு அல்லாமல் அதன் பிரத்யேக வடிவமைப்பு இடப்பற்றாக்குறையில் இருந்து விடுதலையளிக்கிறது. மிக குறைந்த இடத்தையே மட்டுமே எடுத்துக்கொண்டு வயர்களில்லாத புதிய அனுபவத்தை இது தருகிறது.
2.1 ஸ்பீக்கர் வடிவமைப்புகளிலேயே ஒரு புதிய ரகமாக ஜெப்-ஸ்பேஸ் கார் விளங்குகிறது. மிகச்சிறிய இடத்தில் கனகச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு சிறிய ரக ஸ்பீக்கர்கள் உங்களுக்கு 2.1 ஸ்பீக்கர்களுக்கு இணையான அனுபவத்தை வழங்குகிறது.

இசையின் பாஸ் அனுபவத்தை இதற்கு முன் எப்போதுமில்லாத வகையில் ஜெப்-ஸ்பேஸ் கார் ஸ்பீக்கர்கள் கொடுப்பதோடு மிக திறம்வாய்ந்த 10.12 செமி அளவேயுள்ள குறைந்த ஃப்ரீக்குவன்சியை கொடுத்து, டூயல் செமி பாஸ் மற்றும் ஒளியதிர்வை தருகிறது.
பூம்பாக்ஸ் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீனமும் வருங்கால டிசைனும் உடைய இந்த ஸ்பீக்கர்கள், முன்புறத்தில் LED விளக்குகளுடனும் LED திரையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கரின் தலைப்புறத்தில் கன்ட்ரோல் மற்றும் ஒலி/ஒளி பட்டன்களுடனும் உள்ளது.
இந்த ஸ்பீக்கர்களை தங்களது ப்ளூடூத் அல்லது USB ஆகியவற்றுடன் வயர்கள் இணைக்கப்பெறாமலே கனெக்ஷன் கொடுத்துக்கொள்ள இயலும். பிரத்யேக AUX துணையுடன் எளிதாக துரிதமாக எஃப்.எம். ரேடியோ பன்பலையையும் கேட்டுக்கொள்ள இயலும்.
இதனை அறிமுகப்படுத்திய திரு.பிரதீப் தோஷி, இதுபற்றி கூறுகையில் "இந்த பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். ஜெப்-ஸ்பேஸ் கார் 2.1 வயர்களில்லாத மிக எளிதாக இடமாற்றக்கூடிய வகையிலும் குறைந்த இடத்தில் இருந்து மிக வலுவான சத்தத்தை எழுப்பக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஒரு பிரிவை கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் சிப் வியாபாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாகவும், இதுபற்றி இரு நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஐபோன்களுக்கான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இருநிறுவனங்களிடையே கடந்த ஆண்டு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தற்சமயம் இது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. இன்டெல் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இதனை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்திருந்தது. தற்சமயம் இன்டெல் நிறுவனம் வியாபாரத்தை விற்பனை செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளை கண்டறிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே சமீபத்தில் கையெழுத்தாகி இருக்கும் சுவாரஸ்ய சமாதான ஒப்பந்தம் காரணமாக இன்டெல் நிறுவனம் மொபைல் 5ஜி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. இரு நிறுவனங்களின் அறிவிப்பு காரணமாக இந்த தொழில்நுட்பத்தை விநியோகம் செய்து லாபம் ஈட்டுவது தற்சமயம் சரியாக இருக்காது என இன்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஏப்ரல் 16 ஆம் தேதி இன்டெல் நிறுவனம் 5ஜி மொபைல் மோடெம் தொழில்நுட்ப வியாபாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. முன்னதாக குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியானது.
இதுதவிர இன்டெல் நிறுவனம் ஐபோன்களுக்கென சிப்செட்களை உருவாக்கி வந்தது. இன்டெல் சிப்செட் கொண்ட ஐபோன்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் விவரங்களை கையாள்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. #Facebook
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கனடா நாட்டு விதிகளை மீறியதாக சட்டவிரோத நடவடிக்கைகளை கண்கானிக்கும் தனியுரிமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கனடா நாட்டு தனியுரிமை ஆணையர் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான தனியுரிமை ஆணையர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதற்கு பயனரிடம் இருந்து அனுமதி பெறவில்லை. பயனர் விவரங்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விவரங்களை கட்டுக்குள் வைப்பதற்கு எவ்வித பொறுப்பையும் ஏற்கவில்லை. என கூறப்பட்டுள்ளது.

"ஃபேஸ்புக் கையாளும் அதிகப்படியான பயனர் விவரங்களை பாதுகாப்பதில் அந்நிறுவனம் கவனம் செலுத்தாது தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக்கின் தனியுரிமை கட்டமைப்பு காலியாகவே இருக்கிறது. அதன் விதிகள் தனியுரிமை பாதுகாப்பிற்கு அர்த்தமற்றதாக மாற்றுகிறது." என கனடாவுக்கான தனியுரிமை ஆணையர் டேனியல் தெரியன் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை நிராகரித்து விட்டதாகவும், கனடா நாட்டு விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க தனக்கு அதிகாரம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இதுபற்றி ஃபேஸ்புக் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.






