search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்
    X

    64 எம்.பி. கேமரா சென்சார் அறிமுகம் செய்த சாம்சங்

    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று 0.8 மைக்ரான் பிக்சல்களை பயன்படுத்துகிறது. 

    பிக்சல் அளவு ஒன்று தான் என்ற வகையில், புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் அளவில் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாக புகைப்படம் எடுக்கும் போது அதிக வெளிச்சத்தை உள்வாங்கும். இதனால் புகைப்படம் வழக்கமான சென்சார்களை விட அதிக தெளிவாக இருக்கும். இந்த சென்சார் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    அந்த வகையில் புதிய 64 எம்.பி. சென்சார் சாம்சங்கின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சாரை எதிர்பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் வழக்கமாக தனது கேலக்ஸி நோட் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை ஒவ்வொரு ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.



    புதிய சாம்சங் கேமரா சென்சார் குறைந்த வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இவ்வாறு வழங்க டெட்ராசெல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரே புகைப்படமாக வழங்கும்.

    சாம்சங்கின் 48 எம்.பி. கேமராவும் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இந்த கேமரா சென்சார் 64 எம்.பி. தரத்திலும் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. சாம்சங் புதிய 64 எம்.பி. ISOCELL சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது. இது அதிகபட்சம் 100 டெசிபல் திறன் கொணிடிருப்பதால் நிறங்களை மிக நுட்பமாக பிரதிபலிக்கும்.

    புதிய சென்சார் உற்பத்தி பணிகள் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என்றும் இது ஸ்மார்ட்போன்களிலும் அதே காலக்கட்டத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×