search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் புதிய செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்
    X

    விரைவில் புதிய செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் புதிதாக செயலிகள், மென்பொருள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதிய செயலிகள், அம்சங்கள் மற்றும் டெவலப்மென்ட் டூல்களை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மென்பொருள் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பினை வலிமைப்படுத்த இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் மாதம் 3 ஆம் தேதி துவங்குகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டி.வி. உள்ளிட்டவற்றை இயக்கும் இயங்குதளங்களை அப்டேட் செய்ய இருக்கிறது. இவற்றில் ஐபோன் செயலிகான மேப்ஸ், ரிமைண்டர்ஸ், மெசேஜ் போன்றவற்றை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்த இருக்கிறது.



    இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர உடல்நலம் சார்ந்து இயங்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அப்டேட்களின் மூலம் பயனர்கள் ஆப்பிள் மியூசிக், விரைவில் வெளியாக இருக்கும் டி.வி. பிளஸ் வீடியோ ஸ்டிரீமிங் சேவை உள்ளிட்ட புதிய சேவைகளை இயக்க முடியும் என தெரிகிறது.

    2007 இல் புதிய ஐபோன் அறிமுகம் செய்தது முதல் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் இயங்குதளங்களை ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவன சேவைகள் எப்போதும் வித்தியாசமாகவும், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் அளவு சிறப்பானதாகவும் இருந்து வருகிறது.

    ஆப்பிள் உருவாக்கும் மென்பொருள்கள் அந்நிறுவன ஹார்டுவேருடன் சிறப்பாக இயங்குகிறது. புதிய அப்டேட்களின் மூலம் பயனர்கள் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் வருவாய் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×