search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வளர்ச்சி பாதையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை - புதிய தகவல் வெளியிட்ட ஆய்வு நிறுவனம்
    X

    வளர்ச்சி பாதையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை - புதிய தகவல் வெளியிட்ட ஆய்வு நிறுவனம்

    2019 ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    2019 முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை ஆறு சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருக்கிறது.

    ஆய்வின் படி மத்திய அரசி்ன் புதிய ஆன்லைன் விதிமுறைகளிலும் ஆன்லைன் சேனல்கள் 19.6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது தெரியவந்து இருக்கிறது. இதில் சியோமி நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 8.1 சதவிகிதமும் சாம்சங் நிறுவனம் 4.8 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இறு நிறுவனங்களை தொடர்ந்து விவோ நிறுவனம் மூன்றாவது இடத்திலும், ஒப்போ நிறுவனம் நான்காவது இடத்தில் இருக்கின்றன. 



    கவர்ச்சிகர சலுகைகள் மற்றும் புதிய அறிமுகம் உள்ளிட்டவற்றின் மூலம் சியோமி, சாம்சங், ரியல்மி மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை 2019 முதல் காலாண்டில் 40.2 சதவிகிதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என ஐ.டி.சி. இந்தியா ஆய்வு மேலாளர் உப்சனா ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையின் மொத்த மொபைல் போன் விற்பனையில் ஃபீச்சர் போன் மாடல்கள் ஐம்பது சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன. 2019 முதல் காலாண்டில் மொத்தமாக 32.3 கோடி மொபைல் போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 42.4 சதவிகிதம் சரிவாகும்.
    Next Story
    ×