search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்
    X

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்

    சியோமியின் புதிய Mi பேண்ட் 4 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி நிறுவனம் தனது Mi பேண்ட் 4 சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய Mi பேண்ட் சாதனத்தில் 0.95 இன்ச் AMOLED கலர் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ் கொண்டிருக்கும் புதிய Mi பேண்ட் 4 மாடலுடன் 77 வகையான வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன.

    மேலும் இந்த பேண்ட் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டிருக்கிறது. இதில் 6-ஆக்சிஸ் ஹை-பிரெசிஷன் சென்சார் மற்றும் 6 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 மாடல் அவெஞ்சர்ஸ் எடிஷனும் கிடைக்கிறது. இத்துடன் கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் மற்றும் ஐயன் மேன் ரிஸ்ட் பேண்ட்களும் கிடைக்கின்றன.



    சியோமி Mi பேண்ட் 4 சிறப்பம்சங்கள்:

    - 0.95 இன்ச் 120x240 பிக்சல் AMOLED 24பிட் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ்
    - நேரம், நடக்கும் தூரம், இதய துடிப்பு, செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கும்
    - வாய்ஸ் அசிஸடண்ட் சேவைக்கு மைக்ரோபோன்
    - பி.பி.ஜி. (Photoplethysmography) / இதய துடிப்பு சென்சார்
    - உடல்நலனை கண்காணிக்கும், உறக்கத்தை டிராக் செய்யும்
    - டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் + டிரை-ஆக்சிஸ் கைரோ, கேபாசிட்டிவ் வியர் மாணிட்டரிங் சென்சார்
    - 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - ப்ளூடூத் 5.0 LE, என்.எஃப்.சி.
    - 135 எம்.ஏ.ஹெச். / 125 எம்.ஏ.ஹெச். (என்.எஃப்.சி.) பேட்டரி

    Mi பேண்ட் 4 பிளாக், பரிவுன், புளு, ஆரஞ்சு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 என்.எஃப்.சி. எடிஷன் விலை 229 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேண்ட் 4 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை 349 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.3500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×