search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். 13
    X

    அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். 13

    ஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர் நிகழ்வினை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது.



    ஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர்கள் நிகழ்வின் கீநோட் உரையை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது. டி.வி. ஒ.எஸ். 13 என அழைக்கப்படும் புதிய இயங்குதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சமாக மல்டி-யூசர் சப்போர்ட் இருக்கிறது. இத்துடன் ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை பரிந்துரை செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொருத்தர் அதிக நேரம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளை பொருத்து புதிய இயங்குதளம் அவர்களுக்கான பரிந்துரையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுதவிர பல்வேறு யூசர் ப்ரோஃபைல்களிடையே மாற்றிக் கொள்வதும் மிக எளிமையாக மாற்றப்படுகிறது. இதற்கென டி.வி. ஒ.எஸ். இயங்குதளத்தில் கண்ட்ரோல் சென்டர் எனும் வசதி வழங்கப்படுகிறது. புதிய டி.வி. ஒ.எஸ். 13 தளத்தில் எக்ஸ் பாக்ஸ் வசதி மற்றும் பிளே ஸ்டேஷன் டூயல்ஷாக் 4 கண்ட்ரோல்களுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் ஆப்பிள் டி.வி.-யிலேயே கேம்களை விளையாட முடியும். தோற்றத்தை பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் பி.பி.சி. நேச்சுரல் ஹிஸ்ட்ரியுடன் இணைந்து புதிதாக ஆழ்கடல் சார்ந்த ஸ்கிரீன்சேவர்களை வழங்குகிறது. 



    புதிய டி.வி. இயங்குதளத்தில் பயனர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென பல்வேறு ப்ரோஃபைல்களை உருவாக்கி பயன்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் ஏற்றபடி தனித்துவம் வாய்ந்த பரிந்துரைகளை ஆப்பிள் வழங்கும். 

    இத்துடன் பாடல்களை கேட்கும் போதே அந்த பாடல்களுக்கான வரிகளை பார்க்கும் வசதி புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் வழங்குகிறது. டி.வி. ஒ.எஸ். 13-இல் பல்வேறு யூசர் ப்ரோஃபைல்கள் மற்ற தளங்களில் இருப்பதை போன்றே இருக்கும். இத்துடன் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் இடையே மாறுவதும் மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×