search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

    நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.



    நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல் விலை ரூ.16,999 முதல் துவங்குகிறது. இந்த விலையில் 40 இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி.யில் கிட்டத்தட்ட 500-க்கும் அதிக செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. 

    இந்த ஸ்மார்ட் டி.வி. டிஸ்ப்ளே 1920x1080 பிக்சல் ரெசல்யூஷனில் 16 மில்லியன் நிறங்களுடன் வருகிறது. இத்துடன் இதில் 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் மிராகாஸ்ட் வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் மற்றும் இஷேர் ஆப் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய டி.வி.யில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சென்சி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது டி.வி. கைடு செயலியை உருவாக்குகிறது. இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்களும், இரண்டு யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட்களும், இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

    ஈத்தர்நெட் போர்ட், வைபை கனெக்டிவிட்டி, பவர் சேவிங் மோட், ஸ்மார்ட் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு பிர்தேயக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. நோபிள் ஸ்கியோடோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக மையங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

    முன்னதாக நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் 39-இன்ச் ஸ்மார்ட் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி.யை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் டி.வி. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த டி.வி. 4K  UHD தரவுகளை சப்போர்ட் செய்யும் என இந்நிறுவனம் தெரிவித்தது. இத்துடன் குவாட் கோர் சி.பி.யு., 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×