search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    லிப்ரா
    X
    லிப்ரா

    அமெரிக்கா அனுமதியின்றி லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டமில்லை - ஃபேஸ்புக் அறிவிப்பு

    அமெரிக்க அரசு அனுமதியளிக்கும் வரை லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது லிப்ரா க்ரிப்டோகரென்சிக்கு முறையான அனுமதி வழங்கும்வரை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.

    லிப்ரா க்ரிப்டோகரென்சி வழக்கமான ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்குமாறு செயல்படாது என ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் தெரிவித்தார்.

    ஒழுங்குமுறை ஆணையங்களின் கவலைகளுக்கு பதில் அளித்து, முறையான அனுமதி பெறும் வரை லிப்ரா டிஜிட்டல் கரென்சியை ஃபேஸ்புக் வெளியிடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

    க்ரிப்டோகரென்சி - கோப்புப்படம்

    அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான நுச்சின், 'அமெரிக்க நிதி முறையை இயக்கும் முன் அவர்கள் மிகவும் கடுமையான முறைகளை பின்பற்றுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற கரென்சிக்கள் பெரும்பாலும் சட்ட விதிகளுக்கு எதிராகவே செயல்படுகின்றன,'  என அவர் தெரிவித்தார்.

    லிப்ரா திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பலதரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
    Next Story
    ×