search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி ஸ்மார்ட் டி.வி.
    X
    சியோமி ஸ்மார்ட் டி.வி.

    புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட் டி.வி.

    சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வசதி வழங்கப்படுகிறது.



    சியோமி நிறுவன ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சியோமியின் Mi டி.வி. 4ஏ மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின் இவற்றுக்கு மாற்றாக Mi டி.வி. 4ஏ ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், பழைய மாடல்களுக்கு சியோமி தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் Mi டி.வி. 4ஏ மாடல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. இதற்கான முன்னோட்ட திட்டத்தை சியோமி தற்சமயம் துவங்கியுள்ளது. இதற்கென 50 பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய இயங்குதளத்தை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    சியோமி Mi டி.வி. 4ஏ

    புதிய இயங்குதளத்துக்கான முன்னோட்ட திட்டம் அந்நிறுவனத்தின் கம்யூனிட்டி ஃபோரம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பயனர்கள் சியோமி Mi டி.வி. 4ஏ 32-இன்ச் அல்லது 43 இன்ச் பயன்படுத்த வேண்டும். பின் அவர்கள் ஃபோரம் போஸ்ட் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.

    முதற்கட்ட சோதனைக்கு பின் இயங்குதளத்துக்கான அப்டேட் அனைவருக்கும் வழங்கப்படும். சியோமி வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் Mi டி.வி. 4ஏ மாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய மென்பொருள் அப்டேட் மூலம் Mi டி.வி. 4ஏ மாடலில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பெறும்.

    புதிய இயங்குதளம் ஸ்மார்ட் டி.வி.யில் கூகுள் பிளே ஸ்டோர் ஆப் டவுன்லோடுகள், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், கூகுள் பிளே திரைப்படங்கள், கூகுள் பிளே மியூசிக் மற்றும் மேம்பட்ட யூடியூப் செயலிக்கான வசதி போன்ற பலன்களை பெற முடியும்.
    Next Story
    ×