search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டிக்டாக்
    X
    டிக்டாக்

    இன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்

    பிரபல வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலியான டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.



    ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள அம்சங்களை தழுவிய புதிய அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை ரிவர்ஸ்-என்ஜினியரிங் வல்லுநரான ஜேன் மன்ச்சுன் வொங் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

    அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இருக்கும் க்ரிட்-ஸ்டைல் லே-அவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்கள் டிக்டாக் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டிக்டாக் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த செயலியில் புதிய அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிக்டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். எனினும், அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை அவர் வழங்கவில்லை.



    முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ட்விட்டரின் வீடியோ பகிர்ந்து கொள்ளும் சேவையான வைன் பொது மேலாளர் ஜேசன் டொஃப் ஃபேஸ்புக்கின் பிராடக்ட் பிரிவு நிர்வாக இயக்குனராக பணியில் சேர்ந்தார். இவர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பிராடக்ட் ஆய்வு குழுவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.

    இவர் பணியாற்றி வரும் திட்டங்கள் பற்றி எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும், திட்டத்தில் பணியாற்ற யு.எக்ஸ். வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்களை பணியமர்த்த இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

    பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பைட்டேன்ஸ் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் டிக்டாக் செயலி இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டக்கில் 28 சதவிகித இன்ஸ்டால்களை பெற்றது. தற்சமயம் உலகம் முழுக்க 70 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் 20 கோடி பேர் இந்திய பயனர்கள் ஆவர்.
    Next Story
    ×