என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர்.
    X
    அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர்.

    12 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

    அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஜி.டி.ஆர். ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.



    ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 47.2 எம்.எம். மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.2 இன்ச் AMOLED  டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

    அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர்.

    அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். சிறப்பம்சங்கள்:

    - 1.2-இன்ச் 390x390 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, AF கோட்டிங்
    - ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐ.ஒ.எஸ். 10.0 தளங்களுக்கான சப்போர்ட்
    - பயோ டிராக்கர் PPG பயோ-டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார், 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - ஏர் பிரெஷர் சென்சார், கேபாசிட்டிவ் சென்சார்
    - ஆம்பியன்ட் லைட் பிரைட்னஸ் சென்சார்
    - ப்ளூடூத் 5.0
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - 195 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடல் ஸ்டாரி பிளாக், செர்ரி பிலாசம் பின்க், மூன்லைட் வைட் மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×