என் மலர்tooltip icon

    கணினி

    கூகுள் நிறுவனம் இந்தியாவில் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கூகுள் நிறுவனம் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    நெஸ்ட் மினி ஸ்பீக்கர் கூகுள் ஹோம் மினி மாடலை விட இருமடங்கு சக்திவாய்ந்தது. இதன் ஹார்டுவேரை சிறப்பான வகையில் பயன்படுத்த ஏதுவாக ஆடியோ டியூனிங் மென்பொருளை கூகுள் பொறியாளர்கள் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கூகுள் நெஸ்ட் மினி

    புதிய நெஸ்ட் மினி ஸ்பீக்கர் அதிக சத்தமுள்ள பகுதிகளிலும் சிறப்பாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற சத்தத்தை அசிஸ்டண்ட் தானாக கண்டறிந்து அதற்கேற்ற செட்டிங்களை இயக்கும். இதில் உள்ள பிராக்சிமிட்டி வாடிக்கையாளர் கைகளை அருகில் கொண்டு செல்லும் போது தானாக எல்.இ.டி.யை இயக்க வழி செய்கிறது.

    இதை கொண்டு ஆடியோவை எவ்வாறு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அறிந்து கொள்ள முடியும். கூகுள் ஹோம், ஹோம் மினி போன்றே நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. நெஸ்ட் மினியை செட்டப் செய்து, “Hey Google, what can you do?” என கூறி பயன்படுத்த துவங்கலாம்.

    இந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாக் மற்றும் சார்கோல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஃபாஸில் நிறுவனத்தின் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் கூகுள் நிறுவனத்தின் வியர் ஒ.எஸ். தளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ஃபாஸில் நிறுவனம் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கூகுளின் வியர் ஒ.எஸ். சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இதய துடிப்பு சென்சார், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், அலிமீட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சீரிஸ் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அம்சங்களை வழங்கும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில்வாடிக்கையாளர் கருத்துக்களின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

    ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்

    ஃபாஸில் ஜென் 5 சிறப்பம்சங்கள்:

    - 1.3 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் வியர் 3100 
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - கூகுளின் வியர் ஒ.எஸ்.
    - கிரவுன் மற்றும் இரண்டு புஷ் பட்டன்கள்
    - நான்கு பேட்டரி மோட்கள்

    ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்களில் பல்வேறு செயலிகள் ஆட்டோ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மியூசிக் ஸ்டிரீமிங் சேவை, ஸ்பாட்டிஃபை, பீஸ் ஆஃப் மைண்ட், சேஃப்டி ஆப், நூன்லைட் மற்றும் நைக் ரன் கிளப் போன்ற செயலிகள் முதன்மையாக இருக்கின்றன.

    ஸ்விம் ப்ரூஃப் ஸ்பீக்கர் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இந்தியாவில் ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ. 22,995 முதல் துவங்குகிறது.
    சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 3ஐ ஃபிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பேண்ட் 3ஐ ஃபிட்னஸ் பேணட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய Mi பேண்ட் மாடலில் 0.78 இன்ச் OLED தொடுதிரை டிஸ்ப்ளே, 5 ஏ.டி.எம். வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கிறது. இதனை அணிந்து கொண்டு தண்ணீரில் 50 மீட்டர் ஆழத்தில் பயன்படுத்த முடியும்.

    இதய துடிப்பு சென்சார் இல்லாத Mi பேண்ட் 3ஐ மாடலில் வானிலை விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இத்துடன் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை நிராகரிக்க பட்டனை அழுத்திப்பிடித்தால் போதும். 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட Mi பேண்ட் 3ஐ 20 நாட்கள் ஸ்டான்ட்பை வழங்குகிறது.

    சியோமி Mi பேண்ட் 3ஐ

    சியோமி Mi பேண்ட் 3ஐ சிறப்பம்சங்கள்

    – 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் தொடுதிரை டிஸ்ப்ளே
    – நோட்டிஃபிகேஷன்களை பார்க்கும் வசதி
    – உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
    – 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டணட்
    – 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    – ப்ளூடூத் 4.2 எல்.இ.
    – ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணையந்து இயங்கும்
    – 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி Mi பேண்ட் 3ஐ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்திய சந்தையில் ஹைஃபியூச்சர் எனும் ஆடியோ பிராண்டு புதிய ஃபியூச்சர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.



    ஆடியோ சாதனங்களை விற்பனை செய்யும் ஹைஃபியூச்சர் (HiFuture) பிராண்டு தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    ஹைஃபியூச்சர் பிராண்டு உலகம் முழுக்க 30-க்கும் அதிகமான நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்தியாவில் இதன் ஆடியோ சாதனங்களை பேலஸ் ஆஃப் பிராண்ட்ஸ் விளம்பரப்படுத்தி விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. 

    புதிய ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் ரூ. 6999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வருட வாரண்டியுடன் வரும் ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் வைட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

    ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இவை மிகக்குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருப்பதால், காதுகளில் அணியும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் இவை மூன்று அளவு கொண்ட சிலிகான் இயர்டிப்களை கொண்டிருக்கிறது.

    ஃபியூச்சர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்

    ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய இயர்பட்ஸ் அதிகபட்சம் 10 மீட்டர்களுக்கு கனெக்டிவிட்டியை சீராக வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். இதனுடன் வழங்கப்படும் கேஸ் கொண்டு சராசரியாக மொத்தம் 25 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இதன் பில்ட் இன் சார்ஜிங் கேஸ் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் சாதனத்தில் நான்கு உயர் ரக பில்ட்-இன் மைக்குகளும், டி.எஸ்.பி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர் அதிக சத்தமுள்ள பகுதிகளில் இருந்தாலும், தெளிவான தொலைபேசி உரையாடலை மேற்கொள்ள முடியும். அந்தளவு இதன் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் இயங்குகிறது.

    மேலும் இந்த இயர்பட்ஸ் மாடலில் ஆட்டோ-பேரிங், ஜெஸ்ட்யூர் அங்கீகார வசதி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஆப்பிள் சிரி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.



    வாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனிற்கான வாட்ஸ்அப் செயலி பழைய வெர்ஷன்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹேக்கர்களுக்கு சைபர் தாக்குதல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் யாரேனும் எம்.பி.4 தரவினை அனுப்பினால் அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். செயலியில் பகிரப்படும் எம்.பி4 தரவினை டவுன்லோடு செய்தால் சாதனத்தில் டிடாஸ் (டினையல் ஆஃப் சர்வீஸ்) தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது. 

    மால்வேர்

    இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்ய ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு இருப்பதை உறுதி செய்த ஃபேஸ்புக் இதுபற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தகவல் வழங்கியது. 

    இந்த குறைபாடு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.274 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.19.100 வெர்ஷன்களிலும், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பிஸ்னஸ் 2.19.104 மற்றும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஒ.எஸ். 2.19.100 வெர்ஷன்கள் மற்றும் விண்டோஸ் போன் 2.18.368 பதிப்புகளில் இருக்கிறது. புது குறைபாடை கொண்டு ஹேக்கர்கள் பயனர் சாதனத்தில் மால்வேர் மூலம் தகவல்களை திருடவும், உளவு பார்க்கவும் முடியும்.
    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நாய்ஸ்ஃபிட் எவால்வ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபலமான நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நாய்ஸ்ஃபிட் எவால்வ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. AMOLED ஸ்கிரீன் கொண்ட நாய்ஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இது வெளியாகியுள்ளது.

    இதில் பாரம்பரியமான வட்ட வடிவத்தில் ஃபிட்னஸ் அம்சங்கள், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், மியூசிக், கேமரா கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள AMOLED டிஸ்ப்ளே நேரடி சூரிய வெளிச்சத்திலும் ஸ்மார்ட்வாட்ச்-ஐ பயன்படுத்த முடியும்.

    நாய்ஸ்ஃபிட் எவால்வ்

    நாய்ஸ்ஃபிட் எவால்வ் சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 390x390 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களுடன் இயங்கும் வசதி
    - 9 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - 24-மணி நேர இதய துடிப்பு சென்சார்
    - ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்லீப் டிராக்கர், செடன்ட்டரி ரமைன்டர்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 180 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நாய்ஸ்ஃபிட் எவால்வ் ஸ்மார்ட்வாட்ச் ஸ்லேட் பிளாக், டஸ்க் புளூ மற்றும் பிளஷ் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. நாய்ஸ்ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சூக்கர்பர்க் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க் டிக்டாக் செயலியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அக்கவுண்ட் வெரிஃபை செய்யப்படவில்லை என்றாலும், இதில் @finkd எனும் பெயரில் இயங்குகிறது. 

    மார்க் சூக்கர்பர்க் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டையும் @finkd பெயரில் பயன்படுத்தி வருகிறார். டிக்டாக்கில் இந்த கணக்கினை சுமார் 4000 பேர் பின்தொடர்கின்றனர். இந்த கணக்கு அரியானா கிராண்ட், சலீனா கோமெஸ் என சில நட்சத்திரங்களை பின்தொடர்கிறது. 

    முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் எனும் அம்சம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் சிறிய வீடியோக்களை உருவாக்கி அவற்றை தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்.

    ஃபேஸ்புக்

    2016 ஆம் ஆண்டு மார்க் சூக்கர்பர்க் மியசிக்கல்.லி இணை நிறுவனர் அலெக்ஸ் சூவை ஃபேஸ்புக்கின் மென்லோ பார்க் தலைமையகத்தில் சந்தித்து பேசினார். எனினும், சந்திப்பு பற்றி அதன்பின் எவ்வித தகவலும் இல்லை.

    இதன்பின் 2017 ஆம் ஆண்டு சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனம் மியூசிக்கல்.லியை சுமார் 80 கோடி டாலர்களுக்கு வாங்கி, சேவையை மற்றொரு செயலியுடன் இணைத்து டிக்டாக் என மாற்றியது. தற்சமயம் டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் டிக்டாக் செயலி இன்ஸ்டாகிராமை விட அதிக பிரபலமாகி விட்டது என மார்க் சூக்கர்பர்க் சமீபத்தில் தெரிவித்தார். இந்திய சந்தையில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களுக்கு டிக்டாக் கடும் போட்டியாக இருக்கிறது. இதனால் டிக்டாக் 100 கோடி டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 
    ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கண்டறியப்பட்ட கோடிக்கணக்கான போலி அக்கவுண்ட்களை அந்நிறுவனம் பாரபட்சமின்றி நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இணைய உலகில் போலி செய்திகளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் மும்முரம் காட்டி வருகி்ன்றன. 

    அந்த வரிசையில் ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 320 கோடிபோலி அக்கவுண்ட்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் பயனர்களாக மாறும் போது இத்தனை போலி அக்கவுண்ட்கள் கண்டறியப்பட்டது. 

    ஆக்டிவ் பயனராகும் முன் கண்டறியப்பட்டதால் இவை ஃபேஸ்புக்கின் வாடிக்கையாளர் கணக்கில் சேராது. தற்போதைய நிலவரப்படி ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் ஐந்து சதவிகிதம் அதாவது சுமார் 240 கோடி அக்கவுண்ட்கள் போலி என ஃபேஸ்புக் கணித்திருக்கிறது.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    இதே காலக்கட்டத்தில் போலி அக்கவுண்ட் தவிர குழந்தைகளின் ஆபாசம் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் சார்ந்து சுமார் 1.85 கோடி தரவுகள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அது முந்தைய ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது 13 சதவிகிதம் வரை அதிகம் ஆகும். ஆபாச தரவுகளை கண்டறியும் வழிமுறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

    இத்துடன் மற்றவரை துன்புறுத்தும் வகையில் பதிவிடப்பட்ட சுமார் 1.14 கோடி தரவுகள் நீக்கப்பட்டிருக்கிறது. பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பகிரப்படும் தரவுகளை நீக்கும் பணிகளில் ஃபேஸ்புக் தொடர்ந்து மும்முரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் ரெட்டினா டிஸ்ப்ளே, 9 ஆம் தலைமுறை பிராசஸர், அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம், 8000 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 16 இன்ச் ரெட்டினா 3072x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர், AMD ரேடியான் ப்ரோ 5000M சீரிஸ் கிராஃபிக்ஸ் மற்றும் GDDR6 வீடியோ மெமரி, 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக 8000 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. முந்தைய மேக்புக் மாடல்களில் இருந்துவந்த கீபோர்டு சார்ந்த பிரச்சனைகள் புதிய மேக்புக் ப்ரோ மாடலில் ஏற்படாத வகையில் புதிய லேப்டாப்களை ஆப்பிள் உருவாக்கி இருக்கிறது.

    16 இன்ச் மேக்புக் ப்ரோ

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16 இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 16-இன்ச் IPS LED-பேக்லிட் டிஸ்ப்ளே 3072x1920 பிக்சல் ரெசல்யூஷன்
    - 6-கோர் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர்
    - 2.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இருந்து 4.5 ஜிகாஹெர்ட்ஸ் வரை அதிகப்படுத்தும் வசதி
    - 8-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர்
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் துவங்கி 4.8 ஜிகாஹெர்ட்ஸ் வரை அதிகப்படுத்தும் வசதி
    - அதிகபட்சம் 64 ஜி.பி. DDR4 ரேம்
    - அதிகபட்சம் 8000 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - அதிகபட்சம் AMD ரேடியான் ப்ரோ 5500M கிராஃபிக்ஸ்
    - 4 ஜி.பி. GDDR6 மெமரி / இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 630
    - ஃபுல்-சைஸ் பேக்லிட் மேஜிக் கீபோர்டு
    - வைபை, ப்ளூடூத் 5.0
    - 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா
    - 4 x தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப்-சி, டிஸ்ப்ளே போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
    - 6-ஸ்பீக்கர் சிஸ்டம்
    - 100Wh பேட்டரி
    - 96W யு.எஸ்.பி.-சி பவர் அடாப்டர்
    - மேக் ஓ.எஸ். கேட்டலினா

    புதிய ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16 இன்ச் 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 199,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் புதிய இன்-இயர் வடிவமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலும் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. 

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2, வாட்ச் ஒ.எஸ். 6.1, டி.வி. ஒ.எஸ். 13.2, மேக் ஒ.எஸ். கேட்டலினா 10.15.1 அல்லது அதற்கு பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.

    ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ

    ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் H1 சிப் மற்றும் 10 ஆடியோ கோர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஒவ்வொரு இயர்பட்களும் காதுகளில் சவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட் இரு மைக்ரோபோன்களை பயன்படுத்துகிறது. 
     
    இதனால் பயனர் இருக்கும் சூழலில் அதிகப்படியான சத்தத்தை குறைத்து, பயனர்களை அலாதியான இசையை அனுபவிக்க வழி செய்யும். இதில் உள்ள அடாப்டிவ் இ.கியூ. அம்சம் தானாக இயங்கி பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 997 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. 180 நாட்கள் வேலி்டிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

    தற்சமயம் இந்த பிரீபெயிட் சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் இந்த சலுகையில் டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் குறையும். 

    அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை பி.எஸ்.என்.எல். எண்களில் இருந்து அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., முதல் இரு மாதங்களுக்கு பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    ஏர்டெல் நிறுவனமும் ரூ. 998 விலையில் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. 336 நாட்கள் வேலி்டிட்டி கொண்டிருக்கும் ரூ. 998 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்.எம்.எஸ். மற்றும் 12 ஜி.பி. டேட்டா எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 999 பிரீபெயிட் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 999 சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் 60 ஜி.பி. டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 நேரலை டி.வி. சேனல்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸ் வழங்க துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சேவையில் இருந்து கட்டண இணைப்புகளுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ செட் டாப் பாக்ஸ்களை வழங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    இது இரண்டு மாதங்களுக்கு முன் ஜியோ அறிவித்த ட்ரிபில் பிளே பிராட்பேண்ட் சலுகைகளின் கீழ் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதன் மூலம் ஜியோஃபைபர் சோதனை நிறைவுற்றதாக ஜியோ தெரிவித்துள்ளது. அதன்படி ஜியோஃபைபர் பிரீவியூ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டண சேவைக்கு மாற வேண்டும்.

    ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரிபில் பிளே சலுகைகள் ரூ. 699 எனும் துவக்க விலையில் கிடைக்கின்றன. செட் டாப் பாக்ஸ் மற்றும் கேபிள் டி.வி. சேவை பற்றி அதிகளவு விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில் அனைத்து ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    ஜியோஃபைபர்

    செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பு வைத்திருக்க வேண்டும். தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களில் வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பின்றி 150 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியும். 

    ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோடிவி ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது. இதனால் ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் கொண்டு ஜியோ டி.வி. செயலியில் உள்ள 650 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியாது. 

    இத்துடன் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோ டி.வி. பிளஸ் எனும் புதிய செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இது ஒ.டி.டி. தளங்களில் இருக்கும் தகவல்களை இணைக்கிறது.
    ×