என் மலர்
கணினி
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பெரும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி தங்களின் சேவை கட்டணங்களின் விலையை கடந்த வாரம் உயர்த்தின. விலை உயர்வின் அங்கமாக டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு கட்டணம் நிர்ணயித்தன.
மற்ற நிறுவன எண்களுக்கு கட்டணம் விதிக்கும் முறைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகை என்ற பெயரில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குவதாக அறிவித்தது.

அந்தவகையில் ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வோடபோன் ஐடியா அறிவித்த புதிய அன்லிமிட்டெட் சலுகைகள் முறையே 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றன. விலை உயர்வின் படி அன்லிமிட்டெட் சலுகைகளுக்கான துவக்க கட்டணம் ரூ. 149 இல் துவங்கி ரூ. 399 வரை நிர்ணயம் செய்யப்பட்டன. இச்சலுகைகளின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளின் விலை ரூ. 374 இல் துவங்கி ரூ. 699 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர சலுகைகளின் (365 நாட்கள்) விலை ரூ. 1,499 மற்றும் ரூ. 2399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 449 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரூ. 219 பிரீபெயிட் சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 399 சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ரூ. 449 சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 90 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் தவிர ஏர்டெல் வழங்கி வரும் மற்ற அன்லிமிட்டெட் சலுகைகளுக்கும் இந்தியா முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.
அனைத்து நெட்வொர்க்களுக்குமான அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் இன்று (டிசம்பர் 7) முதல் வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவன சேவை கட்டணம் 40 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது.
ஹூவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூவாய் நிறுவனம் ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 500 பாடல்களை பதிவு செய்து கேட்டு ரசிக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 42 எம்.எம். மற்றும் 46 எம்.எம். அளவுகளில் 1.2 இன்ச் மற்றும் 1.39 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
புதிய ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் மேம்பட்ட ப்ளூடூத் பிராசஸிங் யூனிட், சக்திவாய்ந்த ஆடியோ பிராசஸிங் யூனிட், அ்ட்ரா-லோ பவர் போன்ற அம்சங்கள் நிறைந்த ஹூவாயின் கிரின் ஏ1 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதில் மொத்தம் 15 ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 சிறப்பம்சங்கள்:
- 1.2-இன்ச் / 1.39-இன்ச் ( 390x390 பிக்சல்) / ( 454x454 பிக்சல்) AMOLED டச் டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் ஏ1 சிப்
- ப்ளூடூத் 5.1
- 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ஜி.பி.எஸ். வசதி
- மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்
- ப்ளூடூத் காலிங்
- இதய துடிப்பு சென்சார்
- 15 உடற்பயிற்சி மோட்கள்
- 455 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 46எம்.எம். ஸ்போர்ட் பிளாக் விலை ரூ. 15,990, 46எம்.எம். லெதர் வெர்ஷன் ரூ. 17,990 மற்றும் 46எம்.எம். மெட்டல் வெர்ஷன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட், அமேசான், க்ரோமா போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 42 எம்.எம். மாடல் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
நோக்கியா நிறுவனத்தின் புதிய 55 இன்ச் 4K ஹெச்.டி.ஆர். எல்.இ.டி. டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி. 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
மேலும் ஹெச்.டி.ஆர். 10 வசதி, MEMC தொழில்நுட்பம், வைடு கலர் கமுட், டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டி.வி.யில் பில்ட் இன் 24 வாட் ஸ்பீக்கர், டி.டி.எஸ். ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஆடியோ ஆப்டிமைசேஷன்களை கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 வசதி கொண்டிருக்கும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி. கூகுளின் ஆண்ட்ராய்டு டி.வி. பிளே ஸ்டோர் வசதி கொண்டிருக்கிறது.

நோக்கியா 55-இன்ச் ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்:
- 55-இன்ச் 3840x2160 பிக்சல் டிஸ்ப்ளே
- 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
- மாலி 450MP4 GPU
- 2.25 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு டி.வி. 9.0
- வைபை, ப்ளூடூத்
- 3x ஹெச்.டி.எம்.ஐ., 2x யு.எஸ்.பி., ஈத்தர்நெட்
- 24 வாட் ஸ்பீக்கர்
- ஜெ.பி.எல்., டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ட்ரூசரவுண்ட்
நோக்கியா ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 10-ம் தேதி துவங்குகிறது.
ஹைஃபியூச்சர் பிராண்டு இந்தியாவில் டைடிபட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.
ஹைஃபியூச்சர் நிறுவனம் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டைடிபட்ஸ் ப்ரோ என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. இந்த கேஸ் 100 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு போனினை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
இயர்பட்ஸ்களில் 8 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் 75 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் வழங்கப்படும் 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் கொண்ட இயர்போன்களை 10 முதல் 12 முறை முழுமையாக சார்ஜ் செய்யலாம். அந்த வகையில் இதை கொண்டு 100 மணி நேரத்திற்கு பேக்கப் பெறலாம்.
புதிய இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் 10 மீட்டர் தூரம் வரை இணைப்பினை சாத்தியப்படுத்துகிறது. இத்துடன் IPX4 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய இயர்போன் பேலன்ஸ்டு சவுண்ட் சிக்னேச்சர் மற்றும் இரைச்சலற்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இந்த இயர்போனினை இயர்பட்ஸ்களில் உள்ள டச்பேட் கொண்டு இயக்க முடியும். இதில் ஒற்றை டச் மூலம் இசை, அழைப்புகள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இயக்க முடியும்.
வாடிக்கையாளர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இயர்பட்ஸ் வாங்குவோருக்கு மூன்றுவித அளவுகளில் இயர் டிப்கள் வழங்கப்படுகின்றன. டைடிபட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் வைட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 4,499 என்றும் அமேசானில் ரூ. 4,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம், வீடியோக்களை கூகுள் மற்றும் இதர சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை சோதனை செய்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இந்த அம்சம் புகைப்படஙகள் மற்றும் மீடியா தரவுகளை மற்ற ஆன்லைன் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும். முதற்கட்டமாக ஃபேஸ்புக்கில் இருக்கும் மீடியா தரவுகளை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த அம்சம் முதலில் அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் பயனர் மதிப்பீட்டிற்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இந்த அம்சம் 2020 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாட்டு வாரியங்கள் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை இயக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை அறிவித்துள்ளார்.
புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை வெளியிட்டு இருப்பதுடன் பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவாதம் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 118 கோடி செல்போன் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. உலக அளவில் செல்போன், வாட்ஸ்அப் சேவைகளை அதிகம் பகிர்ந்து கொள்வது இந்தியர்கள்தான். இந்த தொலைத்தொடர்பு சேவைகளை பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரியலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா ஆகியவை வழங்கி வருகின்றன.
குறிப்பாக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா நிறுவனங்கள் இந்தியாவின் செல்போன் வாடிக்கையாளர்களில் சுமார் 90 சதவீதம் வரை கொண்டுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் தலா 30 சதவீதம் வாடிக்கையாளர்களை தங்களிடம் வைத்துள்ளன.
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மூன்று நிறுவனங்களாலும் அதிகளவு கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியவில்லை. உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களாக இவை இருந்தன. இதனால் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் அடுத்தடுத்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து கட்டணத்தை உயர்த்த இந்த நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வந்தன. வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமானால் கணிசமான அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் எந்த அளவுக்கு கட்டணம் உயரும் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று 3 செல்போன் நிறுவனங்களும் தொலைத்தொடர்புக்கான சேவை கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்தியாவில் கட்டணத்தை உயர்த்தின. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இம்முறை கட்டண உயர்வு மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சந்தாதாரர்களில் பிரீபெய்டு, போஸ்ட் பெய்டு என 2 வகையான சந்தாதாரர்கள் உள்ளனர். இதில் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மொபைல் டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவை கட்டணங்கள் 40 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் 14 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் 28 நாள் கட்டணம் ரூ.129-ல் இருந்து ரூ.148 ஆகவும், 84 நாட்கள் சேவை கட்டணம் ரூ.448-ல் இருந்து ரூ.598 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 365 நாட்களுக்கான கட்டணம் ரூ.1699-ல் இருந்து ரூ.2398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய இரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை கட்டண உயர்வு நாளை (டிசம்பர் 3) முதல் அமலுக்கு வருகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருகிற 6-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கான கட்டணம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நிறுவனமும் தனது கட்டணங்களை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் புதிய திட்டங்கள் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளது. இதன் மூலம் 300 சதவீதம் கூடுதல் பலன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi டிவி 4X 55 இன்ச் 4K ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் ஹெச்.டி.ஆர். 10 வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி மற்றும் டி.டி.எஸ். சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மற்ற சியோமி ஸ்மார்ட் டி.வி.க்களை போன்று புதிய டி.வி.யிலும் பேட்ச்வால் 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
மேலும் இணைய பொழுதுபோக்கு சேவையான நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற வசதிகளும், டேட்டா சேவர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சியோமி Mi டிவி 4X 55 இன்ச் சிறப்பம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி
- அம்லாஜிக் கார்டெக்ஸ் குவாட்கோர் ஏ53 பிராசஸர்
- மாலி-450 MP3 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- பேட்ச்வால் 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு டிவி 9.0
- வைபை, ப்ளூடூத், 3 x HDMI, 2 x USB, Ethernet
- H.264, Real, MPEG1/2/4, etc.
- 2 x 10வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டிடிஎஸ். ஆடியோ, டால்பி ஆடியோ
Mi டிவி 4X மாடல் விலை ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான், Mi வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய பேண்ட் 5 ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பேண்ட் 5 ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்பேண்ட் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலில் 0.96 இன்ச் கலர் ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 சிறப்பம்சங்கள்:
- 0.96 இன்ச் 160x80 பிக்சல் TFT-LCD ஸ்கிரீன்
- ப்ளூடூத் 4.0
- ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களுடன் வேலை செய்யும்
- ஸ்டெப் கவுண்ட், ஸ்லீப் டிராக்கிங், கலோரி கன்சம்ப்ஷன் டேட்டடா
- டிஸ்ப்ளே நேரம்/தேதி, அலாரம் கடிகாரம், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்
- செடன்ட்டரி ரிமைண்டர்
- PPG இதய துடிப்பு சென்சார்
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
- ஏழு நாட்கள் பேட்டரி பேக்கர், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை
புதிய இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 1-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
ஹைஃபியூச்சர் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்போன் நெக்லேஸ் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹைஃபியூச்சர் ஆடியோ பிராண்டு இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹைஃபியூச்சர் நெக்லேஸ் என அழைக்கப்படும் புதிய இன்-இயர் வயர்லெஸ் இயர்போன் உறுதியான நெக்பேண்ட், ஸ்வெட்-ப்ரூஃப் வடிவமைப்பு, ப்ளூடூத் 5.0 மற்றும் நீண்ட பேட்டரி கொண்டிருக்கிறது.
புதிய இயர்போன் வாடிக்கையாளர்களுக்கு சவுகரிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹைஃபியூச்சர் தெரிவித்துள்ளது. இதன் மென்மையான கிளைடு-ஆன் வடிவமைப்பு, வாடிக்கையாளர்கள் இயர்போனை காதில் வைத்ததும் அதனை அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியத்தை போக்குகிறது.

நெக்பேண்ட் முழுவதும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் இயர்போன்களில் காந்தம் இருப்பதால் பயன்படுத்தாத போது, இவை ஒன்றாக இணைந்து கொள்ளும். இயர்போன்களில் ப்ளூடூத் 5.0 வசதியும், குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏ.ஏ.சி. ஹை-ரெஸ் ஆடியோ வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோவை அதிக தரத்தில் வெளிப்படுத்தும்.
மேலும் புதிய நெக்லேஸ் இயர்போனில் என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென குவால்காம் சி.வி.சி. 8.0 வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து வித சூழலிலும் வெளிப்புற சத்தத்தை குறைத்து வாடிக்கையாளர்கள் தரமான ஆடியோவை அனுபவிக்க வழி செய்கிறது.
இயர்போன்களில் 3 சிலிகான் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை IPX5 தரச்சான்று பெற்ற ஸ்வெட் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 12 மணி நேரம் வரை இயங்கும் என ஹைஃபியூச்சர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) முன்பைவிட பாதுகாப்பான எம் ஆதார் செயலியை வெளியிட்டுள்ளது.
ஆதார் செயலியை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) எம் ஆதார் செயலியின் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
எம் ஆதார் செயலியை ஆங்கிலம் மட்டுமின்றி - தமிழ், இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமீஸ் என மொத்தம் 13 மொழிகளில் இயக்க முடியும்.
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களில் வாடிக்கையாளர்கள் முந்தைய பதிப்பை உடனடியாக அழித்துவிட்டு, புதிய வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் மூன்றாம் தரப்பு செயலிகள் எதுவும் இயங்காது.

வாடிக்கையாளர்கள் ஆதார் சார்ந்து பல்வேறு அம்சங்களை செயலி மூலம் இயக்க முடியும். அதன்படி ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது, கியூ.ஆர். கோடு உருவாக்குவது, முகவரியை மாற்றுவது, மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்துவது போன்றவற்றை செயலி மூலம் இயக்கலாம்.
இத்துடன் செயலியை கொண்டு ஆதார் அல்லது பயோமெட்ரிக் அம்சத்தை லாக் அல்லது அன்லாக் செய்ய முடியும். ஆதார் பிரத்யேக சேவைகளை இயக்க வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் ப்ரோஃபைலை எம் ஆதார் செயலியில் பதிவிட வேண்டும்.
எம் ஆதார் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன் எண்ணை இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இவ்வாறு பதிவு செய்தவர்கள் செயலியில் தங்களின் ஆதார் விவரங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் ஹெட்போன் ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 12 மணி நேரங்களுக்கு பிளேபேக் மற்றும் 180 மணி நேர ஸ்டான்ட்-பை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிலிகான் ஜெல் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதனை பயன்படுத்துவதால், சரும பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. மேலும் இதன் நேர்த்தியான வடிவமைப்பு வாடிக்கையாளர்களின் கழுத்தில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கிறது.

நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் சிறப்பம்சங்கள்:
- சிறப்பான ஆடியோ வழங்க 10mm N50 நியோடிமியம் காந்த சக்தி டிரைவர்கள்
- குவால்கம் QCC3003 சிப்செட்
- ப்ளூடூத் 5.0
- 20Hz-20KHz ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ்
- டூயல் பேரிங் வசதி - ஒரே நேரத்தில் ஹெட்போனை லேப்டாப் மற்றும் மொபைலுடன் இணைக்க முடியும்
- குவால்காம் CVC 8.0 காற்றின் சத்தத்தை குறைக்கும்
- 2718 ரக சிலிகான் கொண்ட மைக்ரோபோன்
- வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX5)
- சிரி, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
- 140 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் ஸ்பேஸ் கிரே, டியல் கிரீன் மற்றும் பிரான்ஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் கோநாய்ஸ் போன்ற வலைத்தளங்களில் துவங்குகிறது. இதன் விலை ரூ. 2,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் பிரான்ஸ் கிரே வேரியண்ட் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.






