என் மலர்tooltip icon

    கணினி

    ட்விட்டர் நிறுவனம் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி வரும் தனது வாடிக்கையாளர்களை உடனடியாக செயலியை அப்டேட் செய்ய வலியுறுத்தி வருகிறது.



    ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறியீடுகள் உலகம் முழுக்க ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்துவோரின் விவரங்களை கசியவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ட்விட்டர் செயலியில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு பிழை பற்றி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவரவர் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து வருகிறது. இந்த பிழை ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள பிழை ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் அக்கவுண்ட்டினை ஹேக்கர்கள் இயக்க வழி செய்யும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர்

    இந்த பிழை எவ்வாறு செயலியில் புகுத்தப்பட்டது என்றோ, இதன் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது போன்று எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும், பிழையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

    பிழையில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் தங்களின் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது. இந்த பிழை ட்விட்டர் ஐ.ஒ.எஸ். செயலியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக நான்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



    வோடபோன் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவற்றின் விலை ரூ. 24 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 269 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ரூ. 269 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜி.பி. டேட்டா மொத்தம் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இத்துடன் 600 எஸ்.எம்.எஸ்., வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது.

    போன் பயன்பாடு

    வோடபோன் ரூ. 199 சலுகையில் 21 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 1 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இந்த சலுகையிலும் வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ. 129 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சேவைக்கான வசதி வழங்கப்படுகிறது. 

    வோடபோன் ரூ. 24 சலுகையில் 100 நிமிடங்களுக்கு ஆன் நெட் காலிங் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆன் நெட் காலிங் வசதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. மற்ற அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    உலக தொழில்நுட்ப சந்தையில் பிரபலமாக விளங்கும் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளின் பயன்பாடு உலகம் முழுக்க பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை வழங்குவதில், ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்றவை முன்னணி பிராண்டுகளாக அறியப்படுகின்றன. இந்நிறுவனங்களின் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகள் பெரும்பாலான தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    எனினும் ஆப்பிள் சிரி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா என மூன்று சேவைகளில் பிரபலமானவை எது என்ற கேள்விக்கு தற்சமயம் விடை கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி சேவையே பிரபலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சிரி

    உலகம் முழுக்க விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்துவோரில் ஆப்பிள் சிரி 35 சதவீத பங்கு வைத்திருக்கிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கார்டனா சேவை இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது. இந்த சேவையை 22 சதவீத பங்கு கொண்டிருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்றவை முறையே 9 மற்றும் 4 சதவீத பங்கு கொண்டிருக்கிறது.

    பட்டியலில் சிரி முதலிடம் பிடிக்க ஐபோன், புதிதாக வெளியான ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றவையே காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி சேவை 2011 ஆம் ஆண்டு முதல் வெளியாகி வரும் ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட் கார்டனா சேவை விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் வழங்கப்பட்டுள்ளது.

    சிரி மற்றும் கார்டனா போன்ற சேவைகள் உலகம் முழுக்க பெரும்பாலான சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மற்ரும் அமேசான் உள்ளிட்ட சேவைகள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வவுச்சர்களை அறிமுகம் செய்துள்ளது.



    ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வவுச்சர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 101 முதல் துவங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஜியோ வலைத்தளம் அல்லது மைஜியோ செயிலியில் சைன் இன் செய்தது புதிய டேட்டா வவுச்சர்களை ஜியோ ஃபைபர் கட்டண வாடிக்கையாளர்கள் இயக்க முடியும்.

    டேட்டா வவுச்சர்களில் ஜியோ அதிகபட்சமாக 2000 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. இவற்றின் கட்டணம் ரூ. 101 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 4001 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபர் சலுகைகளை போன்று இல்லாமல் டேட்டா வவுச்சர்களில் எவ்வித கூடுதல் வேலிடிட்டியும் வழங்கப்படவில்லை. எனினும், இவற்றை டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ரிலையன்ஸ் ஜியோ

    ஜியோ வலைத்தளம் மற்றும் மைஜியோ செயலியில் உள்ள தகவல்களின் படி ஏற்கனவே உள்ள ஜியோ ஃபைபர் அக்கவுண்ட்டிற்கு மொத்தம் ஆறு டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. இவை டேட்டா வவுச்சர்கள் பிரிவில் காணப்படுகின்றன. ரூ. 101 விலையில் கிடைக்கும் வவுச்சரில் 20 ஜி.பி. டேட்டாவும், விலை உயர்ந்த ரூ. 4001 வவுச்சரில் 2000 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது.

    இரு வவுச்சர்கள் தவிர ரூ. 251, ரூ. 501, ரூ. 1001 மற்றும் ரூ. 2001 விலைகளிலும் டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. புதிய டேட்டா வவுச்சர்கள் ஜியோ ஃபைபர் சலுகையின் வேலிடிட்டியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. மேலும் சலுகையின் டவுன்லோடு வேகங்களிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

    முன்னதாக ஜியோ ஃபைபர் சேவையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிகபட்சம் 40 ஜி.பி. வரை இலவச டேட்டா வழங்கப்பட்டது. எனினும், தற்சமயம் இதுபோன்று இலவச டேட்டா வவுச்சரை ஜியோ ஃபைபர் வழங்குவதில்லை.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஜெப் சவுணட் பாம்ப் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜெப் சவுணட் பாம்ப் என்ற பெயரில் புதிதாக ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. 

    இசை வகைகள், சவுண்ட் டிராக்குகள், பின்னணி இசை ஆகியவற்றின் உண்மையான அனுபவத்தைப் பெற ஏதுவாக புதிய ஹெட்போனை ஜெப்ரானிக்ஸ் உருவாக்கி இருக்கிறது. ஜெப்ரனிக்ஸ் நிறுவனத்தின் புதிய சவுண்ட் பாம்ப் ஹெட்ஃபோன் மிகவும் நுண்ணிய அளவில் தெளிவான இசையை வழங்குவதன் மூலம், இசை கேட்கும் அனுபவத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது.

    புதிய ஹெட்போன் மென்மையான தோற்றம், பளபளப்பான மேற்புறம், எளிமையாக இயக்கக்கூடிய அமைப்பு, சிரமமின்றி சாதனத்துடன் இணைத்தல் போன்றவை இதன் சிறப்பம்சங்களாக இருக்கிறது. இந்த ஹெட்ஃபோன்கள் காதிற்குள் செருகும் வகையிலும் கீழே விழாதவாறு நிலையாகக் காதில் பொருந்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஜெப் சவுணட் பாம்ப் ஹெட்போன்

    முழுமையான வயர்லெஸ் இயர்போனான ஜெப் சவுண்ட் பாம்ப் டச் கண்ட்ரோல் மூலம் அனைத்து அம்சங்களையும் இயக்க முடியும். இசையை இயக்க/இடைநிறுத்த மேலே உள்ள பட்டனைத் தொட்டாலே போதும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களில் வாய்ஸ் அசிஸ்டண்டை இயக்குவதற்கு, பட்டனை இருமுறை தொட வேண்டும். சாதனத்தை அழுத்திப் பிடிப்பதன் மூலம் ஹெட்போனை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

    புதிய ஜெப் சவுண்ட் பாம்ப் இயர்போனினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேர ப்ளேபேக், சார்ஜிங் கேஸ் பயன்படுத்தி 18 மணிநேரம் வரை ப்ளேபேக்கை நீட்டிக்க முடியும். இதற்கான சார்ஜிங் கேஸ் மிகவும் எளிதாக பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய ஜெப் சவுண்ட் பாம்ப் கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறக் கலவை ஆகிய வண்ணங்களில், முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஹெட்போன் தற்சமயம் ரூ. 2429 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் கேரளாவில் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி ரூ. 118, ரூ. 187, மற்றும் ரூ. 399 பிரீபெயிட் சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணத்தை உயர்த்தின.

    கேரளாவில் பி.எஸ்.என்.எல். ரூ. 118 சலுகை தற்சமயம் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மற்ற வட்டாரங்களில் இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வேலிடிட்டி தவிர சலுகையின் பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    பி.எஸ்.என்.எல். சலுகைகளில் மாற்றம்

    ரூ. 187 சலுகையின் வேலிடிட்டியும் 28 நாட்களில் இருந்து தற்சமயம் 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 3 ஜி.பி. அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    பி.எஸ்.என்.எல். ரூ. 153 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இதேபோன்று ரூ. 399 சலுகையின் வேலிடிட்டி 65 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதே சலுகை மற்ற வட்டாரங்களில் 80 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனினும், இதன் டேட்டா அளவு தினசரி 1 ஜி.பி.யில் இருந்து தற்சமயம் தினமும் 2 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ஹானர் பிராண்டு புதிய இன்-இயர் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் புதிய இன்-இயர் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன் ஹானர் ஏ.எம்.115 என அழைக்கப்படுகிறது.

    ஹானர் ஏ.எம்.115 இயர்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இது சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளதால் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. ஏ.எம்.115 இயர்போனில் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.

    ஹானர் ஏ.எம்.115

    இத்துடன் அழைப்புகளை ஏற்பது, கண்ட்ரோல் பிளேபேக் போன்ற அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இயர்போன் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே விற்பனைக்கு வழங்கப்படுவதாக ஹானர் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர் ஏ.எம்.115 இயர்போனின் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெறுகிறது.
    சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 3ஐ ஃபிட்னஸ் பேண்ட் இந்திய விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமியின் புதிய ஃபிட்னஸ் பேண்ட் Mi பேண்ட் 3ஐ இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இதன் விற்பனை Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனை சியோமி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Mi பேண்ட் 3ஐ மாடலில் டச் சென்சிட்டிவ் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் ஸ்டான்ட்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Mi பேண்ட் 3ஐ மாடலின் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Mi பேண்ட் 3ஐ

    சியோமி Mi பேண்ட் 3ஐ சிறப்பம்சங்கள்

    - 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் தொடுதிரை டிஸ்ப்ளே
    - நோட்டிஃபிகேஷன்களை பார்க்கும் வசதி
    - உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
    - 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டணட்
    - 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - ப்ளூடூத் 4.2 எல்.இ.
    - ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணையந்து இயங்கும்
    - 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ், ஒன்பிளஸ் டி.வி. என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் உருவாவது பற்றி தகவல் கிடைத்திருக்கும் நிலையில் இதன் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், புதிய இயர்பட்ஸ் எவ்வித கேபிளும் இன்றி உருவாக்கப்படும் என தெரிகிறது.

    ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் கான்செப்ட்

    தோற்றத்தில் ஒன்பிளஸ் இயர்பட்ஸ் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்று காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஒன்பிளஸ் இயர்பட்ஸ் புல்லட்ஸ் போன்ற பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் 2 நெக்பேண்ட் வடிவமைப்பு மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய இயர்பட்ஸ் பிரத்யேக வடிவமைப்பு, சிலிகான் இயர் டிப், மேம்பட்ட டியூனிங் மற்றும் தலைசிறந்த டிரைவர்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோன்று பேட்டரி, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய ஒன்பிளஸ் இயர்பட்ஸ் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தொழில்நுட்ப சந்தையில் பெரும்பாலான நிறுவனங்களும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருகின்றன. அந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனமும் இணையலாம் என கூறப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 49 விலையில் வழங்கி வந்த சலுகையை நீக்கி ரூ. 79 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகை கட்டணம் சமீபத்தில் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முன்னதாக தங்களது சலுகை கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின.

    இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் துவக்க சலுகை ரூ. 49 இல் இருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய ரூ. 75 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, மொத்தமாக 50 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இச்சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எம்பி அதிவேக டேட்டா கிடைக்கும்.

    இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்பு விடுக்க 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோ – ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரூ. 75 சலுகை தவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 125, ரூ. 155 மற்றும் ரூ. 185 விலை சலுகைகளையும் வழங்கி வருகிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ

    அதன்படி ரூ. 125 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 500 எம்பி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் முந்தைய ரூ. 75 சலுகையை போன்று ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஜியோ – ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ரூ. 155 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் ஜியோ – ஜியோ அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இறுதியில் ரூ. 185 ஜியோபோன் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டாவும், ரூ. 155 சலுகையை போன்று தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் ஜியோ – ஜியோ அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனம் 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலுக்கு மாற்றாக கடந்த மாதம் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்தது. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் மேம்பட்ட வடிவமைப்பு கொண்ட கீபோர்டு வழங்கப்பட்டு, லேப்டாப்பின் செயல்திறன் ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் வரை மேம்படுத்தப்பட்டது.

    இந்தியாவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலின் விற்பனை துவங்கியது. இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ. 1,99,900 முதல் துவங்குகிறது.

    16 இன்ச் மேக்புக் ப்ரோ

    அமேசான் வலைத்தளத்தில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ (16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, கோர் ஐ7 பிராசஸர்) விலை ரூ. 1,89,990 என்றும் கோர் ஐ9 வேரியண்ட் ரூ. 2,29,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலில் 3072x1920 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, டச் பார், டச் ஐ.டி. கைரேகை சென்சார், ஆப்பிள் டி2 பாதுகாப்பு சிப்செட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
    ஹூவாய் நிறுவனம் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.



    ஹூவாய் நிறுவனத்தின் பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பேண்ட் 3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5டி வளைந்த தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் ஹோம் பட்டன், கன்டினுவஸ் ஹார்ட் ரேட் டிராக்கிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஜிபிஎஸ் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ

    ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    – 0.95 இன்ச் 240×120 பிக்சல் AMOLED தொடுதிரை கலர் டிஸ்ப்ளே
    – ப்ளூடூத் 4.2 எல்.இ
    – பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர், செடன்ட்டரி ரிமைண்டர்
    – 6-ஆக்சிஸ் சென்சார்கள்
    – PPG ஹார்ட் ரேட் சென்சார்
    – அழைப்புகள், குறுந்தகவல்கள் நோட்டிஃபிகேஷன்
    – வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    – ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி
    – 11 ஸ்போர்ட் மோட்கள்
    – மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல்
    – 100 எம்ஏஹெச் பேட்டரி

    ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ பிளாக், ரெட் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 4,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×