என் மலர்tooltip icon

    கணினி

    சோனி நிறுவனத்தின் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய சோனி ஹெட்போன் WI-1000XM2 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய சோனி ஹெட்போனில் அதிநவீன நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதாக சோனி தெரிவித்துள்ளது. இதற்கென புதிய ஹெட்போனில் சோனி நிறுவனம் பிரத்யேக ஹெச்.டி. நாய்ஸ் சேன்சலிங் பிராசஸர் QN1 வழங்கியுள்ளது. புதிய ஹெட்போன் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

    இதில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற சூழல் மற்றும் பயனரின் நடவடிக்கைக்கு ஏற்ப ஹெட்போன்களின் சத்தத்தை தானாக மாற்றியமைக்கும். ஆங்கில்டு இயர்போன் வடிவமைப்பு வெளிப்புற சத்தம் காதில் நுழைவதை தடுக்கிறது. புதிய ஹெட்போனில் மெல்லிய சிலிகான் நெக்பேண்ட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சோனி WI 1000XM2

    சோனி WI-1000XM2 ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் உள்ள பேட்டரி 10 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. மேலும் இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 80 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். புதிய ஹெட்போனினை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் கழற்றக்கூடிய 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் பயன்படுத்த முடியும். சோனி WI-1000XM2 இன்-இயர் வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலேஷன் ஹெட்போன் சோனி விற்பனை மையம் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே தின்க்ஸ்மார்ட் வியூ பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    லெனோவோ நிறுவனம் தின்க்ஸ்மார்ட் வியூ என்ற பெயரில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை கொண்டு மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சார்ந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கூகுளின் ஹோம் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இந்த சாதனம் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவையை கொண்டு இயங்குகிறது.

    இந்த சாதனத்தின் விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் தின்க்பேட் எக்ஸ்1 ஏ.என்.சி. ப்ளூடூத் ஹெட்செட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, இன்டகிரேட்டெட் கேமரா மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது. லெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 5 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, பிரைவசி ஷட்டர், டூயல் மைக்ரோபோன் அரே, 1.75 இன்ச் 10 வாட் ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது.

    லெனோவோ தின்க்சென்ட்டர் எம்90ஏ ஏ.ஐ.ஒ.

    லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளேவில் குவால்காம் ஏ.பி.கியூ.8053 சிஸ்டம் ஆன் சிப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் ஹெட்செட்களுடன் பயன்படுத்த ப்ளூடூத் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதன் எடை ஒரு கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. 

    தின்க்ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளேவுடன் லெனோவோ நிறுவனம் தின்க்சென்ட்டர் எம்90ஏ ஏ.ஐ.ஒ. என்ற பெயரில் மற்றொரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள், 23.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஆப்ஷனல் பிரைவசி கார்டு, ஐ.ஆர். கேமரா மற்றும் வெப் கேமராவுக்கு தின்க் ஷட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்ப்ளே விலை சர்வதேச சந்தையில் 349 அல்லது 449 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட தின்க்சென்ட்டர் எம்90ஏ ஏ.ஐ.ஒ. விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 78,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9510 அதிநவீன இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் 5ஜி வசதி கொண்ட லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது.



    டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9000 சீரிஸ் புதிய லேப்டாப் லேட்டிடியூட் 9510 பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 15 இன்ச் லேப்டாப் 15 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இது லேப்டாப் மற்றும் 2 இன் 1 என இருவிதங்களில் கிடைக்கிறது.

    டெல் லேட்டிடியூட் 9510 மாடலில் 15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது 14 இன்ச் நோட்புக் அளவிலும் கிடைக்கிறது. இதன் 2 இன் 1 வேரியண்ட்டிலும் தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் இன்டெல் வைபை 6 மற்றும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5ஜி ஆன்டெனாக்கள் முன்புற ஸ்பீக்கர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேப்டாப் அதிக தடிமனாக இல்லாமல், மெல்லியதாக இருக்க வழி செய்திருக்கிறது. இத்துடன் கார்பன் பிளேடு ஃபேன்களும் டூயல் ஹீட் பைப்களும் வழங்கப்பட்டுள்ளது.

    டெல் லேட்டிடியூட் 9510

    மேலும் புதிய லேப்டாப்பில் ஆம்ப் மற்றும் நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இன்டெலிஜண்ட் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கான்ஃபெரன்ஸ் அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்தும்.

    டெல் லேட்டிடியூட் 9510 மாடலில் எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது லேட்பாப்பை 35 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. மேலும் இதில் மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் மற்றும் டைமண்ட் கட் எட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சர்வதேச சந்தையில் டெல் லேட்டிடியூட் 9510 விற்பனை மார்ச் 26-ம் தேதி துவங்கும் என்றும் இதன் விலை 1799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,29,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் α (ஆல்ஃபா) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் QLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் மாடலில் 13.3 இன்ச் QLED டிஸ்ப்ளே, மிக மெல்லிய பெசல், எடை குறைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா மாடலில் கூர்மையான டைமண்ட் கட் எட்ஜ் மற்றும் உறுதியான அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய சாம்சங் லேப்டாப் மாடலில் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர், ஆக்டிவ் பென் வசதி வழங்கப்பட்டுள்ளது. 17.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய லேப்டாப்பில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசிதயும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் α

    சாம்சங் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் QLED 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
    - 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் UHD கிராஃபிக்ஸ்
    - 8 ஜி.பி. / 12 ஜி.பி. DDR4 ரேம்
    - 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 720பிக்சல் ஹெச்.டி. கேமரா, டூயல் அரே டிஜிட்டல் மைக்
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (1.5 W x 2)
    - ஆக்டிவ் பென் வசதி
    - கைரேகை சென்சார்
    - வைபை 6 (Gig+), 802.11ax 2×2, யு.எஸ்.பி.-சி,  2 x யு.எஸ்.பி. 3.0, HDMI
    - 54 Wh பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் ராயல் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 829.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 59,411) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள துவங்கியுள்ளது.



    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி இருக்கிறது. போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது போலி செய்தி என குறிப்பிட துவங்கியுள்ளது. 

    போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது. புதிய கூட்டணியின் மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகளை குழுக்கள் மேற்கொள்கின்றன.

    இதேபோன்ற அம்சம் ஃபேஸ்புக் தளத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் செயலியும் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம் புதிய அம்சம்

    இத்துடன் தவறான தகவலை அணுக வாடிக்கையாளர்களுக்கு ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கும் “See Why” எனும் அம்சமும், பதிவினை பார்க்க வழி செய்யும் “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட தகவலை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இயக்க வழி செய்கிறது.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு அம்சங்களில் முதலாவது அம்சம் கொண்டு ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 
    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் ஆன்லைன் வர்த்தக சேவை இந்தியாவில் துவங்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனம் ஜியோமார்ட் பெயரில் புதிய ஆன்லைன் வர்த்தக சேவையினை இந்தியாவில் துவங்கியுள்ளது. 

    புதிய ஜியோமார்ட் சேவை இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சேவை மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் ரீடெயில் சார்பில் ஜியோ சந்தாதாரர்களுக்கு ஜியோமார்ட் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக மும்பையில் துவங்கப்பட்டுள்ள ஜியோமார்ட் சேவை படிப்படியாக மற்ற பகுதிகளிலும் விரிவுப்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

     ரிலையன்ஸ் ஜியோமார்ட்

    வலைத்தளம் மட்டுமின்றி ஜியோமார்ட் செயலியை உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு வாடிக்கையாளர்கள் சுமார் 50,000-க்கும் அதிகமான மளிகை பொருட்களை வாங்க முடியும். மேலும் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு இலவசமாக டெலிவரி செய்யப்படுகிறது.

    புதிய ஆன்லைன் வர்த்தக சேவையின் மூலம் ஆஃப்லைன் - டு - ஆன்லைன் திட்டத்தில் செயல்பட இருக்கிறது. இதில் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பிராண்டுகளை தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வைக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

    இதுதவிர ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் - டு - ஆஃப்லைன் சந்தையை உள்ளூர் வணிகர்களுக்காக உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோமார்ட் சேவையை சீனாவில் அலிபாபா போன்று இந்தியாவில் பிரபலப்படுத்தும் என கூறப்படுகிறது. 
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்துள்ளது. இவற்றின் விலை ரூ. 299 மற்றும் ரூ. 491 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மாதாந்திர சலுகைகளும் விளம்பர நோ்க்கில் அறிவிக்கப்பட்டுள்ள. இவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25 வரை வழங்கப்படுகிறது.

    புதிய மாதந்திர சலுகைகளில் முறையே 50 ஜி.பி. மற்றும் 120 ஜி.பி. டேட்டா, அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் இணைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. புதிய சலுகைகள் புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். ரூ. 299 பிராட்பேண்ட் சலுகையில் 50 ஜி.பி. டேட்டா நொடிக்கு 20 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. 50 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்பட்டுவிடும். ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இந்த சலுகையில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    பிராட்பேண்ட்

    புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ. 500 தொகையினை பாதுகாப்பு முன்பணமாக செலுத்த வேண்டும். ரூ. 299 பிராட்பேண்ட் சலுகை ஆறு மாதங்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அதன் பின் வாடிக்கையாளர்கள் ரூ. 399 சலுகையை பயன்படுத்தலாம். இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா நொடிக்கு 8 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது.

    ரூ. 491 பிராட்பேண்ட் சலுகையில் 120 ஜி.பி. டேட்டா நொடிக்கு 20 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. முந்தைய சலுகையை போன்று நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்பட்டுவிடும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. 

    இந்த சலுகையும் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின் வாடிக்கையாளர்கள் ரூ. 499 சலுகையை பயன்படுத்தலாம். இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் மாதாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டாலும், இதற்கான கட்டணத்தை அரையாண்டு அல்லது 12 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.
    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை தானாக மறைய செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. முழு விவரங்களை பார்ப்போம்.



    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் தானாக மறைந்து போக செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுந்தகவல்களை தானாக அழித்துவிடும். வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் இந்த அம்சம் வெவ்வேறு பெயர்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த அம்சம் முன்னதாக டிசப்பியரிங் மெசேஜஸ் என்ற பெயரில் காணப்பட்டது. தற்சமயம் இது டெலீட் மெசேஜஸ் என்ற பெயரில் சோதனை செய்யப்படுகிறது. பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் அம்சத்தினை வாட்ஸ்அப் டெலீட் ஃபார் எவ்ரிவொன் என்ற பெயரில் வழங்கியதைத் தொடர்ந்து இந்த அம்சத்தின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் டெலீட் மெசேஜஸ்

    புதிய டெலீட் மெசேஜஸ் அம்சம் பயனர் குறிப்பிட்ட நேரத்தை குறித்ததும், குறுந்தகவல் அந்த நேரத்தில் தானாக அழிந்துவிடும். இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. மேலும் இதனை க்ரூப் அட்மின்கள் மட்டுமே இயங்க வைக்க முடியும்.

    தற்சமயம் தனிநபர் உரையாடல்களில் இந்த அம்சத்தை பயனர்கள் பயன்படுத்த முடியாது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களின் பழைய குறுந்தகவல்களை அழிப்பதன் மூலம் போன் ஸ்டோரேஜ் அளவை சேமிக்க முடியும். புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதால், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: wabetainfo
    இந்திய கிராம பகுதிகளில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் இலவச வைபை சேவை மார்ச் 2020 வரை வழங்கப்படும் என மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.



    இந்தியா முழுக்க கிராம பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள இலவச வைபை சேவையான பாரத்நெட் மார்ச் 2020 வரை வழங்கப்படும் என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப  மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    பாரத்நெட் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இதுவரை சுமார் 1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைபை சேவை வழங்கப்படுகிறது. இலவச வைபை சேவையினை இந்தியா முழுக்க 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    பாரத்நெட்

    தற்சமயம் பாரத்நெட் தி்ட்டத்தின் கீழ் சுமார் 48,000 கிராமங்களில் வைபை வசதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொது சேவை மையங்களிலும் வங்கி சேவைகள் வழங்கப்படும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். மேலும் இவை டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பகுதிகளாகவும் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

    ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிரமாங்களாக மாற்றப்பட இருக்கின்றன. ஹரியானாவின் ரெவாரி மாவட்டம் டிஜிட்டல் கிரமாமமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொது சேவை மையம் கிராம அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

    டிஜிட்டல் கிராமங்கள் இணைக்கப்பட்ட கிராமமாக உருவாக்கப்படும். இங்கு பொதுமக்கள் மத்திய அரசின் செயல்திட்டங்களை இ சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் ஊரக பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா செயலியில் டார்க் மோட் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.



    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் டார்க் மோட் மற்றும் சில புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகின்றன. விரைவில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஒ.எஸ். 2.20.10.23 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு டார்க் மோட், லோ டேட்டா மோட் மற்றும் காண்டாக்ட்ஸ் இன்டகிரேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா அம்சம்

    லோ டேட்டா மோட்

    ஐபோன் மொபைல் டேட்டாவில் இருக்கும் போது லோ டேட்டா மோட் மீடியா ஃபைல், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்டவை ஆட்டோ டவுன்லோடு ஆவதை தடுத்து நிறுத்தும். வைபை இல்லாத சமயங்களில் மொபைல் டேட்டா பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்ற அ்மசம் ஐபோன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது. இதனை இயக்க செட்டிங்ஸ் -- செல்லுலார் -- செல்லுலார் டேட்டா ஆப்ஷன் -- லோ டேட்டா மோட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்

    வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா அம்சம்

    காண்டாக்ட்ஸ் இன்டகிரேஷன்

    இந்த அம்சம் ஐபோனில் இருந்து டாக்யூமென்ட் அல்லது ஏதேனும் மீடியா ஃபைல்களை பகிரும் போது, வாட்ஸ்அப் காண்டாக்ட், க்ரூப்கள், ஏர் டிராப் மற்றும் மெயில் ஆப்ஷன்கள் போன்றவை பரிந்துரைக்கப்படும். புதிய ஐ.ஒ.எஸ். ஷேர் ஷீட் மூலம் மல்டிமீடியா தரவுகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம்.

    புகைப்படம் நன்றி: WABetaInfo
    ஹானர் பிராண்டின் மேஜிக்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு இந்திய கணினி சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹானர் பிராண்டு தனது இரு லேப்டாப் மாடல்களை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

    புதிய ஹானர் லேப்டாப்கள் இன்டெல் அல்லது ஏ.எம்.டி. சிப்செட்களை கொண்டிருக்கும் என்றும் இத்துடன் வீகா 10 அல்லது என்விடியா எம்.எக்ஸ்.150 கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீன சந்தையில் ஹானர் மேஜிக்புக் லேப்டாப் விண்டோஸ் லேப்டாப் மாடல்களுக்கு மாற்றான மேக்புக் போன்ற சாதனமாக விற்பனை செய்யப்படுகிறது. இவை ஹூவாயின் மேட்புக் சீரிஸ் மாடல்களின் பட்ஜெட் ரக வேரியண்ட்டாக இருக்கிறது. இந்தியாவில் புதிய ஹானர் லேப்டாப்களின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    ஹானர் மேஜிக்புக் லேப்டாப்

    எனினும், இவை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. லேப்டாப் மட்டுமின்றி 5ஜி ஸ்மார்ட்போன்கள், ஹானர் விஷன் சீரிஸ் மூலம் டி.வி. சந்தையிலும் களமிறங்குகிறது.

    மேலும் ஹூவாய் மீடியா சேவைகளில் கவனம் செலுத்தும் வகையில், ஹானர் பிராண்டு முன்னணி செயலி டெவலப்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூகுள் மொபைல் சேவைகளை நாட வேண்டிய அவசியத்தை பெருமளவு குறைக்க ஹூவாய் திட்டமிட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 2020 புத்தாண்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2020 புத்தாண்டு சலுகையை ஜியோ பயனர்கள் மற்றும் புதிதாக ஜியோபோன் வாங்குவோருக்காக அறிவித்துள்ளது.

    2020 புத்தாண்டு சலுகையின்படி ஜியோ பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ள 12 மாதங்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ரூ. 2020 விலையில் வழங்கப்படுகிறது.

    Jio 2020 Happy New Year Offer

    இது ஜியோவின் ஆல் இன் ஒன் சலுகையை விட ரூ. 179 விலை குறைவு ஆகும். புதிதாக ஜியோபோன் வாங்க விரும்புவோர் ரூ. 2020 கட்டணம் செலுத்தி புதிய ஜியோபோனை வாங்கிக் கொள்ளலாம். இத்துடன் தினமும் 0.5 ஜி.பி. டேட்டா மொத்தம் 12 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    ரூ. 2020 ஜியோ மற்றும் ஜியோபோன் சலுகை ஜியோ வலைத்தளம் மற்றும் செயலியில் கிடைக்கிறது. அனைத்து சலுகைகளிலும் ரிலையன்ஸ் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய 2020 புத்தாண்டு சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.
    ×