என் மலர்tooltip icon

    கணினி

    ரியல்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி இயர்பட்ஸ் விவரங்கள் என்.சி.சி. (தேசிய தகவல் பரிமாற்ற ஆணையம்) சான்று பெற்று இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் RMA205 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    மேலும் புதிய இயர்பட்ஸ் மெல்லிய கேஸ் கொண்டிருக்கிறது. இதன் வடிவமைப்பும் மிக மெல்லியதாக இருக்கிறது. சார்ஜிங் செய்ய மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. இதன் கேஸ் 400 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், ஒவ்வொரு ஹெட்செட்டிலும் 25 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    ரியல்மி பட்ஸ் ஏர் நியோ

    இந்த இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    ரியல்மி பட்ஸ் ஏர் நியோ விலை இந்தியாவில் ரூ. 3000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய முழு விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.
    மீ ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.



    மீ ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்10 பெயரில் புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்பட்ஸ் IPx5 சான்று, ப்ளூடூத் 5.0 மற்றும் சார்ஜிங் கேஸ் பயன்பாட்டை சேர்த்து 23 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    மேலும் எக்ஸ்10 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கென மூன்று அளவுகளில் மென்மையான சிலிகான் மூலம் உருவாக்கப்பட்ட இயர்டிப்கள் வழங்கப்படுகின்றன.

    IPx5 சான்று பெற்றிருப்பதால், உடற்பயிற்சியின் போது ஏற்படும் வியர்வை இயர்பட்ஸ்-ஐ பாதிக்காது. மேலும் இதில் 5 எம்.எம். அளவு கொண்ட மைக்ரோடிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளதால் இதன் ஆடியோ தரம் மேம்பட்டு இருக்கிறது. 

    மீ எக்ஸ்10 வயர்லெஸ் இயர்பட்ஸ்

    ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களுடன் ப்ளூடூத் 5.0 மூலம் இணைந்து கொள்ளும் புதிய இயர்பட்ஸ் சீரான அனுபவத்தை வழங்குகிறது. இயர்பட்ஸ்-ஐ கேசில் இருந்து வெளியே எடுத்ததும், அவை வேகமாக சாதனத்துடன் இணைந்து கொள்ளும். இதனை இயக்கும் கண்ட்ரோல்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க ஒற்றை பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 4.5 மணி நேரம் பயன்படுத்த முடியும். மேலும் சார்ஜிங் கேஸ் கொண்டு கூடுதலாக 18 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் யு.எஸ்.பி. டைப்-சி கொண்டு சார்ஜ் செய்யலாம்.

    புதிய எக்ஸ்10 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    வோடபோன் நிறுவனத்தின் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 997 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.



    ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது சலுகைகளின் விலையை 40 சதவீதம் வரை அதிகரித்தன. அதன் தொடர்ச்சியாக வோடபோன் ரூ. 997 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

    புதிய ரூ. 997 விலை வோடபோன் சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். இத்துடன் ரூ. 499 மதிப்புள்ள வோடபோன் பிளே சந்தா, ரூ. 999 மதிப்புள்ள சீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ரூ. 997 வோடபோன் சலுகை

    இதே போன்ற பலன்களை வழங்கும் சலுகை ரூ. 599 விலையில் ஏற்கனவே வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வோடபோனின் ரூ. 997 விலை சலுகை தற்சமயம் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படவில்லை. விரைவில் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சலுகைகளும் ரூ. 598 மற்றும் ரூ. 599 விலையில் வழங்கப்படுகின்றன. எனினும், இவை 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கவில்லை. வோடபோன் வரிசையில் மற்ற நிறுவனங்களும் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ஏர்டெல் நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கப்படுகிறது.



    ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் பலன்களுடன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பாரதி ஆக்சா உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் ரூ. 179  சலுகை

    இத்துடன் புதிய சலுகையில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் பிரீமியம் சந்தா, விண்க் மியூசிக் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே இதேபோன்ற பலன்கள் நிறைந்த சலுகையினை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 149 விலையில் வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகையில் உயிர் காப்பீடு வழங்கப்படவில்லை.
    ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி வசதி கொண்ட ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 5ஜி ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபேட் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 2020 ஐபோன் வெளியீட்டு விழாவிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கென ஆப்பிள் நிறுவனம் தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் உபகரணங்களை உருவாக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஐபேட் மாடல்களை அப்டேட் செய்து 5ஜி ஐபேட் மாடலை மட்டும் தாமதமாக வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டின் முதல் அரையாண்டு கால்கட்டத்தில் பின்புறம் 3டி சென்சிங் வசதி கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் டைம் ஆஃப் ஃபிளைட் சிஸ்டத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஐபோன் எஸ்.இ. 2


    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் எஸ்.இ.2 மாடலை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இது பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. கைரேகை சென்சார், 3 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம். ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் 3சி சான்று மற்றும் 5வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் துவக்க விலை 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 32,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கூகுள் செயலி ஃபேஸ்புக்கை முந்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியிருக்கிறது.

    கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

    இந்த ஆய்வில் கடந்த ஒரு வருட கணக்கில் ஃபேஸ்புக் முன்னணியில் உள்ளது. கடந்த 12 மாதங்களில் ஃபேஸ்புக் செயலி சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. கூகுள் செயலிகளை சுமார் 230 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.

    ஆப் டவுன்லோடு பட்டியல் சென்சார் டவர்

    உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலின் ஐந்தில் நான்கு செயலிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமாக இருக்கின்றன. இவற்றில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இருக்கின்றன. 

    பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி கடந்த ஆண்டின் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2019 நான்காவது காலாண்டில் டிக்டாக் டவுன்லோடுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகரித்தது. 

    கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது நான்காவது காலாண்டில் டவுன்லோடுகள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் டிக்டாக் வருவாய் 2018 நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் 540 தவீதம் அதிகரித்து இருக்கிறது. 

    புகைப்படம் நன்றி: Sensor Tower
    இந்திய சந்தையில் நாய்ஸ் பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.



    அணியக்கூடிய சாதனங்களுக்கு பெயர் பெற்ற நாய்ஸ் பிராண்டு இந்திய சந்தையில் நாய்ஸ் ஷாட்ஸ் XO பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.0, குவால்காம் ஆப்ட் எக்ஸ் தொழில்நுட்பம், நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் IPX7 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் ஷாட்ஸ் XO

    நாய்ஸ் ஷாட்ஸ் XO சிறப்பம்சங்கள்

    ப்ளூடூத் 5.0 மற்றும் குவால்காம் ஆப்ட்எக்ஸ் கொண்ட நாய்ஸ் கேன்சலேஷன் வசதி
    ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள்
    வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX7
    வட்ட வடிவம் கொண்ட சார்ஜிங் கேஸ் மற்றும் மெட்டாலிக் ஃபினிஷ்
    கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட்
    40 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட்

    நாய்ஸ் ஷாட்ஸ் XO ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு மற்றும் மெட்டாலிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் 1500 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 1,999 விலையில் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிவித்துள்ளது. பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் காம்போ சலுகை நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது. முதற்கட்டமாக இச்சலுகை சென்னை மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 1500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2 எம்.பி.யாக குறைக்கப்பட்டு விடும். 

    புதிய 1500 சி.எஸ்.55 பிராட்பேண்ட் சலுகையில் இந்தியாவிற்குள் அனைத்து பகுதிகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1500 ஜி.பி. டேட்டா, நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இதற்கு ஒருமாத தொகையினை பாதுகாப்பு முன்பணமாக செலுத்த வேண்டும்.

    இண்டர்நெட்

    வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை ஏப்ரல் 6, 2020 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மற்ற பாரத் ஃபைபர் சலுகைகளை போன்று இந்த சலுகையிலும் ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜியோஃபைபர் ரூ. 2499 பிராட்பேண்ட் சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோஃபைர் ரூ. 2499 சலுகையில் நொடிக்கு 500 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையில் 1250 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 
    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மார்கியூ பிராண்டிங்கில் முதல் லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மார்கியூ பை ப்ளிப்கார்ட் பிராண்டிங்கின் முதல் லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபால்கன் ஏர்புக் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய லேப்டாப் 13.3 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மிக மெல்லியதாகவும், எடை குறைவாக உருவாகி இருக்கும் ஃபால்கன் ஏர்புக் மாடலின் திரையில் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள புதிய லேப்டாப் 16.5 எம்.எம். அளவு மெல்லியதாக இருக்கிறது.

    ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்

    ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் 37 Whr பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் லேப்டாப்பை ஐந்து மணி நேரங்கள் தொடர்ந்து பயன்டுத்த முடியும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்பின் விற்பனை ஜனவரி 17-ம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு துவக்கத்தில் ஒவர்பவர்டு என்ற பிராண்டிங்கில் கேமிங் சார்ந்த லேப்டாப்களை வால்மார்ட் அறிமுகம் செய்தது. எனினும், ஹார்டுவேரில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் விலை காரணமாக இவற்றின் விற்பனை விரைவில் நிறுத்தப்பட்டது.
    டி.சி.எல். நிறுவனத்தின் சி8 சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டி.சி.எல். நிறுவனத்தின் புதிய சி8 சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டி.சி.எல். சி8 4K ஏ.ஐ. டி.வி. சீரிஸ் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. 

    இவற்றில் 55 இன்ச் மாடலில் 54.6 இன்ச் டிஸ்ப்ளேவில் 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 4K பேனல் கொண்டிருக்கும் இந்த டி.வி.யில் டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 மற்றும் டி.சி.எல். நிறுவனத்தின் வைடு கலர் கமுட், ஹெச்.டி.ஆர். டைனமிக் காண்டிராஸ்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

    இந்த டி.வி. டூயல் கோர் பிராசஸர், டூயல் கோர் ஜி.பி.யு. மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஆன்கியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் இதில் ஏ.ஐ. ஃபார்-ஃபீல்டு குரல் அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் டி.வி.யினை தங்களது குரல் மூலமாகவே இயக்க முடியும்.

    டி.சி.எல். சி8 சீரிஸ் 4K ஸ்மார்ட் டி.வி.

    இதில் டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், கூகுள் பிளே ஸ்டோர் வசதி, பில்ட் இன் கூகுள் அசிஸ்டண்ட் சேவை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. 2.0, SPDDIF டிஜிட்டல் ஆடியோ ஆப்டிக்கல், 1 எக்ஸ் ஆடியோ அவுட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    சி8 சீரிஸ் உடன் டி.சி.எல். நிறுவனம் மொத்தம் ஏழு அல்ட்ரா இன்வெர்ட்டர் ஏ.சி. மாடல்களையும். டி.சி.எல். ஹோம் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கொண்டு வீட்டில் உள்ள பல்வேறு சாதனங்களை ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும்.

    இந்தியாவில் டி.சி.எல். சி8 55 இன்ச் 4K டி.வி. விலை ரூ. 49,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் சேவையை மாதாந்திர வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் சேவையினை உலகம் முழுக்க சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும் கூகுள் அசிஸ்டண்ட் சேவை இயங்கும் சாதனங்கள் எண்ணிக்கையும் 50 கோடிக்கும் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட சுமார் 10 கோடிக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருந்தது.

    அமேசானை விட கூகுள் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் ஆகும். கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சுமார் 250 கோடிக்கும் அதிகமான சாதனங்களில் இயங்குகிறது. அந்த வகையில் நான்கில் ஒரு சாதனத்திற்கும் குறைவாகவே கூகுள் அசிஸ்டண்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது.

    கூகுள் அசிஸ்டண்ட்

    ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனங்களில் சுமார் 200 கோடி சாதனங்களில் கூகுள் அசிஸ்டண்ட் சேவை பயன்படுத்தப்படவில்லை என தெரிகிறது. இதற்கான காரணம் சேவை சீராக இல்லாதது மற்றும் பயனர்கள் இதனை பயன்படுத்த மறுப்பது உள்ளிட்டவைகளாக இருக்கலாம்.

    கூகுள், அமேசான், ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்த வைக்கவே விரும்புகின்றன. இந்நிறுவனங்கள் வாய்ஸ் டேட்டா விவரங்களில் எதிர்காலம் இருப்பதாக நம்புகின்றன. 

    இவற்றை கொண்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரங்கள் மூலம் கொண்டு சேர்க்க முடியும். மேலும் பெரும் நிறுவனங்களின் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் சேவைகளில் வாடிக்கையாளர்களின் வாய்ஸ் டேட்டா மிக எளிதில் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.
    அமேஸ்ஃபிட் நிறுவனம் 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    அமேஸ்ஃபிட் நிறுவனம் தனது டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2020 சி.இ.எஸ். விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 12 விதிமுறைகளை பூர்த்தி செய்யும் ராணுவ தரச்சான்று பெற்று இருக்கிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம், GPS + GLONASS, தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயன்படுத்தும் வசதி, 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. 14 ஸ்போர்ட்ஸ் மோட் பயன்படுத்தும் வசதி கொண்ட புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வடிவமைப்பு, பயோடிராக்கர் பி.பி.ஜி., எந்நேரமும் இதய துடிப்பை டிராக் செய்யும் ஆப்டிக்கல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    அமேலஸ்ஃபிட் டி ரெக்ஸ்

    அமேஸ்ஃபிட் டி ரெக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 1.3-இன்ச் 360x360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆண்ட்ராய்டு 5 மற்றும் ஐ.ஓ.எஸ். 10 தளங்களுடன் இயங்கும்
    - ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் (PPG)
    - 3-ஆக்சிஸ் அக்செல்லரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார்
    - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM)
    - ப்ளூடூத் 5.0 எல்.இ., GPS+GLONASS
    - MIL-STD 810G சான்று
    - 19 ஸ்போர்ட்ஸ் மோட்
    - 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அமேஸ்ஃபிட் டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ஆஷ், கமோஃபிளேஜ், கிரீன் மற்றும் காக்கி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 139.9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 10,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அமேஸ்ஃபிட் பிப் எஸ்

    இத்துடன் அமேஸ்ஃபிட் நிறுவனம் பிப் எஸ் மாடலை பல்வேறு நிறங்களால் ஆன ஸ்டிராப்களுடன் அறிமுகம் செய்துள்ளது. 30 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த சாதனத்தில் 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், 40 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
    ×