என் மலர்
கணினி
வியர் ஒ.எஸ். மற்றும் இசிம் வசதியுடன் நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்று உருவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் வியர் ஒ.எஸ். கொண்டிருக்கும் என்றும் இதில் இசிம் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இசிம் வசதி இருப்பதால் ஸ்மார்ட்போன் இல்லாமலேயே இணைய வசதியை பெற முடியும். இரு அம்சங்கள் தவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
நோக்கியா ஸ்மார்ட்வாட்ச் மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனிலும் இசிம் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், இசிம் வசதி டூயல் சிம் போன்று இருக்குமா அல்லது போனில் சிம் ஸ்லாட் முழுமையாக நீக்கப்பட்டு விடுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இசிம் வசதி இருக்கும் பட்சத்தில் நெட்வொர்க்கில் இருந்தபடி அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல் அனுப்புவது மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போனுடன் இணைக்காமலேயே பயன்படுத்த முடியும்.
முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் சிம்லி எனும் பெயரில் புதிய காப்புரிமையை பெற விண்ணப்பித்து இருப்பதாக கூறப்பட்டது. சிம் மற்றும் இசிம் கார்டுகளின் பிரிவில் காப்புரிமை பெறவிண்ணப்பிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.
காப்புரிமை விவரங்கள் புதிய நோக்கியா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இசிம் வசதி வழங்கப்பட இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.
நோக்கியா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நோக்கியா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் பிப்ரவரி 23-ம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹார்மனோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆடியோ சாதனங்களை உருவாக்கி வரும் ஹார்மனோ நிறுவனம் இந்தியாவில் ஸ்போர்டோ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. நெக்பேண்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய இயர்போனில் ப்ளூடூத் 5.0, சிறப்பான பேட்டரி பேக்கப், தரமான ஆடியோ ரெசல்யூஷன் வழங்குகிறது.
22 கிராம் எடை கொண்டிருக்கும் ஹார்மனோ ஸ்போர்ட்டோ இயர்போனில் காந்த சக்தி கொண்ட இயர் கப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் மற்றும் A2DP AVRCP வசதி கொண்டிருக்கிறது. 10 மீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும் ஸ்போர்ட்டோ இயர்போனின் அம்சங்களை இயக்க பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

பில்ட் இன் மைக்ரோபோன் வசதி கொண்டிருப்பதால், அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. ஹார்மனோவின் உயர்ரக சி.வி.சி. நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் இருப்பதால், சுற்றுப்புற சத்தங்களின் இடையூறின்றி ஆடியோவை அனுபவிக்கலாம். 180 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருப்பதால் 16 மணி நேரத்திற்கும் அதிக பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.
புதிய ஹார்மனோ ஸ்போர்ட்டோ இயர்போனினை முழுமையாக சார்ஜ் செய்ய 1.5 மணி நேரம் ஆகும். ஹார்மனோ ஸ்போர்ட்டோ வயர்லெஸ் இயர்போன் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் கொண்ட நோக்கியா பவர் இயர்பட்ஸ் விற்பனை துவங்கி இருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பவர் இயர்பட்ஸ் விற்பனை துவங்கியிருக்கிறது. 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கும் நோக்கியா பவர் இயர்பட்ஸ் 150 மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
நோக்கியா பவர் இயர்பட்ஸ் மாடலில் IPX7 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா பவர் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்:
- உயர் ரக ஆடியோ மற்றும் 6 எம்.எம். கிராஃபீன் டிரைவர்கள்
- ப்ளூடூத் 5.0 வசதி
- வாய்ஸ் அசிஸ்டண்ட்
- டச் கண்ட்ரோல்கள்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- ஒவ்வொரு இயர்பட் 50 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது
- 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ்
- யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் வசதி
நோக்கியா பவர் இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் லைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 699 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 7,130 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் வலைதளத்தின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் உரையாடல்கள் அம்சத்திற்கான வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் ட்விட்டர் உரையாடல்களில் புதிய மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பு கொண்டு பயனர்கள் மிக தெளிவாக பதில் அளிக்க முடியும். இது ரெடிட் தளத்தில் உள்ள அம்சத்தை போன்று காட்சியளிக்கிறது. ட்விட் பதி்ல்கள் இனி லின்க் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் உரையாடல்களை மிக தெளிவாக பார்க்க முடியும்.

புதிய வடிவமைப்பு சில மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் இதற்கான அப்டேட் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே அம்சம் ட்விட்டர் ப்ரோடோடைப் செயலியான Twttr-ல் வழங்கப்பட்டு இருந்தது. ட்விட்டர் ரிவர்ஸ் என்ஜினியரான ஜேன் மன்சுன் வொங் உரையாடல்களில் புதிய வடிவமைப்பை சோதனை செய்து வந்தார்.
அந்த வகையில் சோதனையின் அடுத்தக்கட்டமாக இந்த புதிய வடிவமைப்பு ட்விட்டர் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வடிவமைப்பு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
கியூ-ஐ சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜர் ஒன்றை ரியல்மி பிராண்டு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியல்மி பிராண்டு விரைவில் கியூ.ஐ. சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியல்மி பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்த போதே அந்நிறுவனம் வயர்லெஸ் சார்ஜர் சாதனத்திற்கான டீசரை வெளியிட்டிருந்தது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர் விற்பனை விரைவில் துவங்கும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வயர்லெஸ் பவர் கன்சோர்டியம் வலைதளத்தில் ரியல்மி வயர்லெஸ் சார்ஜர் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வயர்லெஸ் சார்ஜர் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது. புதிய வயர்லெஸ் சார்ஜர் ரியல்மி அல்லாத மற்ற நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களிலும் இயங்கும் என கூறப்படுகிறது.

ரியல்மி பிராண்டு இதுவரை வெளியிட்டிருக்கும் சாதனங்களில் ரியல்மி பட்ஸ் ஏர் மட்டுமே வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. விரைவில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது. வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் ரியல்மி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் 5வாட் வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
பெரும்பாலான கியூ.ஐ. லயர்லெஸ் சார்ஜகளில் 10 வாட் வரையிலான திறன் வழங்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் அதிக பிரபலமாகி வரும் நிலையில், 10 வாட் திறன் குறைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
காலணி சந்தையில் பிரபலமாக அறியப்படும் புமா பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
காலணி வகைகளை விற்பனை செய்வதில் சர்வதேச சந்தையில் பிரபலமாக அறியப்படும் புமா பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக புமா ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டது.
ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் புகழ்பெற்ற ஃபாசில் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை புமா வடிவமைத்து இருக்கிறது. புமா ஸ்மார்ட்வாட்ச் மாடல் கூகுளின் வியர் ஒ.எஸ். கொண்டு இயங்குகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 வியர் பிராசஸர், 1.19 இன்ச் AMOLED 390x390 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
புமா ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. அலுமினியம் டயல் மற்றும் சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் புமா ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 4.2 மற்றும் பில்ட் இன் ஜி.பி.எஸ். வசதி, பின்புறம் இதய துடிப்பு சென்சார் கொண்டிருக்கிறது.

புதிய புமா ஸ்மார்ட்வாட்ச் கூகுள் ஃபிட் மூலம் பல்வேறு உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்ய துவங்கும் போது, ஸ்மார்ட்வாட்ச் வொர்க்-அவுட் மோடில் செட் செய்துவிட்டால் பயனர் இதய துடிப்பையும் தொடர்ச்சியாக டிராக் செய்யும்.
வியர் ஒ.எஸ். கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது. இத்துடன் ஸ்விம் ப்ரூஃப் வசதி மற்றும் என்.எஃப்.சி. வசதி இருப்பதால் கூகுள் பே மூலம் பேமண்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
இந்தியாவில் புமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 19,995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியா முழுக்க புமா விற்பனை மையங்களில் கிடைக்கிறது. ஆன்லைனில் புமா வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கிட முடியும். புதிய புமா ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஃபாசில் நிறுவனம் இந்தியாவில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பாரம்பரிய வாட்ச் தோற்றத்தில் பயனர்களுக்கு ஸ்மார்ட் அம்சங்களின் விவரங்களை காண்பிக்கும் புதிய வாட்ச் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என ஃபாசில் தெரிவித்துள்ளது. புதிய ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இதய துடிப்பை டிராக் செய்து விவரங்களை வழங்கும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
ஹைப்ரிட் ஹெச்.ஆர். வாட்ச் அழைப்புகள், குறுந்தகவல்களுக்கான நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இத்துடன் இதய துடிப்பு, உடற்பயிற்சி மற்றும் ரியல்-டைம் வானிலை விவரங்களையும் வழங்குகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

இத்துடன் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் டெக்ஸ்ட் / இமெயில், அழைப்புகளை ஏற்கும் வசதி உள்ளிட்டவையும் மூன்று புஷ் பட்டன்களும் வழங்கப்படுகிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.
ப்ளூடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டால் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் ஆப் கொண்டு அதிகளவு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இத்துடன் வாட்ச் ஃபேஸ் டையலினை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.
இத்துடன் லெதர் ஸ்டிராப்களை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் லெதர், சிலிகான் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என அவரவர் விரும்பும் ஸ்டிராப்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவில் ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். கொலிடர் டார்க் பிரவுன் லெதர் மற்றும் கொலிடர் பிளாக் சிலிகான் வெர்ஷன்களின் விலை ரூ. 14,995 என்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெர்ஷன் ரூ. 16,495 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.
ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் நடைபெற்ற விழா ஒன்றில் ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2020 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஒப்போ தெரிவித்தது.
அந்த வகையில் ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புகைப்படத்தை ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியன் ஷென் வெளியிட்டிருக்கிறார். புகைப்படத்தில் ஒப்போவின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
இத்துடன் ஸ்மார்ட்வாட்ச் மாடல் கோல்டு கேசிங் மற்றும் பக்கவாட்டில் இரண்டு பட்டன்களை கொண்டிருக்கிறது. இவற்றில் ஒரு பட்டன் நோட்டிஃபிகேஷன் லைட் கொண்டிருக்கும் என தெரிகிறது. பட்டன்களிடையே மைக்ரோபோன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஒப்போ நிறுவன முதல் ஸ்மார்ட்வாட்ச் 5ஜி வெர்ஷன் ஒன்றும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புகைப்படத்தில் சிலிகான் ஸ்டிராப் வழங்கப்படுவதும், லெதர் ஸ்டிராப் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ ஃபைண்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் இந்தியாவுக்கான ஆங்கில மொழி சிரி குரல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் முன்னதாக 2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 2018-ம் ஆண்டு முதல் விற்பனை துவங்கியது. இதன் விலை முன்னதாக 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 24,860) என நிர்ணயம் செய்யப்பட்டு பின் விலை குறைக்கப்பட்டு 299 டால்ர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21,300) என மாற்றப்பட்டது.

புதிய ஹோம்பாட் 7 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை குரல் வழியே இயக்க முடியும். இதை கொண்டு இசை, செய்திகள் மற்றும் வீட்டில் உள்ள கனெக்ட்டெட் சாதனங்களை இயக்க முடியும். இதில் உள்ள சென்சார்கள் ஸ்பீக்கர் வீட்டில் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப ஆடியோ அளவுகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது பரிந்துரைகளை அறிந்து கொண்டு இசை சார்ந்த தேடல்களில் பதில்களை அதிவேகமாக வழங்குகிறது. ஹோம்பாட் மாடல் ஏ8 சிப் கொண்டிருக்கிறது. இதில் பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் சாதனத்திலேயே சேமிக்கப்பட்டு, அவை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.
இதில் ஆப்பிள் உருவாக்கிய ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரத்தை மேம்படுத்தி தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒப்பிடும் போது ஆப்பிள் ஹோம்பாட் விலை இந்தியாவில் மட்டும் மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு புதிதாக ரவுட்டர்கள், பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் சீனாவை தொடர்ந்து இந்தியாவில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய ரெட்மி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
முன்னதாக ரெட்மி பிராண்டு லேப்டாப் மாடல்களின் விவரங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் HMSH01GE எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதால், இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

எனினும், இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் வியர் ஒ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் வியர் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான சியோமி Mi வாட்ச் மாடலில் 1.78 இன்ச் AMOLED தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ் வடிவமைப்புகள், குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 மற்றும் 1 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் MIUI சார்ந்த வியர் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
இதை கொண்டு 40 செயலிகளை பயன்படுத்தும் வசதி மற்றும் இசம், 4ஜி வோல்ட்இ காலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய சலுகை ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலை சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய அறிவிப்பின் படி இதன் வேலிடிட்டி 436 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பலன்களை பொருத்தவரை பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரிங் பேக் டோனில் பயனர் விரும்பும் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகை 2018-ம் ஆண்டில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா வழங்கப்பட்டது. பின் கடந்த ஆண்டு தினசரி டேட்டா அளவில் மாற்றம் செய்யப்பட்டு, தினமும் ஒரு ஜி.பி. டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் பேண்ட் 4 ஃபிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூவாய் பேண்ட் 4 இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
ஹூவாய் பேண்ட் 4 மாடலில் 0.96 இன்ச் டி.எஃப்.டி. 80x160 பிக்சல் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அப்போலோ 3 மைக்ரோபிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான அலெர்ட்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன் அம்சங்களுடன் ஹூவாய் பேண்ட் 4 மாடலில் ஒன்பது உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 24 மணி நேரமும் இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹுவாயின் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உடலில் ஏற்படும் ஆறு வெவ்வேறு வகையிலான உறக்கம் சார்ந்த குறைபாடுகளை கண்டறியும் திறன் கொண்டது.

ஹானர் பேண்ட் 5ஐ மாடலை போன்று ஹுவாய் பேண்ட் 4 மாடலினை நேரடியாக சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதை சார்ஜ் செய்ய தனியே கேபிள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இத்துடன் ஃபைண்ட் மை போன், ரிமோட் ஷட்டர் போன்ற வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் பேண்ட் 4 மாடலில் 91 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒன்பது நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹுவாய் பேண்ட் 4 சாதனத்தை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளம் கொண்ட சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும்.
இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 4 மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் கிராஃபைட் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.






