search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹூவாய் பேண்ட் 4
    X
    ஹூவாய் பேண்ட் 4

    இதய துடிப்பு சென்சார் கொண்ட ஹூவாய் பேண்ட் 4 அறிமுகம்

    ஹூவாய் நிறுவனத்தின் பேண்ட் 4 ஃபிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூவாய் பேண்ட் 4 இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

    ஹூவாய் பேண்ட் 4 மாடலில் 0.96 இன்ச் டி.எஃப்.டி. 80x160 பிக்சல் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அப்போலோ 3 மைக்ரோபிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான அலெர்ட்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன் அம்சங்களுடன் ஹூவாய் பேண்ட் 4 மாடலில் ஒன்பது உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 24 மணி நேரமும் இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹுவாயின் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உடலில் ஏற்படும் ஆறு வெவ்வேறு வகையிலான உறக்கம் சார்ந்த குறைபாடுகளை கண்டறியும் திறன் கொண்டது.

    ஹூவாய் பேண்ட் 4

    ஹானர் பேண்ட் 5ஐ மாடலை போன்று ஹுவாய் பேண்ட் 4 மாடலினை நேரடியாக சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதை சார்ஜ் செய்ய தனியே கேபிள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இத்துடன் ஃபைண்ட் மை போன், ரிமோட் ஷட்டர் போன்ற வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் பேண்ட் 4 மாடலில் 91 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒன்பது நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹுவாய் பேண்ட் 4 சாதனத்தை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ்.  9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளம் கொண்ட சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும்.

    இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 4 மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் கிராஃபைட் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    Next Story
    ×