search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்
    X
    ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்

    இன்டெல் கோர் பிராசஸருடன் ஃபால்கன் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மார்கியூ பிராண்டிங்கில் முதல் லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மார்கியூ பை ப்ளிப்கார்ட் பிராண்டிங்கின் முதல் லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபால்கன் ஏர்புக் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய லேப்டாப் 13.3 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மிக மெல்லியதாகவும், எடை குறைவாக உருவாகி இருக்கும் ஃபால்கன் ஏர்புக் மாடலின் திரையில் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள புதிய லேப்டாப் 16.5 எம்.எம். அளவு மெல்லியதாக இருக்கிறது.

    ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்

    ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் 37 Whr பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் லேப்டாப்பை ஐந்து மணி நேரங்கள் தொடர்ந்து பயன்டுத்த முடியும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் ஃபால்கன் ஏர்புக் லேப்டாப்பின் விற்பனை ஜனவரி 17-ம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு துவக்கத்தில் ஒவர்பவர்டு என்ற பிராண்டிங்கில் கேமிங் சார்ந்த லேப்டாப்களை வால்மார்ட் அறிமுகம் செய்தது. எனினும், ஹார்டுவேரில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் விலை காரணமாக இவற்றின் விற்பனை விரைவில் நிறுத்தப்பட்டது.
    Next Story
    ×