search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹைஃபியூச்சர் நெக்லேஸ்
    X
    ஹைஃபியூச்சர் நெக்லேஸ்

    12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

    ஹைஃபியூச்சர் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்போன் நெக்லேஸ் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ஹைஃபியூச்சர் ஆடியோ பிராண்டு இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹைஃபியூச்சர் நெக்லேஸ் என அழைக்கப்படும் புதிய இன்-இயர் வயர்லெஸ் இயர்போன் உறுதியான நெக்பேண்ட், ஸ்வெட்-ப்ரூஃப் வடிவமைப்பு, ப்ளூடூத் 5.0 மற்றும் நீண்ட பேட்டரி கொண்டிருக்கிறது.

    புதிய இயர்போன் வாடிக்கையாளர்களுக்கு சவுகரிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹைஃபியூச்சர் தெரிவித்துள்ளது. இதன் மென்மையான கிளைடு-ஆன் வடிவமைப்பு, வாடிக்கையாளர்கள் இயர்போனை காதில் வைத்ததும் அதனை அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியத்தை போக்குகிறது.

    ஹைஃபியூச்சர் நெக்லேஸ்

    நெக்பேண்ட் முழுவதும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் இயர்போன்களில் காந்தம் இருப்பதால் பயன்படுத்தாத போது, இவை ஒன்றாக இணைந்து கொள்ளும். இயர்போன்களில் ப்ளூடூத் 5.0 வசதியும், குவால்காம் ஆப்ட் எக்ஸ் மற்றும் ஏ.ஏ.சி. ஹை-ரெஸ் ஆடியோ வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோவை அதிக தரத்தில் வெளிப்படுத்தும்.

    மேலும் புதிய நெக்லேஸ் இயர்போனில் என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென குவால்காம் சி.வி.சி. 8.0 வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து வித சூழலிலும் வெளிப்புற சத்தத்தை குறைத்து வாடிக்கையாளர்கள் தரமான ஆடியோவை அனுபவிக்க வழி செய்கிறது.

    இயர்போன்களில் 3 சிலிகான் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை IPX5 தரச்சான்று பெற்ற ஸ்வெட் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 12 மணி நேரம் வரை இயங்கும் என ஹைஃபியூச்சர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×