search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐ.ஒ.எஸ். 13
    X
    ஐ.ஒ.எஸ். 13

    புதிய எமோஜிக்கள், டீப் ஃபியூஷன் அம்சம் கொண்ட ஐ.ஒ.எஸ். 13.2 வெளியீடு

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். 13.2 இயங்குதளம் வெளியிடப்படுகிறது. இதில் புதிய எமோஜிக்கள், டீப் ஃபியூஷன் போன்று பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளத்தை கடந்த மாதம் வெளியிட்டது. பின் சில வாரங்களுக்கு பின் 13.13 அப்டேட் வெளியிடப்பட்டது. 

    இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 13.2, ஐபேட் ஒ.எஸ். 13.2 இயங்குதளங்களை வெளியிட்டுள்ளது. இரு பதிப்புகளிலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐபோன் 11 சீரிஸ் மாடலின் டீப் ஃபியுஷன் கேமரா அம்சம் முதன்மையாக இருக்கிறது.

    இந்த அம்சம் ஏ13 நியூரல் என்ஜின் பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை அதிக தரத்தில் வழங்கும். இந்த அப்டேட் புதிய எமோஜிக்களை வழங்குகிறது. இவை ஆப்பிள் அனுமதித்த யுனிகோட் 12.0 தளம் சார்ந்து இயங்குகிறது. 

    ஐ.ஒ.எஸ். 13 எமோஜி

    இவற்றில் காது கேட்க செய்யும் கருவியுடன் இருக்கும் நபர், சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நபர் என பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    இதுதவிர மக்கள் கைகோர்த்து இருக்கும் எமோஜி பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிரி பிரைவசி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் சிரி, டிக்டேஷன் ஆடியோ ரெக்கார்டிங் ஹிஸ்ட்ரியை அழிக்க முடியும். இந்த அப்டேட் மூலம் சிரி ஐபோனில் வரும் குறுந்தகவல்களை வாசிக்க செய்யும் அம்சத்தை மீண்டும் வழங்குகிறது.

    புதிய அம்சங்கள் தவிர ஐபோன் மற்றும் ஐபேட் இயங்குதளங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டு, அவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
    Next Story
    ×