search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோஜ் திவாரி"

    • பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையில் இன்று தொகுதி பங்கீடு முடிவானது.
    • ராகுலுடன் கெஜ்ரிவால் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீடு இன்று முடிவானது. டெல்லி, குஜராத், அரியானா, கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டன.

    இந்நிலையில், டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதி பா.ஜ.க. எம்.பி.மனோஜ் திவாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருடனும் திருடனும் சகோதரர்களே என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நடந்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைப்பேன் எனக்கூறி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது அவர்களின் காலடியில் விழுந்து கிடப்பதால் ஆம் ஆத்மி கட்சியினர் வருத்தம் அடைந்துள்ளனர்.

    அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, இன்று ராகுல் காந்தியுடன் கெஜ்ரிவால் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சியினரும் வருத்தத்தில் உள்ளனர்.

    பா.ஜ.க.வும் நரேந்திர மோடியும் மக்கள் அனைவரின் இதயத்திலும் உள்ளனர். இனி டெல்லி மக்கள் அனைத்தையும் முடிவுசெய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

    • 15 சர்வதேச போட்டியில் மட்டுமே மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது
    • ரெய்னா, கோலி, ரோகித் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்தனர் என்றார் மனோஜ்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர், மனோஜ் திவாரி (Manoj Tiwary).

    வலது கர பேட்ஸ்மேனான திவாரி, அவ்வப்பொது லெக் ப்ரேக் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் மட்டுமே அவரால் பங்கேற்க முடிந்து.

    2011 டிசம்பரில் தனது முதல் சர்வதேச சதத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மனோஜ் பதிவு செய்தார். ஆனால், அதற்கு பிறகு அவர் பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    தற்போது 38 வயதாகும் மனோஜ், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனியை சந்திக்க நேர்ந்தால் நான் நிச்சயம் சில கேள்விகளை எழுப்புவேன். மேற்கிந்திய அணிக்கு எதிராக சதம் அடித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் "பிளேயிங் லெவன்"  வீரர்களில் என்னை சேர்க்கவில்லை.

    என் மீது தவறு ஏதும் இல்லாத போதும் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என அவரிடம் கேட்பேன். குறிப்பாக, ஆஸ்திரேலியா-இந்தியா போட்டியில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட பலரும் ரன்களை குவிக்க முடியாமல் தவித்தனர். நான் அந்த காலகட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்தேன்.

    ஆனால், அந்த போட்டிக்கு என்னை தவிர்த்தார் தோனி. அது ஏன் என அவரிடம் கேட்பேன்.

    14 போட்டிகளில் தொடர்ந்து நான் புறக்கணிக்கப்பட்டேன்.

    தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் போது அதை எவரேனும் அழித்தால், அந்த நடவடிக்கையே விளையாட்டு வீரரை கொன்று விடும்.

    வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் நானும் கோலி அல்லது ரோகித் போன்று சிறப்பான வீரராக உருவெடுத்திருக்க முடியும்.

    தற்போது நான் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. 

    இவ்வாறு திவாரி கூறினார்.

    12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய மனோஜ் திவாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முழு நேர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    ×