search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள் விலை"

    • சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
    • 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாளையொட்டி இன்று மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கிறது. இதனால் நேற்று மாலை முதலே கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பூ விற்பனை விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்ற நிலையில் இன்று அதன் விலை ரூ.1,500ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் ஒரு கிலோ ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சாமந்தி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 50 வாகனங்கள் மூலம் பூ விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது' என்றார்.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிலோவில் வருமாறு :-

    மல்லி-ரூ.1,500, ஜாதி- ரூ.500, முல்லை- ரூ.900, கனகாம்பரம்- ரூ.1,000, சாமந்தி- ரூ.180, பன்னீர் ரோஜா- ரூ.120 சாக்லேட் ரோஜா- ரூ.160, அரளி- ரூ.200 முதல் ரூ.400வரை, சம்பங்கி- ரூ.200.

    • தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
    • சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.320 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.1000-ம் ஆக அதிகரித்தது. இதேபோல் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப் பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜாதி மல்லி ரூ.600-க் கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தவிர பிற பூக்களின் விலை வழக்கம்போல் காணப்பட்டது.

    சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.இவ்வாறு மல்லி முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்த போதிலும் பண்டிகையை கருதி பொதுமக்களும் வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.
    • சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் இன்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. ரோஜா ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • விண்ணை முட்டும் அளவிற்கு பூக்கள் விலை உயர்வால் வாங்க வரும் மக்கள் தவிக்கின்றனர்.
    • குத்தகை முறையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரைச் சுற் றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு வந்து செல்கின்றனர்.

    சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களுக்கு பூ மாலைகள் வாங்குவதற்கு தேவ கோட்டை நகரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பூக்கடை உரிமையாளர்கள் தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத் திற்கு மேல் எந்த பூக்க டைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அவர் விலை நிர்ணயம் செய்து கொள்ள லாம். அன்றைய தினம் மல்லி கைப்பூ சாதாரண நாளில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதை அன்றைய தினம் ரூ.100-க்கும், சிறிய வகை மாலை சாதாரண நாளில் ரூ.50-க்கு விற்பனை செய் வதை ரூ.100 முதல் ரூ.150-க்கும் பெரிய மாலைகள் சாதாரண நாளில் ரூ.500-க்கு விற்பனை செய்வதை ரூ.1,000-க்கும் மேலும் விற்பனை செய்கின்றனர்.

    இந்த நாட்களில் ஏலம் எடுத்த ஒரு பூ கடை மட்டுமே திறந்து இருப்பதால் பொது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. மேலும் தரம் குறைந்தும் அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகி றார்கள். பூக்கடை உரிமை யாளர்கள் இந்த நூதன மோசடி யால் கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வேதனையுடன் அன்றைய தினம் பூ மற்றும் மாலை களை வாங்கி செல்கி ன்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வழக்க மான நடை முறை போல் பூக்கடைகள் செயல்பட்டால் பொதுமக்கள் நிம்மதி அடை வார்கள் என்பது அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் நாமக்கல் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- மல்லிகை பூ (1 கிலோ)- ரூ.600, பச்சை முல்லை - ரூ.400, வெள்ளை முல்லை - ரூ.350, சாமந்தி - ரூ.450, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • ஆடி மாதத்தின் தொடர் விழாக்களால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
    • சம்பங்கி கிலோ 140 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 80 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    தருமபுரி,

    ஆடி மாதம் சக்தியாகி களும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் தமிழர்க ளின் பண்டிகைகள் ஆடியில் தொடங்குகிறது.

    இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுவதால். இந்த நாட்களில் தமிழர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் மாரியம்மன் வழிபாடு, காது குத்து உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆனி மாதத்தில் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது ஆடி மாதத்தின் தொடர் விழாக்களால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ 360 ரூபாய், சன்னமல்லி கிலோ 220 ரூபாய், கனகா மரம் கிலோ 400 ரூபாய், காக்டா கிலோ 260 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 240 ரூபாய், மூக்குத்தி கிலோ 160 ரூபாய், அரளி கிலோ 120 ரூபாய், சம்பங்கி கிலோ 140 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 80 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நாளை வரும் ஆடி பவுர்ணமி மற்றும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, முக்கிய நாட்களில் பூக்களின் விலை கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புத்தாண்டு பிறப்பு, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்காக பூக்களின் விலை உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
    • மல்லி, முல்லை விலையை ஒப்பிடுகையில் ரோஜா பூக்களின் வலை குறைவாக உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    வடகிழக்கு பருவ மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட்டிற்கு வழக்கமாக வரும் சுமார் 2 டன் பூக்களுக்கு பதிலாக தற்போது சுமார் 20 ஆயிரம் கிலோ பூக்கள் மட்டுமே வருகின்றன.

    விழாக் காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-

    ஓசூர் பூ வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி ரெட்டி கூறுகையில், கடந்த சிவ மாதங்களில் கன மழை காரணமாக மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் தோட்டத்திலேயே கருகியும், உதிர்ந்தும் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது. பூ வியாபாரிகளும் பாதிப்படைந்தனர்.

    தற்போது கடந்த ஓரிரு நாட்களாக பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. புத்தாண்டு பிறப்பு, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்காக பூக்களின் விலை உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகளுக்கும் லாபம் கிடைத்து வருகிறது என்று கூறினார்.

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகைநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி பிரேமா என்பவர் கூறுகையில் ,பெண்கள் விரும்பிய பூக்களை வாங்கி சூடுவதிலும், கோவிலுக்கு வாங்கித் தருவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் விலைக்கு ஏற்றவாறும், சீசனுக்கு ஏற்ற பூக்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் பணத்தை சிக்கனப்படுத்த முடியும் என்பதுடன், அதிகளவு பூக்களை சூடவும் முடியும்,

    கோவிலுக்கு வாங்கித் தரவும் முடியும். அந்தவகையில் தற்போது சாமந்தி பூ மற்றும் ரோஜாப்பூ சீசனாக இருப்பதால் அவற்றை வாங்கி பயன்படுத்தும் மனநிலைக்கு மாறிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தேன்கனிக்கோட்டை யைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி சாதனா கூறியதாவது:-தற்போது பனிக்காலம் என்பதால் ஜாதி மல்லி, முல்லை பூக்கள் சீசன் இல்லை. இந்த வகை பூக்கள் முழம் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதை அனைவராலும் வாங்க முடியாது. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ரோஜாக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

    மல்லி, முல்லை விலையை ஒப்பிடுகையில் ரோஜா பூக்களின் வலை குறைவாக உள்ளது. எனவே பலரும் அதை வாங்கி செல்கிறார்கள் என்று கூறினார்.

    • தற்போது கடும் பனி நிலவிவரூவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வரூகிறது.
    • பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து வரூகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரூந்தும் ஈரோடு பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது கடும் பனி நிலவிவரூவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வரூகிறது.

    மேலும் தற்போது கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த நாள், கார்த்திகை தீபம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இரூந்து கோவிலுக்கு செல்வதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து வரூகிறது.

    அதிக பட்சமாக ஒரூ கிலோ மல்லிகை பூ ரூ. 3ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் முல்லைப்பூ கிலோ ரூ. 2ஆயிரத்துக்கும், காக்கட்டான் பூ கிலோ ரூ. 800 க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ. 120-க்கும், அரளி பூ கிலோ ரூ. 300-க்கும், சம்பங்கி பூ கிலோ ரூ. 50-க்கும் விற்பனை செய்யப்படு–கிறது.

    இதே போல் துளசி, மரிக்ெகாழுந்து, ரோஜா ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.

    பூக்களின் விலை கிலோவிற்கு ரூ.1,000 வரை உயர்ந்துவிட்டது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகில் பூவிற்கு என தனியாக பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது. இங்கு மல்லிகை, அரும்பு, காக்கட்டான், கனகாம்பரம், ரோஜப்பூ, கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற பல்வேறு பூக்கள் சில்லரையிலும், கட்டியும் விற்கப்படுகிறது.வேலை நிமித்தமாக கடலூருக்கு வரும் அனைவருமே இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வர்.

    இதுதவிர, கடலூரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த பூக்கடை வைத்திருப்பவர்களும் இங்கு வந்து பூவை வாங்கி சென்று கட்டி விற்பனை செய்வார்கள்.

    குறிப்பாக கனகாம்பரம், காக்கட்டான், ரோஜாப்பூ, அரும்பு, மல்லிகை வகைகள் என பல்வேறு வகையான பூக்கள் தேனி, கம்பம், மதுரை, கர்னாடகா போன்ற பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தே வருகிறது. கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற சிலவகை பூக்கள் மட்டுமே கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாங்கப்படுகிறது.

    கடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி போன்ற உணவிற்கான விவசாய பயிர்கள் மட்டுமே அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    விவசாயிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பூ போன்ற மாற்று விவசாயத்தில் ஈடுபடுகின்னர். இதனால் அனைத்து வகையான பூக்களுமே வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தே வாங்கி விற்கப்படுகிறது.

    இன்று காலை பூக்களின் விலை கிலோவிற்கு ரூ.1,000 வரை உயர்ந்துவிட்டது. அதாவது நேற்று வரை 

    • ராமநாதபுரத்தில் பூக்களின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது. மதுரை, புதுக்கோட்டை சந்தைகளில் இருந்து மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்கி வந்து சந்தையில் விற்கின்றனர்.

    இதன் காரணமாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, தொடர்ந்து முகூர்த்த நாட்கள் எதிரொலியாக பூக்களின் விலை வழக்கமான விலையை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விநாயகா் சதுா்த்திக்கான பூக்கள் வாங்கத் தயக்கம் காட்டினா்.

    மேலும் வழக்கமான அளவை விட குறைவாக பூக்களை மக்கள் வாங்கிச் சென்றனர். இதனால் பூ விற்பனை குறைந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பூக்கட்டும் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு மல்லிகை ரூ.400-க்கு விற்றது ரூ.1600-க்கும், 300-க்குவிற்ற ரோஜா ரூ.800, ரூ.400-க்கு விற்ற முல்லை ரூ.1700, செவ்வந்தி ரூ.150ல் இருந்து ரூ.750 என விலை அதிகரித்துஉள்ளது. ரூ.10-க்கு விற்ற கதம்பம் மூழம் ரூ.20-க்கு விற்கின்றனர். அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    • மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர்.
    • விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ளது.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    குவிந்த மக்கள்

    இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக வ.உ.சி. மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். இதனை வாங்க சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள்மற்றும் பொது மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

    தொடர்ந்து போட்டி, போட்டு பூக்களைஅதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 1000 ரூபாயாக உயர்ந்தது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன் விலை விவரம் வருமாறு:-

    முல்லை ஒரு கிலோ 600, ஜாதிமல்லி 280, காக்காட்டான் 400, கலர் காக்காட்டான் 360, சம்பங்கி 140, அரளி 260, மஞ்சள் அரளி, செவ்வரளி 300, நந்தியாவட்டம் 250 ரூபாய்க்கும் விற்பனையானது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×