search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு: மல்லிப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு: மல்லிப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை

    • சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
    • 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாளையொட்டி இன்று மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கிறது. இதனால் நேற்று மாலை முதலே கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பூ விற்பனை விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்ற நிலையில் இன்று அதன் விலை ரூ.1,500ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் ஒரு கிலோ ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சாமந்தி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 50 வாகனங்கள் மூலம் பூ விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது' என்றார்.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிலோவில் வருமாறு :-

    மல்லி-ரூ.1,500, ஜாதி- ரூ.500, முல்லை- ரூ.900, கனகாம்பரம்- ரூ.1,000, சாமந்தி- ரூ.180, பன்னீர் ரோஜா- ரூ.120 சாக்லேட் ரோஜா- ரூ.160, அரளி- ரூ.200 முதல் ரூ.400வரை, சம்பங்கி- ரூ.200.

    Next Story
    ×