search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திராவிட மாடல் ஆட்சி"

    • எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
    • கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பில் 12 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    சென்னை :

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் ரூ. 184 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதன்பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * சமூக நீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    * சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை உருவாக்க முயற்சி.

    * எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

    * அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    * ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும், பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.

    * அம்பேத்கர் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

    * தாட்கோ மூலம் 10 ஆயிரம் பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * முதலீட்டு மானியம் வழங்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பில் 12 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

    * பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * சமூக வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சபாநாயகர் அப்பாவு பேச்சு
    • நாகரில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

    நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீதம், உள்ளாட்சியில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்தது. மேலும் பெண்கள் அந்த காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எந்திரமாகத் தான் இருந்தனர். அப்படிப்பட்ட அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர் தான். காமராஜர், பெரியார், கலைஞர் போன்றவர்கள் பெண்கள் படிப்பதற்கான உரிமையை பெற்றுக் கொடுத்தார்கள். சொத்தில் சம உரிமை என்பதை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அன்றைய காலகட்டத்தில் ஜாதி அடிப்படையில் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டது.

    அய்யா வைகுண்டருக்கு, முடிசூடும் பெருமாள் என்று பெயர் இருந்தது. அதை மாற்றி முத்துக் குட்டி என்று வைத்தார்கள். பேரை கூட மாற்றும் நிலை இருந்தது. மார்பில் துணி அணியக்கூடாது. தலையில் தலைப்பாகை அணியக்கூடாது காலில் செருப்பு அணியக்கூடாது என்ற நிலையை மாற்றி காட்டினார்கள். பெண் கல்விக்காக போராடியவர் கலைஞர். பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு உதவி தொகைகளை வழங்கினார். பட்டம் படித்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றார். இதன் மூலமாக தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்தது.

    இந்தியாவில் 34 சதவீதம் பேர் கல்வி கற்று உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 51 சதவீதம்பேர் கல்வி கற்று உள்ளனர். பெண்களைப் பொருத்தமட்டில் இந்தியாவில் 26 சதவீதம் பேர் கல்வி கற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் 72 சதவீதம் பேர் கல்வி பெற்றுள்ளனர். கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர்.

    குமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-2ஐ விண்ணில் ஏவியவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் தான். இதைத்தொடர்ந்து சந்திராயான்-3ஐ குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் ஏவி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழகம் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியை வளர்க்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. ஆங்கிலம் சரளமாக பேச அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் விளங்கி வருகிறது.

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 306 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியராக இருந்த என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி. சட்டமன்ற தலைவராக்கி, ஆசிரியர் குலத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக கல்வி கண் திறந்தார். ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் 27 ஆயிரம் பள்ளிகளை திறந்து பெருமை சேர்த்தார். கடந்த ஆண்டு கல்லூரிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடங்களுக்கு காமராஜர் பேரிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு எதிரானதாகும். இந்தியாவில் தற்பொழுது 704 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. தமிழகத்தில் 74 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் மருத்துவம் படித்து வருகிறார்கள். மத்திய அரசு மீண்டும் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர பார்க்கிறது.

    புதிய கல்விக் கொள்கையால், நீட் தேர்வு போலவே கல்லூரிகளிலும் மேற்படிப்பு படிக்க நுழைவுத் தேர்வு வேண்டிய நிலை வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு குறித்து பேசினார்கள். மேயர் மகேஷ், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ், தலைவர் ஆவுடையப்பன்,குமரி மாவட்ட கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபாராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், எஸ்.எல்.பி. பள்ளி தலைமை ஆசிரியை ஜமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சிக்கு அனைத்து சமுதாயம், ஆண், பெண் படித்திட சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
    • கல்வி படிப்பதற்கு உரிமை இல்லாத காலமாக இருந்ததை மாற்றி தற்போது அதிக பெண்கள் உயர்கல்வி படித்து கல்லூரி முதல்வராகவும் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இதில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சிக்கு அனைத்து சமுதாயம், ஆண், பெண் படித்திட சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதை பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கல்வி படிப்பதற்கு உரிமை இல்லாத காலமாக இருந்ததை மாற்றி தற்போது அதிக பெண்கள் உயர்கல்வி படித்து கல்லூரி முதல்வராகவும் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இதை உருவாக்கியது தான் திராவிட மாடல் ஆட்சி. பெண்கள் வேலை தேடுவதாக இருப்பதைவிட வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மாணவ-மாணவிகள் நன்கு படித்து வளர வேண்டும் என்பதற்காகவும் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்பதற்காகவும் அறிமுகப்படுத்திய திட்டம் நான் முதல்வன் திட்டம். மாணவ-மாணவிகளின் உயர்கல்வி தரம் வளர்ச்சி அடைய வேண்டும். ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 23 கல்லூரிகள் உருவாக்கப்பட்டு அது கூட்டுறவு துறையின் மூலமாக ஒரு கல்லூரியும் அரசு கலைக் கல்லூரியும் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை அரசு கல்லூரியில் தொடக்கத்தில் படித்த மாணவிகளின் எண்ணிக்கை விட தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது.

    கல்லூரியில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் வழி கல்வி வகுப்புகள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கல்லூரியில் 766 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இக்கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம் என பெயர் சூட்டப்படும் என பேசினார். இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், நிலக்கோட்டை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர பாண்டியன், நிலக்கோட்டை நகரச் செயலாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    • ரூ.74 கோடியில் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பனைகளை துவக்கி வைக்கும் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு திட்ட செயலாக்கதுறை செயலாளர் டாக்டர் டேரேஸ் அஹமத், எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.74 கோடியில் மதிப்பில் ரூ.14,253 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்று 26 மாதங்கள் ஆகிறது. இதில் 260க்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு ரூ.74 கோடியில் 14253 பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம். அதற்கு முன்மதியாகத்தான் இங்கு அனைத்து தரப்பினரும் வந்துள்ளதை பார்க்கும் போது தெரிகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் திட்டம் செல்ல வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டு அரசு செயல்படுகிறது.

    அரசு பஸ்சில் மகளிர் கட்டணமின்றி செல்ல வேண்டும் என்று திட்ட மூ லம் 310 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டததில் 2.65 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் தமிழகத்தில் 2லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 1800 மாணவிகளுக்கு இத்திட்டன் மூலம் மாதம் தோறும் ரூ.1000 அவரது வங்கி கணக்கில் செல்கிறது.காலை சிற்றுண்டி திட்டத்தில் தமிழகத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது. இத்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 175 பேர் பயன் அடைள்ளனர். இன்னூயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திடட்த்தில் 1100 பேர் பயன் அடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 63400 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2508 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்ப ட்டுள்து. திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.56 கோடியிலும், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 24 கோடியிலும், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்தியில் ரூ.23.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

    விளையாட்டு அரங்கம்

    வாணியம்பாடி தொகுதியில் ரூ.3 கோடியில் சிறுவிளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாட்டறம்பள்ளி அருகே தொழிற்பேட்டை அமைக்க தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து ஒன்றியத்தின் மற்ற மாநிலங்களில் செய ல்படுத்தப்படு வருகிறது.

    இதன்மூலம் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×