search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி நீதிமன்றம்"

    • திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார்
    • திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன் - கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தொடர்ந்து டெல்லி முதல்வராக இருந்து சிறையில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

    இதற்கிடையே, திகார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இந்நிலையில், "நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளதாக" டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அந்த கடிதத்தில், " என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன்.

    ஆனால், திகார் நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தம் அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் சிறையில் பாதுகாப்பு, மருத்துவ குறைபாட்டை கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலின் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. மேலும் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • டெல்லி துவாரகா பகுதியில் சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    டெல்லி துவாரகா பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் போன்று உடையணிந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சட்டத்துறையினரின் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984  அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய்  பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அசோக் பூஷன்,  நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு  சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ளதால் சஜ்ஜன் குமாரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் மீது பரிசீலிக்கவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar 
    ×