என் மலர்
இந்தியா

கோர்ட் வளாகத்தில் விசாரணைக்கு வந்த பெண் மீது துப்பாக்கி சூடு- டெல்லியில் திடீர் பரபரப்பு
- துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- டெல்லி துவாரகா பகுதியில் சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி துவாரகா பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் போன்று உடையணிந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சட்டத்துறையினரின் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Next Story






