பாலியல் குற்றச்சாட்டு வழக்கு - டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆன பா.ஜ.க. எம்.பி.

பிரிஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கு - டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆன பா.ஜ.க. எம்.பி.
Published on

பா.ஜ.க. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. எனினும், பிரிஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்திற்கு பலத்தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விசாரணையில் ஆஜர் ஆவதற்காக பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் இன்று டெல்லி நீதிமன்றத்திற்கு வந்தார். இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com