search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம் பெண்"

    உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ் கவரப் பட்டை சேர்ந்த வர் சுப்பிர மணி யன். இவரது மகள் அபர்ணா (வயது 22). இவர் கடந்த 14-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிலிருந்து தோட் டத்திற்கு சென்றவர் வெகு நேரமாகி யும் வீடு திரும்ப வில்லை.

    அவரது பெற் றோர் உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.இது குறித்து அபர்ணா வின் பெற்றோர் பண்ருட்டி போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம் பெண்ணை தேடிவருகின்றனர்.

    • குடும்பதகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • மனவேதனையில் இருந்த ஜனனி பூச்சி மருந்தை குடித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை அடுத்த அத்திவெட்டி பிச்சினிக்காடு பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி ஜனனி (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    தாமரைச்செல்வன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜனனி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜனனியின் சகோதரி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
    • இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

    இரணியல் :

    இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஞானபிரகாசம். இவரது மகன் பிரவீன் ரெஞ்சித் (வயது 27). இவர் மார்பிள் வேலை செய்து வருகிறார். பிரவீன் ரெஞ்சித்தும், இரணியல் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பி.இ.பட்டதாரி இளம்பெண் ஒருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பிரவீன் ரெஞ்சித் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதால் இளம்பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் பிரவீன் ரெஞ்சித் அடிக்கடி இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடனும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை இளம்பெண் வேலை முடிந்து குருந்தன்கோட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குருந்தன்கோடுகுளம் அருகே சென்றபோது பின்னால் வந்த பிரவீன் ரஞ்சித் அவரை கையால் தாக்கி அவதூறாக பேசியுள்ளார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வயிற்றில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரவீன் ரெஞ்சித்தை கைது செய்தனர். குடிப்பழக்கம் காரணமாக காதலி பேசாத ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாக இரணியல் போலீசாரிடம் பிரவீன் ரெஞ்சித் வாக்குமூலம் அளித்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மீரா சொந்த வீட்டிலேயே பணத்தை திருடி அதனை காதலனுக்கு செலவு செய்துள்ளார்.
    • திருடிய வெள்ளிப் பொருட்களை ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று உள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் வித்யா மாதங்கி டாக்டராக உள்ளார்.

    இந்நிலையில் வித்யா மாதங்கியின் 3 வயது குழந்தையை கவனித்துக் கொள்ள வேலைக்கு ஆள் தேவைப்பட்டது.

    இந்நிலையில் திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த விஜயராமு என்பவரின் மகள் மீரா என்கிற பிரதிமீனா (18) என்பவரை மாதம் ரூ.18,000 சம்பளத்துக்காக வேலைக்கு சேர்த்து உள்ளனர். அவரை வீட்டில் ஒரு அறையிலேயே தங்க வைத்து கொடுத்துள்ளனர்.

    வேலைக்கு சேர்ந்த 4 -வது நாளில் மீரா தனது தந்தை இறந்து விட்டார் என்று ஒரு பேக்கில் துணியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். பின்னர் வேலைக்கு வரவில்லை.

    ஜோதி வெங்கட்ராமன் பலமுறை மீராவை போனில் தொடர்பு கொண்டு வேலைக்கு வருமாறு கூறியுள்ளார். அவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் மீராவுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று சோதனையிட்டார். அப்போது வெள்ளி பொருட்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகள் மட்டும் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சடைந்த ஜோதி வெங்கட்ராமன் பூஜை அறையில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் சரி பார்த்துள்ளார். அப்போது ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மீராவை விசாரணைக்கு வருமாறு காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த மீரா போலீசாரிடம் வெள்ளிப் பொருட்களை திருடியதற்கான ஆதாரம் உள்ளதா? சிசிடிவி காட்சி பதிவுகள் உள்ளதா? எதை வைத்து என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு போலீசாரை திணறடித்தார். இதனை அடுத்து போலீசார் அவரிடம் கைரேகை பதிவுகளை எடுத்து விசாரணை நடத்தப் போவதாக கூறினர். இதனால் பயந்து போன மீரா வெள்ளிப் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் மீராவை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு பரபரப்பான தகவல் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    மீரா சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிறிய கிராமம். பெற்றோர் பிழைப்புக்காக திருச்சி வந்தனர். மீரா 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு படிப்பு வராததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். மீராவுக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுடன் காதல் வயப்பட்டு உள்ளார். மீரா சொந்த வீட்டிலேயே பணத்தை திருடி அதனை காதலனுக்கு செலவு செய்துள்ளார். இதனை அவர் வாடிக்கையாக செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் அவர் திருமணத்துக்காக வைத்திருந்த 10 பவுன் நகையை மீரா எடுத்துக்கொண்டு அதனை விற்பனை செய்து காதலனுடன் வீடு திரும்பி உள்ளார். இதை பெற்றோர் கண்டிக்கவே வீட்டை விட்டு வெளியேறிய மீரா ஏதாவது ஒரு இடத்தில் வீட்டு வேலைக்கு சேர்வதும் அங்கு கிடைக்கும் பொருட்களை திருடி கொண்டு காதலுடன் ஜாலியாக செலவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டு உள்ளார்.

    பின்னர் ஒரு முறை வீட்டில் பணத்தை திருடி கொண்டு காதலனுடன் கேரளா சென்றுள்ளார். போலீசார் அவரை மீட்டு கொண்டு வந்தனர். அதன் பின் மீராவை சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தப்பிய மீரா தனது பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    பின்னர் சேலம் கலெக்டர் பெற்றோரை வரவழைத்து அவரிடம் மீராவை ஒப்படைத்துள்ளனர். மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய மீரா ஈரோட்டில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். அப்போதுதான் ஜோதி வெங்கட்ராமன் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிந்து கொண்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு சேர்ந்த உடனேயே ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடியுள்ளார். திருடிய வெள்ளிப் பொருட்களை ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று உள்ளார்.

    அந்த கடைக்கு வெள்ளி பொருட்களை விற்க சென்ற மீரா தனது தந்தை தாசில்தாராக இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ மனை செலவுக்காக பணம் தேவைப்படுவதாக கூறி வெள்ளிப் பொருட்களை விற்றுள்ளார் அதன் மூலம் ரூ.86 ஆயிரம் பணத்தை பெற்று காதலனுடன் ஜாலியாக செலவு செய்துள்ளார். மீரா பல நண்பர்கள் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன் ஜாலியாக இருக்க இது போன்ற வீடுகளில் வேலை செய்வது போல் நடித்து பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரது அறையை சோதனையிட்டபோது 14 இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகளை அடகு வைத்த ரசீதுகள் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

    இவர் அவர்கள் கூறினார்.

    பின்னர் மீரா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மீராவின் காதலன் குறித்த விவரங்களை கடத்தூர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    • அனுமந்தபுரம் கிராமத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 7ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது37).

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வினோதா (28).

    இவர்களுக்கு ஸ்ரீவந்த் (5) என்ற மகனும், யாஷிகா (3) என்ற மகளும் உள்ளனர்.

    நேற்றுமுன்தினம் வினோதா அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோதா உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வினோதாவின் தாய் செண்பகம் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வினோதாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனாமணி விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மாரியப்பன்அவதூறாக பேசி உள்ளார்.
    • இளம் பெண் வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வி.கே.புதூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவதூறாக பேசி உள்ளார்.

    மேலும் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, கதவை தட்டி உள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    உடனே அந்த பெண், வீட்டுக்குள் இருந்தபடியே தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு உறவினர்கள் விரைந்து வந்தனர்.

    வழக்கு

    அதனை பார்த்த மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் வி.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சந்தியா அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சந்தியா (வயது 17).இவர் அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி என்பருக்கு சொந்தமான சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    • விபத்தில் பலியான அந்த பெண் யார் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்பதுபற்றி விசாரணை

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள ஈத்தங்காடு சந்திப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று அந்த பெண் மீது மோதியது இதில் அந்த பெண் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய அந்த பஸ்சும் அங்கு நிற்காமல் சென்று விட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தென்தாம ரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் பலியான அந்த பெண் யார் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்பதுபற்றி விசாரணை நடத்தி வரு கிறார்கள். மேலும் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சையும் போலீ சார் தேடிவருகிறார்கள்.

    • ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
    • திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

    கொடுமுடி,

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.10 மணியளவில் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் வந்து நின்றது. பின்னர் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு ரெயில் கரூர் நோக்கி புறப்பட்டது.

    ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரெயில் மெதுவாக சென்றதால் அந்த பெண் பலத்த காயம் அடைந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மேலும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அப்போது அந்த பெண் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது.
    • ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார்.

    கள்ளக்கறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வேண்டாமலை அவரது 2 -வது ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் குடும்ப சூழ்நிலை சரியில்லை என்றும் இந்த வருடம் செய்ய வேண்டாம் என்றும் கூறி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக்கின் மனைவி வேண்டாமலை வீட்டில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேண்டாமலையின் தந்தை லோகநாதன் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:

    எனது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். ஈரோடு முனிசிபால் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென ஒரு நாள் உன்னை பிடித்துள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர் பெற்றோருடன் வந்து திருமணம் பற்றி பேசினார்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவரது குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

    அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.

    மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்தும் என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும்.

    எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
    • கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் வயதான பாட்டியிடம் 2 வாலிபர்கள் வாக்கு வாதம் செய்வதை சிலர் பார்த்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரித்த போது, 2 வாலிபர்களும் போதையில் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பாட்டியிடம் விசாரித்தபோது, அவர் ஒரு உணவகத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது இந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மூதாட்டியிடம் வாக்கு வாதம் செய்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்ததும் இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×