search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த டிப்-டாப் இளம்பெண்
    X

    ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த டிப்-டாப் இளம்பெண்

    • லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.
    • சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லைலா (65). விதவையான இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது அதே பகுதியில் உள்ள நூலகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் லைலா நூலகம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டி லைலாவிடம் பேச்சுகொடுத்தார். நூலகம் இருக்கும் இடம் வழியாக செல்வதாகவும், வண்டியில் ஏறும்படியும் கூறினார். இதனால் லைலா இளம் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் டிப்-டாப் இளம் பெண், மூதாட்டி லைலாவிடம் மீண்டும் பேச்சு கொடுத்தார். நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் நன்றாக உள்ளது. எனக்கு கொடுத்தால் அணிந்து கொண்டு போட்டோ எடுத்து திருப்பிக் கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்.

    இதை நம்பிய லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.

    அதனை அணிந்த இளம்பெண் திடீரென மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டார். இதனால் மூதாட்டி லைலா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற டிப்-டாப் இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×