கொட்டாரம் அருகே நள்ளிரவில் ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண் பஸ் மோதி பலி

விபத்தில் பலியான அந்த பெண் யார் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லைபோலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்பதுபற்றி விசாரணை
கொட்டாரம் அருகே நள்ளிரவில் ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண் பஸ் மோதி பலி
Published on

கன்னியாகுமரி :

கொட்டாரம் அருகே உள்ள ஈத்தங்காடு சந்திப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று அந்த பெண் மீது மோதியது இதில் அந்த பெண் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய அந்த பஸ்சும் அங்கு நிற்காமல் சென்று விட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் தென்தாம ரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பலியான அந்த பெண் யார் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்பதுபற்றி விசாரணை நடத்தி வரு கிறார்கள். மேலும் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சையும் போலீ சார் தேடிவருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com