search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இப்தார் விருந்து"

    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகிற 18-ந்தேதி எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இப்தார் விருந்து அளிக்க உள்ளார்.
    • நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளுள் ஒன்றான நோன்பிருத்தல் கடைபிடிக்கப்படும் புனித மாதமான ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணி அளவில் சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இப்தார் விருந்து அளிக்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு நடைபெறும் ரம்ஜான் விழாவுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
    • கோவில் வளாகத்தில் நடந்த இப்தார் விருந்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் மதப்பிரச்சினைகள் தலைதூக்கி வரும் நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் ரம்ஜான் விழாவையொட்டி இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

    கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வெட்டிச்சிறா பகுதியில் 100 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில் அருகே சுமார் 30 முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

    அவர்கள் உதவியுடன் ரூ.15 லட்சம் செலவில் இக்கோவில் சீரமைக்கப்பட்டது. அதன்பின்பு இக்கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அப்பகுதி முஸ்லிம்களும் சமயசார்பற்ற முறையில் பங்கேற்று சிறப்பித்தனர்.

    இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ரம்ஜான் விழாவுக்காக இக்கோவில் நிர்வாகம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த விருந்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.

    விருந்தில் காய்கறிகள், கஞ்சி மற்றும் பழ வகைகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கோவில் கமிட்டியில் சில முஸ்லிம் நபர்களும் இடம்பெற்றிருந்தனர்.

    இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இக்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    • அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 16-ந்தேதி சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    புரட்சி தலைவி அம்மாவின் வழியில் இந்த ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 16-ந்தேதி மாலை 5 மணி அளவில் சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமுதாய பெருமக்கள் தோழமை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி இஸ்லாமியர்களுக்கு முதன்முதலாக அளிக்கும் இப்தார் விருந்து டெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில் 13-ம் தேதி நடைபெறுகிறது. #RahulhostIftar
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆண்டுதோறும் ரமலான் நோன்பு மாதத்தில் ‘இப்தார்’ எனப்படும் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த விருந்துகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.

    ஆனால், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி இஸ்லாமியர்களுக்கு முதன்முதலாக அளிக்கும் இப்தார் விருந்து டெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில் 13-ம் தேதி மாலை நடைபெறுகிறது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் நலத்துறை பிரிவின் தலைவர் நதீம் ஜாவெத் இன்று வெளியிட்டுள்ளார்.  #RahulhostIftar  
    ×