search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இஸ்லாமியர்களுக்கு டெல்லியில் 13-ம் தேதி ராகுல் காந்தி இப்தார் விருந்து
    X

    இஸ்லாமியர்களுக்கு டெல்லியில் 13-ம் தேதி ராகுல் காந்தி இப்தார் விருந்து

    காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி இஸ்லாமியர்களுக்கு முதன்முதலாக அளிக்கும் இப்தார் விருந்து டெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில் 13-ம் தேதி நடைபெறுகிறது. #RahulhostIftar
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆண்டுதோறும் ரமலான் நோன்பு மாதத்தில் ‘இப்தார்’ எனப்படும் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த விருந்துகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.

    ஆனால், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி இஸ்லாமியர்களுக்கு முதன்முதலாக அளிக்கும் இப்தார் விருந்து டெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில் 13-ம் தேதி மாலை நடைபெறுகிறது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் நலத்துறை பிரிவின் தலைவர் நதீம் ஜாவெத் இன்று வெளியிட்டுள்ளார்.  #RahulhostIftar  
    Next Story
    ×