search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விடுமுறை"

    • நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
    • தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பால் பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ந் தேதிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.

    தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்க பெற்றோர், மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை அவர்கள் அனைவரும் சென்னை உள்பட பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக நாளை இரவே அவர்கள் புறப்பட வேண்டும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • எட்டு விடுமுறை நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    புதுச்சேரி:

    மொகரம் பண்டிகையையொட்டி நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை (9-ந்தேதி) மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசு 2022-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாரணை வெளியிட்டுள்ளது.
    தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையை வெளியிடும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022-ம் ஆண்டு 23 நாட்களை அரசு பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


    1. ஆங்கிலப் புத்தாண்டு- 01.01.2022- சனிக்கிழமை

    2. பொங்கல்- 14-01-2022- வெள்ளிக்கிழமை

    3. திருவள்ளுவர் தினம்- 15-01-2022- சனிக்கிழமை

    4. உழவர் திருநாள்- 16-01-2022- ஞாயிற்றுக்கிழமை

    5. தைப்பூசம்- 18-01-2022- செவ்வாய்க்கிழமை

    6. குடியரசு தினம்- 26-01-2022- புதன்கிழமை

    7. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகள்)- 01-04-2022- வெள்ளிக்கிழமை

    8. தெலுங்கு வருடப் பிறப்பு- 02-04-2022- சனிக்கிழமை

    9. தமிழ் புத்தாண்டு/மகாவீரர் ஜெயந்தி/டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்- 14-04-2022- வியாழக்கிழமை

    10. புனித வெள்ளி- 15-04-2022- வெள்ளிக்கிழமை

    11. மே தினம்- 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

    12. ரம்ஜான்- 03-05-2022- செவ்வாய்க்கிழமை

    13. பக்ரீத்- 10-07-2022- ஞாயிற்றுக்கிழமை

    14. மொகரம்- 09-08-2022- செவ்வாய்க்கிழமை

    15. சுதந்திர தினம்- 15-08-2022- திங்கட்கிழமை

    16. கிருஷ்ண ஜெயந்தி- 19-08-2022- வெள்ளிக்கிழமை

    17. விநாயகர் சதுர்த்தி- 31-08-2022- புதன்கிழமை

    18. காந்தி ஜெயந்தி- 02-10-2022- ஞாயிற்றுக்கிழமை

    19. ஆயுத பூஜை- 04-10-2022- செவ்வாய்க்கிழமை

    20. விஜயதசமி- 05-10-2022- புதன்கிழமை

    21. மிலாதுன் நபி- 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை

    22. தீபாவளி- 24-10-2022 திங்கட்கிழமை

    23. கிறிஸ்துமஸ்- 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

    (* தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.)
    ×