search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "solar power"

    • ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
    • ஒரு சிக்சர் அடித்தால் 6 வீடுகளுக்கு சோலார் மின்சார வசதி வழங்கப்படும் என ஆர்ஆர் அறிவித்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடத்தையும் டெல்லி, மும்பை அணிகள் கடைசி இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்நிலையில் நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு அறிவிப்பை ராஜஸ்தான் அணி அறிவித்தது.

    அதன்படி இந்த போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய தகட்டின் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.

    • சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், அழகப்பபுரம் பேரூராட்சி, ஆரோக்கியபுரம் பேரூராட்சி மற்றும் லீபுரம் பேரூராட்சியில் அமைத்த விளக்குகளை மக்கள் தேவைக்காக காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர்

    மின் கட்டண உயர்வு விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில்துறையினரை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதற்கு தீர்வாக சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் பயன்படுத்தினர். தற்போது சோலார் மின்சாரம் பயன்படுத்துவதற்கான நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இது குறித்து நாடா இல்லா தறி நெசவாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    சூரிய ஒளி மின் சக்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 27 பைசாவாக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒரு ரூபாய் 48 பைசாவாக உயர்த்தப்பட்டது. நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம்.

    இந்நிலையில் கடந்த ஜூலை 1 முதல் ஒரு ரூபாய் 53 பைசாவாக மீண்டும் நெட்வொர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.சூரிய ஒளி மின் உற்பத்தியை கணக்கீடு செய்ய மீட்டர் பொருத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட நெட்வொர்க் கட்டணத்தை குறைத்து சூரிய ஒளி மின் சக்தி உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார்.

    • கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
    • சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது.

    புதுடெல்லி :

    எரிசக்தி அமைப்பான 'எம்பர்' ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகமாக உள்ள முதல் 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் ஆகியவையே அந்த நாடுகள். இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய 7 ஆசிய நாடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக, கடந்த ஜனவரி மாதம் ஜூன் மாதம்வரை எரிபொருள் செலவில் மொத்தம் 34 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகை, மேற்கண்ட நாடுகளில் செலவான மொத்த எரிபொருள் செலவில் 9 சதவீதம் ஆகும்.

    இவற்றில், சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது. 2 ஆயிரத்து 100 கோடி டாலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது. அந்நாட்டின் மின்சார தேவையில் 5 சதவீதம், சூரிய மின்சக்தியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    அடுத்தபடியாக, ஜப்பான் 560 கோடி டாலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது.

    3-வது இடத்தில் இந்தியா உள்ளது. மேற்கண்ட 6 மாத காலத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் இந்தியா, எரிபொருள் செலவில் 4.2 பில்லியன் டாலரை (சுமார் ரூ.34 ஆயிரம் கோடி) சேமித்துள்ளது. அதாவது, 1 கோடியே 94 லட்சம் டன் நிலக்கரியின் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதை பயன்படுத்தி இருந்தால் நெருக்கடி அதிகரித்து இருக்கும்.

    வியட்நாம், 170 கோடி டாலர் எரிபொருள் செலவையும், தென்கொரியா 150 கோடி டாலர் செலவையும், தாய்லாந்து 21 கோடி டாலர் செலவையும், பிலிப்பைன்ஸ் 7 கோடியே 80 லட்சம் டாலர் செலவையும் சேமித்துள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம்.
    • பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு.

    திருப்பூர் :

    வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசனஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத்திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத்திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசு மானியம் மற்றும் 30 சதவீதம் ஒன்றிய அரசின் மானியம்) 2021-2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2000 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதியதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நில நீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக்கொள்ளலாம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புகோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை .

    மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட வேளாண்மைப்பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதி மொழி அளித்திட வேண்டும்.

    வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள் கான்கீரிட் காரை இடைப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் பொழுது பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திட வேண்டும்.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுற்ற விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் அருகிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) திருப்பூர் செல்போன் எண் 9942703222 உதவி செயற்பொறியாளர் (வே.பொ) தாராபுரம் செல்போன் எண் 7904087490 உதவி செயற்பொறியாளர் உடுமலைப்பேட்டை செல்போன் எண் 9865497731 உபகோட்ட உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரத்தை pmkusum.tn.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    வரும் ஆண்டிலும் முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ், 2019-2020-ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இந்த அரசு உத்தேசித்துள்ளது.

    ஒரு வீட்டிற்கு அலகுத்தொகை 1.20 லட்சம் ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்து, அத்தொகையை மத்திய அரசும், மாநில அரசும் முறையே 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் என ஏற்றுள்ளன.

    கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக மாநில அரசு, கூடுதல் நிதியாக 50 ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்குகிறது. இதனால் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை 1.70 லட்சம் ரூபாயாகவும், அதில் மாநில அரசின் பங்குத் தொகை 98 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,276.14 கோடி ரூபாய் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (ஊரகம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்றே, வரும் ஆண்டிலும் முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்.

    இத்திட்டத்திற்காக 2019-2020ம் அண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், 18,273.96 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக கோயம்பேடு பணிமனையில் சூரியசக்தி மூலம் 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. #SolarPower #MetroRail
    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை நிர்வாக அலுவலகம் மற்றும் ரெயில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலுக்கு தேவைப்படும் மின்சாரம் தற்போது மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்படுகிறது. இதற்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகம் செலவு செய்கிறது. இதனை குறைக்க சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.

    தலைமை அலுவலகத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதன் பணிமனையில் ரூ.8 கோடி மதிப்பில் 10 ஆயிரம் சதுரஅடியில் சூரியசக்தி மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து ஒரு நாளைக்கு 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் வரை சேமிக்க முடியும்.

    இதில் ஏற்கனவே ஒரு பகுதி பணிகள் நிறைவுபெற்று 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு மாதத்துக்கு சுமார் 55 ஆயிரத்து 350 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதனால் ஆண்டுக்கு ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் செலவு குறையும். ஏற்கனவே திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ரெயில் நிலையங்களில் 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க சூரியசக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன.

    இவற்றின் மூலம் மாதத்திற்கு 13,800 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், குளிர்சாதன வசதி, ரெயில் இயக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.6.3 லட்சம் செலவு குறைகிறது.

    இந்த தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 
    கர்நாடகா மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை மக்கள் பயன்படுத்துவதால் 50 சதவீத மின் கட்டணம் மிச்சப்படுத்தப்படுகிறது. #Solarpower
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் ஷிராகுப்பி என்ற கிராமம் உள்ளது. ஹூப்ளியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் உள்ளவர்கள் மின்வெட்டு குறித்து எந்தவித கவலையும் படமாட்டார்கள்.

    ஏனென்றால் இந்த கிராமம் முழுக்க சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 4980 பேர் வசிக்கும் ஷிராகுப்பி கிராமத்தில் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் என 996 கட்டிடங்கள் உள்ளன.

    இந்த கட்டிடங்கள் அனைத்திலும் சூரியமின்தகடு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சூரியஒளி மின்சாரம் மூலம் அந்த கிராமத்தில் 50 சதவீத மின் கட்டணம் மிச்சப்படுத்தப்படுகிறது.

    இது குறித்து அந்த கிராம பஞ்சாயத்தின் மேம்பாட்டு அதிகாரி ரேணுகா கூறியதாவது:-

    பிப்ரவரி மாதம் இந்த கிராமத்தில் சூரியஒளி மின் தகடு அமைக்கும் பணி தொடங்கியது. மே மாதத்துடன் இந்த பணிகள் நிறைவடைந்தன. இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் சூரிய தகடு அமைக்கப்பட்டுள்ளது.

    இரண்டு எலெக்ட்ரிக் பல்ப், மொபைல் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்ப் 15 ஆம்பியரும், மற்றொரு பல்பு 5 ஆம்பியரையும் கொண்டது. இந்த பல்புகள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் வரை எரியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் இந்த கிராமத்தில் இருந்து ஹூப்ளியில் உள்ள மாநில அரசின் மின்சார வினியோக நிறுவனத்துக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. #Solarpower
    திருமங்கலம், அண்ணாநகர் உள்பட 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே ஏற்பட்ட வரவேற்பையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு 13,800 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.

    இந்த சூரிய ஒளி மின்சார வசதியால் வருடத்துக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது. உயர் மட்ட பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 6 மெகாவாட் சூரிய ஒளி சக்தி மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் பேனல்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதுவரை 1.6 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உள்பத்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தினசரி மின் தேவைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.


    2016-ம் ஆண்டு கோயம்பேடு மெட்ரோ நிர்வாக அலுவலகத்தில் சூரிய ஒளி மின்சார வசதி தொடங்கப்பட்டு தினசரி 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக அதிகரிக்கப்பட்டது.

    கோயம்பேடு மெட்ரோ அலுவலகத்தில் மாதத்திற்கு 1.35 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ரூ.22 லட்சம் மின்சார செலவு ஒவ்வொரு மாதமும் சேமிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    ×