என் மலர்
நீங்கள் தேடியது "சோலார் மின் விளக்கு"
- 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
- பெண்களை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.
18-வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. பெண்களை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.
இந்த போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளாசும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளில் சூரிய சக்தி தகடுகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தாழக்குடி அழகம்மன்ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கூறினார்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
ஆரல்வாய்மொழி :
தாழக்குடியில் அழகம்மன்ஜெயந்திஸ்வரர் ஆலயத்தில் ரூ.3 லட்சம் செலவில் சோலார் மின்விளக்கு பொருத்தப் பட்டது. இதை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாழக்குடி பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார்,துணைத் தலைவர் ராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், வார்டு உறுப்பினர்கள் ரவிபிள்ளை, ரோகினி அய்யப்பன், சுரியபார்வதி, பாக்கியம், அழகம்மாள், ஜெயந்தி தி.மு.க. நிர்வாகிகள் சங்கர், வாரன், முத்துகிருஷ்ணன், பொறியாளர் ராஜ்குமார், சர்வேயர் அய்யப்பன், ஓய்வுபெற்றகண்காணிப்பாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.அறங்காவலர் குழு தலைவர் கூறும்போது இன்னும் சில மாதங்களில் தாழக்குடி அழகம்மன்ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கூறினார்.






