என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வியாபாரி"

    • 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம், வல்லம் படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் நவீன் (வயது24) மீது 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நவீன் தலைமறைவாகி விட்டார். அவரை அண்ணாமலை நகர் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கஞ்சா வியாபாரி நவீன் அண்ணாமலை நகர் மாரியப்பா நகர் பகுதியில் உள்ள முட்புதருக்குள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் இன்று காலை 6 மணிக்கு அங்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ்காரர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை நவீன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார்.

    அதனையும் மீறி போலீஸ்காரர் அய்யப்பன், கஞ்சா வியாபாரி நவீனை பிடிக்க முயன்றார். அவரை நவீன் கத்தியால் வெட்டினார். இதில் அய்யப்பன் காயம் அடைந்தார். மேலும் நவீன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பல முறை எச்சரித்தார்.

    ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி நவீன் தப்பி ஓட முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நவீனை சுட்டார். இதில் அவரது கால் மூட்டியில் குண்டு பாய்ந்தது.

    உடனே நவீன் கீழே சரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் உடலில் ஏற்பட்ட குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிக்க அவரை சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா வியாபாரி கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் அய்யப்பனும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கஞ்சா வியாபாரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம்(27), வல்லத்துறை பகுதியை சேர்ந்த அருள்(30) ஆகியோரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஞ்சா விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி
    • கைது செய்த போலீ சார், 1 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் நடமாடுவதாக போலீசா ருக்கு புகார்கள் வந்தன.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் தீவிரம் காட்டினர். இதில் பல இடங்களில் கஞ்சா விற்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் ஏராளமாக பறி முதல் செய்யப்பட்டன.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறைந்தாலும் அதன் வரத்து இருந்து கொண்டே இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்டத்திற்குள் கஞ்சா எப்படி வருகிறது? என கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அப்போது வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாகவும், சுரியர் பார்சல் மூலமாகவும் கஞ்சா கொண்டு வரப்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெயில் நிலை யம் மற்றும் கூரியர் அலுவல கங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கஞ்சா விற்பவர்கள் மட்டுமின்றி பெரிய வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வடசேரி போலீசார், நேற்று பார்வதி புரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பாலத்தின் அடியில் சந்தேக த்திற்கிடமாக ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரித்தனர்.

    அப்போது அவர் கஞ்சா விற்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீ சார், 1 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவரது பெயர் ராமகிருஷ்ணன் (வயது22) என்பதும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால் குறிச்சியைச் சேர்ந்த அவர், தற்போது நாகர்கோவில் பார்வதிபுரம் இலந்தையடியில் வசிப்ப தும் தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு தான் அவர் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார் என்பதும் போலீஸ் விசார ணையில் தெரிய வந்தது.

    • 1¼ கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்ட்டு ராமமூர்த்திக்கு உத்தரவிட்டார் அவரது மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று மாலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த குடியாத்தம் தரணம்பேட்டை ஷெரிப் நகர் 2வது தெருவை சேர்ந்த அஸ்லாம் என்கிற இம்ரான் (வயது 25) என்பவரை மடக்கிப் பிடித்தனர்.

    அவரிடமிருந்து ¼ கிலோ கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அஸ்ஸலாமை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்தவர் போலீசாரிடம் பிடிபட்ட கஞ்சா வியாபாரி அஸ்லாம் தொடர்ந்து பல வருடங்களாக கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கஞ்சாவுடன் அஸ்லாமை பிடித்தனர்.

    அப்போது பிளேடால் உடல் முழுவதும் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி தப்பி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கஞ்சா வியாபாரிகளுக்கு போதை மருந்து-ஊசிகள் சப்ளை செய்த மருந்து கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • இவர்களிடம் இருந்து 215 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் கஞ்சா விற்ற ராஜேஷ்குமார் (வயது 23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (21), மகாராஜா (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 215 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கும்பலுக்கு போதை மருந்து, ஊசிகளை யார் சப்ளை செய்து வந்தார்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில், ஆனை யூர் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் சுந்தர்ராஜ் என்பவர் சட்ட விரோதமாக அந்த கும்பலுக்கு போதை மருந்து, ஊசிகளை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்,
    • இவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மரக்காணம் ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    இதில் திண்டிவனம் ஓமந்தூர் காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் முரளி (வயது 41) என்பது தெரியவந்தது. இவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு 

    • பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என எதிர் தரப்பு கும்பல் தினேசை அழைத்துள்ளனர்.
    • கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பத்மினிகார்டன் 1-வது வீதி பகுதியில் நேற்று இரவு ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ராக்கியா பாளையம் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ தினேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.

    அவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் அவர் சிறையும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் சிறையில் இருந்த போது, அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறி முன்விரோதமும் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இந்த பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என எதிர் தரப்பு கும்பல் தினேசை அழைத்துள்ளனர். அவரும் சென்றுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் மது அருந்திய கும்பல் தினேசை அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் குறித்து முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஐ.டி ஊழியர் பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் விஷ்ணு (27) என்றும், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்று வந்த அஜய் (21), செல்வம் (28) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • அரகண்டநல்லூரில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அரங்கண்டநல்லூர் போலீசார் மணம்பூண்டி மேடு ரவுண்டானா அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்டனர்.

    அவரிடம் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சோலைவண்டிபுரத்தை சேர்ந்த சுப்பரமணி மகன் மோகன் என்கிற மோகன்ராஜ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • பெருமாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பள்ளிக்கரணை:

    மேடவாக்கம், புஷ்பா நகரை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மகன் ஆல்வின் என்கிற பிரைட்(வயது25). ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதே பகுதி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள். இருவரும் நண்பர்கள்.

    நேற்று இரவு 9 மணியளவில் நண்பர்கள் இருவரும் பள்ளிக்கரணை, அம்பேத்கார் சாலை, கண்ணபிரான் கோவில் பின்புறம் இருந்தனர்.

    அப்போது 6 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆல்வினும், பெருமாளும் ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் விரட்டிச் சென்ற கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பெருமாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதற்கிடையே அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது ஆல்வின் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய பெருமாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் ரவுடி ஆல்வினுக்கும், ஒருவருக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஆல்வினுடன் மோதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பள்ளிகரணை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 8 மாதங்களில் 56 பேர் மீது நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்ததன் பேரில் நடவடிக்கை.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    ஆனால் தற்போது கஞ்சா புழக்கம் கட்டுக்குள் இருந்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக் கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து குற்ற செயல்கள் ஈடுபடுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 8 மாதங்களில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் இச்சட்டச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதை யடுத்து குண்டர் சட்டத் தில் கைது செய் யப் பட்டவர்க ளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில், வடிவீஸ் வரம் பகுதியைச் சேர்ந்த வர் கிஷோர் என்ற கிஷோர்குமார் (வயது 21) சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கிஷோர்குமார் கஞ்சா வழக்கு ஒன்றில் கோட்டார் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்திலும் வழக்குகள் இருந்தது. ஆனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் அரவிந்த், பிரபல ரவுடி கிஷோர்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கிஷோர் குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை பாளையங்கோட்டை ஜெயி லில் போலீசார் அடைத்தனர்.

    • கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்த முனுசாமியின் மகன் கோகுல்ராஜ்(வயது 32). கடந்த ஜூலை மாதம் கோகுல்ராஜ் மற்றும் சிலர் கஞ்சா வியாபாரம் செய்தபோது போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினர். இதில் கோகுல்ராஜ் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து கோகுல்ராைஜ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோகுல்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள கோகுல்ராஜிடம் வழங்கப்பட்டது.

    • பாளையங்கோட்டை ஜெயிலில் அடைப்பு
    • ஜனவரி மாதம் முதல் இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மேலும் ஒரு கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அறுகுவிளை பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 45). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந் துக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் அரவிந்த் கஞ்சா வியாபாரி சுயம்புலிங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து சுயம்புலிங்கம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையடுத்து அவரை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    ×