search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kotil Ajar"

    • பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்,
    • இவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    விழுப்புரம்:

    பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மரக்காணம் ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    இதில் திண்டிவனம் ஓமந்தூர் காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் முரளி (வயது 41) என்பது தெரியவந்தது. இவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு 

    • பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது,
    • அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், (பொ) சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    ×