கஞ்சா வியாபாரிகளுக்கு போதை மருந்து-ஊசிகள் சப்ளை;

கஞ்சா வியாபாரிகளுக்கு போதை மருந்து-ஊசிகள் சப்ளை செய்த மருந்து கடைக்காரர் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 215 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான சுந்தர்ராஜ்.
கைதான சுந்தர்ராஜ்.
Published on

மதுரை

மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் கஞ்சா விற்ற ராஜேஷ்குமார் (வயது 23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (21), மகாராஜா (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 215 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலுக்கு போதை மருந்து, ஊசிகளை யார் சப்ளை செய்து வந்தார்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில், ஆனை யூர் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் சுந்தர்ராஜ் என்பவர் சட்ட விரோதமாக அந்த கும்பலுக்கு போதை மருந்து, ஊசிகளை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com