என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja Merchant"

    • 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம், வல்லம் படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் நவீன் (வயது24) மீது 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நவீன் தலைமறைவாகி விட்டார். அவரை அண்ணாமலை நகர் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கஞ்சா வியாபாரி நவீன் அண்ணாமலை நகர் மாரியப்பா நகர் பகுதியில் உள்ள முட்புதருக்குள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் இன்று காலை 6 மணிக்கு அங்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் நவீன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ்காரர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை நவீன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார்.

    அதனையும் மீறி போலீஸ்காரர் அய்யப்பன், கஞ்சா வியாபாரி நவீனை பிடிக்க முயன்றார். அவரை நவீன் கத்தியால் வெட்டினார். இதில் அய்யப்பன் காயம் அடைந்தார். மேலும் நவீன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பல முறை எச்சரித்தார்.

    ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி நவீன் தப்பி ஓட முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நவீனை சுட்டார். இதில் அவரது கால் மூட்டியில் குண்டு பாய்ந்தது.

    உடனே நவீன் கீழே சரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் உடலில் ஏற்பட்ட குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிக்க அவரை சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா வியாபாரி கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் அய்யப்பனும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கஞ்சா வியாபாரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் கஞ்சா வைத்திருந்ததாக சிதம்பரம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த கவுதம்(27), வல்லத்துறை பகுதியை சேர்ந்த அருள்(30) ஆகியோரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.
    • தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக விடுவதாக மிரட்டி உள்ளார்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் என்கின்ற பகுடு பாஸ்கரன் (33).

    இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், தற்போது 2-வது மனைவிதுர்கா(30) என்பவருடன் வசிக்கிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசிக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து ஆற்காட்டில் குடியேறினார்.

    அந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரது மகள் ஆற்காட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

    இந்நிலையில், அந்த பெண்ணிடம் பாஸ்கரன். அவ்வப்போது வலியச் சென்று பேச்சு கொடுப்பாராம். ஆனால் அந்த பெண் அவரை கண்டுகொள்ளாமல் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    அந்தப் பெண்ணை எப்படியாவது அடைய வேண்டுமென பாஸ்கரன் காத்திருந்துள்ளார். மேலும் பாஸ்கரின் 2வது மனைவி துர்காவிற்கும் அந்த பெண்ணிற்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பகுடு பாஸ்கரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரிடம் தன்னிடம் அந்த பெண் அடிக்கடி தகராறு செய்து திட்டியதாக துர்கா கூறியுள்ளார்.

    இதனையடுத்து, அந்த பெண்ணை பழி வாங்க திட்டம் தீட்டிய பாஸ்கரன் கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு தனது மனைவியுடன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். அப்போது கதவை திறந்தவுடன் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி பாஸ்கரன் நுழைந்துள்ளார்.

    துர்கா வெளிப்புறமாக கதவை பூட்டிக்கொண்டு வெளியே காவலுக்கு நின்று உள்ளார். பின்னர், பாஸ்கர் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை கட்டி போட்டுள்ளார். மேலும் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவியின் உடைகளை கழற்ற சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் மாணவியை நிர்வாணமாக நிற்க வைத்து தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து மாணவியை அங்குள்ள கழிவறையில் தள்ளி கதவை பூட்டி உள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும், அவரையும் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். மறுநாள் அதிகாலை 3 மணி வரை இருவரையும் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த பகுடு பாஸ்கரன் அனைத்தையும் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோக்களாக பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தாய், மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாகவும், எங்ருந்தாலும் தேடி வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

    மேலும், தொடர்ந்து பல முறை வீடியோவை காட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவார்கள் என்று அச்சத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் அந்தப் பெண் இருந்துள்ளார்.

    தொடர்ந்து, பகுடு பாஸ்கரின் தொல்லை அதிகமானதால் மன வேதனை அடைந்த அந்த பெண் இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை புகார் செய்தார்.

    இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த பகடு பாஸ்கரன் மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவி துர்கா ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஆற்காடு-கண்ணமங்கலம் கூட்ரோடு உழவர் சந்தை அருகில் பதுங்கி இருந்த தம்பதிகள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • பெருமாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பள்ளிக்கரணை:

    மேடவாக்கம், புஷ்பா நகரை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவரது மகன் ஆல்வின் என்கிற பிரைட்(வயது25). ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதே பகுதி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள். இருவரும் நண்பர்கள்.

    நேற்று இரவு 9 மணியளவில் நண்பர்கள் இருவரும் பள்ளிக்கரணை, அம்பேத்கார் சாலை, கண்ணபிரான் கோவில் பின்புறம் இருந்தனர்.

    அப்போது 6 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆல்வினும், பெருமாளும் ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் விரட்டிச் சென்ற கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பெருமாள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதற்கிடையே அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது ஆல்வின் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய பெருமாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் ரவுடி ஆல்வினுக்கும், ஒருவருக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஆல்வினுடன் மோதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பள்ளிகரணை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×