என் மலர்

  நீங்கள் தேடியது "MD Dhoni"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #MSDhoni
  இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் வரை மிகவும் பரபரப்பான வீரராக திகழ்ந்தார். அப்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மட்டுமே விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு நேரம் அதிகமாக இருக்கிறது.

  விக்கெட் கீப்பிங் பணியில் ஜாம்பவனாக திகழும் டோனியின் பேட்டிங் சமீபகாலமாக திருப்திகரமாக இல்லை. இந்த வருடம் 15 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.  தற்போது உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்க்கண்ட் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், லீக் ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

  தற்போது நாக்அவுட் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ரோகித் சர்மா விளையாட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  ×