என் மலர்tooltip icon

    மகேந்திரசிங் தோனி | Mahendra Singh Dhoni (MS Dhoni) news updates in Tamil

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.
    • எம்.எஸ். தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், புதிய ஜெர்ஸியில் தோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. 

    • இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார்.
    • சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை பாராட்டி எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவில் கம்பீரை தோனி கலாய்த்ததால் அந்த பதிவு இணையத்தில் வைரலானது.

    அந்த பதிவில், அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரின் அந்த தீவிரம் கலந்த புன்னகை ஒரு 'கில்லர் காம்போ'. பும்ரா ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்" என்று தோனி தெரிவித்துள்ளார்.

    • தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி சாக்ஷி குறித்து தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார்.

    ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி சாக்ஷி குறித்து தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "என்னால் இந்த முழு உலகோடும் சண்டையிட முடியும், ஆயிரம் மன அழுத்தங்களைக் கூட கையாள முடியும். ஆனால் அதற்கு என் மனைவி என் பக்கம் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின.
    • இந்த போட்டியை தோனி, அவரது மனைவி நேரில் கண்டு களித்தனர்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

    இந்த போட்டியின் போது, தோனியின் மனைவி சாக்ஷி செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதன்படி போட்டியின் 18-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் நேராக அவரிடமே அடித்தார். பந்து தரையில் பட்டு பும்ராவிடம் சென்றது. ஆனால், விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சாக்ஷி தோனி, அது 'கேட்ச்' என்று தவறாக நினைத்து இருக்கையில் இருந்து குதித்து உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கினார்.

    சாக்ஷி தவறுதலாகக் கொண்டாடுவதைக் கண்ட எம்.எஸ். தோனி, உடனடியாக அவரை அமைதிப்படுத்தினார். பந்து தரையில் பட்டு வந்ததைச் சைகை மூலம் சுட்டிக்காட்டிய தோனி, சிரித்துக்கொண்டே சாக்ஷியை "உட்காரு" என்று கூறினார்.

    தோனியின் இந்த ரியாக்ஷனும், சாக்ஷியின் குழந்தைத்தனமான கொண்டாட்டமும் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

    • தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னையில் பயிற்சியில் உள்ளார்
    • ராஞ்சியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 1 ஆம் தேதி, கான்கே ரிங் சாலையில் பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் அருகே அவரது சொகுசு கார் அதிவேகத்தில் சென்றதை அங்குள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்ததையடுத்து, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ் அவருக்கு டிஜிட்டல் முறையில் 'இ-சலான்'அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தக் கண்காணிப்பு அமைப்பு நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் ரிங் ரோடு (வட்டச் சாலை) பகுதிகளில் 24/7 செயல்பாட்டில் உள்ளது என்றும், இது அதிவேகம், சிக்னலை மீறுதல் மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து வருகிறது என்றும் ராஞ்சி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார். இத்தகைய விதிகளை மீறும் யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

    தற்போது தோனி ஐபிஎல் 2026 போட்டிகளுக்காகச் சென்னையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ராஞ்சியில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • எம்.எஸ். தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
    • தோனியுடன் அவரது மனைவி சாக்‌ஷி டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார்.

    ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தோனியுடன் டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படத்தை அவரது மனைவி சாக்ஷி சிங் பகிர்ந்துள்ளார்.

    • கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது.
    • இந்த முறை சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், பிரேவிஸ், ஷிவம் துபே போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் Communications Partner ஆக Vi நிறுவனம் இணைந்தது. அடுத்த 3 வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பயனர்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும் எனவும் Vi நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    • ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
    • சிஎஸ்கே பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    பேட்டிங்கிற்கு தயாராகும் எம்.எஸ். தோனியின் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    கடந்த முறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், பிரேவிஸ், ஷிவம் துபே போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிஎஸ்கே மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துபே 31 பந்தில் 66 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு எம்.எஸ். தோனி அளித்த அறிவுரையே காரணம் என்று ஷிவம் துபே நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மஹி பாய் என்னிடம் சொன்னது. ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரி அடிக்கலாம் அல்லது ஒரு ரன் எடுக்கலாம் என்று தோனி எனக்குக் கூறினார். இது எனது பேட்டிங்கில் தெளிவை ஏற்படுத்தியது. அதனால் நான் ஆரம்பத்தில் வரும்போது அந்த விஷயம் எப்போதும் என் மனதில் இருக்கும்.

    தோனியின் வழிகாட்டுதல் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இக்கட்டான சூழலில் இந்திய அணியை மீட்க அது உதவியது என துபே கூறினார்.

    • எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்.
    • உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம்.

    2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம்பெறுவார்களா என்பது தற்போது வரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஆனால் விராட் கோலியின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. சமீபத்திய தொடர்களில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவை) சிறப்பாக விளையாடி உள்ளார். அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் போன்றவர்கள் அவரை 2027 திட்டத்தில் முக்கியமாகக் கருதுகின்றனர்.

    அதே சமயத்தில் ரோகித் சர்மா, சமீப தொடர்களில் சில சிறப்பான இன்னிங்ஸ் ஆடியுள்ளார், ஆனால் சில போட்டிகளில் சொதப்பியுள்ளார். இருப்பினும், அணி அவரை முக்கியமாகக் கருதுகிறது.

    இந்நிலையில் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களாக என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இது குறித்து தோனி கூறியதாவது:-

    அடுத்த உலகக் கோப்பையில் ஏன் விளையாடக் கூடாது? என்னைப் பொறுத்தவரை, உடற்தகுதியை வயது தீர்மானிக்காது. அவர்களது பெர்ஃபார்மன்ஸ், பிட்னஸ் தான் தீர்மானிக்கும்.

    உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம். அனுபவம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் ஏன் விளையாடக்கூடாது.

    ஆனால் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். நான் டெப்யூ செய்தபோது 24 வயது, யாரும் என்னிடம் வயது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதே போல், 1, 2, 5 அல்லது 10 வருடங்கள் விளையாடினாலும், வயது பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது.

    அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அணியில் இருப்பார்கள். சிறப்பாகச் செயல்படாவிட்டால், இருக்க மாட்டார்கள் என தோனி கூறினார்.

    • சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார்.
    • இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    அவர் இரண்டு முறை கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.

    தோனி பிறகு அணியின் கீப்பராக சஞ்சு செயல்படுவார் என சொல்லப்படுகிறது. எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

    இந்நிலையில் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்காக பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.
    • எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.

    எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் காளை புகும் கணமும் , கிரிக்கெட் மைதானத்திற்குள் தோனி புகும் கணமும் ஆர்ப்பரிக்கும் …மதுரை ஜல்லிக்கட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மதுரை வரும் பயணத்தின் போது விமானநிலைய ஓய்வறையில்!" என்று பதிவிட்டுள்ளார்.

    ×