search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consecration ceremony"

    • பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
    • அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.

    மதுரையை அரசாள்பவள் சொக்கநாதர் அல்ல; மீனாட்சி அல்லவா. மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவில் பட்டாபிஷேக விழா கொண்டாடப்படும். சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரரும் மதுரையை ஆள்வதாக ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

    மதுரையைத் தவிர இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.

    இந்த பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்தக் காலத்தில், பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை இருத்தி வைத்து வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு ராயர் கிரீடம் அணிவித்து, அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நடைபெறுகிறது.
    • தான் தாவூத் இப்ராகிம்-க்கு நெருக்கமானவர் என்று கூறினார்.

    பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது நபர் ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கும் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என இன்டெகாப் அலாம் என்ற நபர் மிரட்டல் விடுத்தார் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஜனவரி 19-ம் தேதி இந்த நபர், பொது மக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனது பெயரை சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராகிம்-க்கு நெருக்கமானவர் என்றும் கூறினார்."

    "தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 22-ம் தேதி அயோத்தி ராமர் கோவிலை வெடிக்க செய்வேன் என மிரட்டினார். இவர் எவ்வித குற்ற பின்னணியும் கொண்டிருக்கவில்லை, ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறார்," என அராரியா காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

    • நிறுவனங்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
    • கோவில்களில் அன்னதானம் வழங்க பா.ஜ.க. முடிவு.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஜனவரி 22) நடைபெற இருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி வட மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அயோத்தி முழுக்க விழா கோலம் பூண்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியானது. எனினும், இதில் உண்மையில்லை என்றும் இதுபோன்ற தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

     


    இதனிடையே, நாளை ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தமிழ்நாடு முழுக்க அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கொடுக்க தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது. தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு, காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது."

    "கோவில்களுக்குள் நடக்கும் விஷயங்களுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்மந்தம். இந்த விவகாரத்தில் மைனாரிட்டி அரசியல் செய்கிறார்கள். நாளை அமைதியான முறையில் கோவில்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை தி.மு.க. அரசு தடுக்க நினைப்பதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. இதனால் பா.ஜ.க.வினர் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யுங்கள், அனுமதி தேவையில்லை."

    "அனைத்து கோவில்களிலும் அன்னதானம் கொடுங்கள், திருப்தியாக சாப்பாடு கொடுங்கள், பஜனை பண்ணுங்க, ராமர் கீர்த்தனை பண்ணுங்க. நாளை ஜனவரி 22, ராமர் கோவில் பிரான பிரதிஷ்டையை ஒட்டி கோவில்களில் விழா எடுங்க, யார் தடுப்பாங்கனு பார்ப்போம். இதை தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    • கும்பாபிஷேகம் குறித்து தனது எக்ஸ் அக்கவுன்டில் கருத்து தெரிவித்தார்.
    • ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்.

    சாமியாரும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருமான நித்யானந்தா ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக நித்யானந்தா அறிவித்து இருந்தார். இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தனது எக்ஸ் அக்கவுன்டில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவரவிடாதீர்கள். பிரான பிரதிஷ்டை மூலம் ராமர் கோவிலின் கருவறைக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்."

    "முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்," என குறிப்பிட்டுள்ளார்.


    பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2010 ஆண்டு கைது செய்யப்பட்ட நித்யானந்தா, பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். நித்யானந்தாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஓட்டுனர், 2020-ம் ஆண்டு நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

    அதிகம் எதிர்பார்க்கப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை (ஜனவரி 22) மதியம் நடைபெறுகிறது. ஜனவரி 23-ம் தேதியில் இருந்து ராமர் கோவில் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

    • ஜனவரி 19-ம் தேதி அறக்கட்டளைக்கு வில் நன்கொடையாக வழங்கப்படும்.
    • வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசம் மாநறிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2.5 கிலோ எடையுள்ள வில்வம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

    இது அயோத்தியில் உள்ள அமாவா ராமர் கோயிலால் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து அவருக்கு வில்லும் அம்பும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 19-ம் தேதி இவை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அமாவா ராம் கோயிலின் அறங்காவலரான ஷயான் குணால் தெரிவித்துள்ளார். 

    மேலும், இந்த வில் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு அம்புகளைப் பற்றிய விளக்கங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 200 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் வில்வத்தை தயாரித்துள்ளனர்.

    2.5 கிலோ எடையுள்ள வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளாக கூறப்பட்டுள்ளது.

    • டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது.
    • ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறிவிப்பு.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குஜராத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள மேளம் சிறப்பு ரதத்தில் இன்று வந்தடைந்தது.

    குஜராத்தின் கர்னாவதியின் தர்யாபூர் விரிவாக்கத்தில் உள்ள டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது என்று ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

    ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

    மேளத்தை இங்கு கொண்டு வந்த குழுவின் உறுப்பினர் சிராக் படேல் கூறுகையில், "இது தங்கம் மற்றும் வெள்ளி அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேளம் அமைப்பு இரும்பு மற்றும் செப்பு தகடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

    இந்த இசைக்கருவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரி கோயில் அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பியதாக குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் ராவல் தெரிவித்தார்.

    • கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
    • ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகள்.

    அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், நாளை அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறக்கப்படுகிறது.

    ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. 

    இதை முன்னிட்டு, ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகளின் 7 நாள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, ஜனவரி 16 : கோயில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட புரவலர் மூலம் பரிகாரம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு மற்றும் கோடன் நடைபெறுகிறது.

    ஜனவரி 17: ராம்லாலா சிலையுடன் அயோத்திக்கு ஊர்வலம் வரும், பக்தர்கள் மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து கோவிலை அடைவார்கள்.

    ஜனவரி 18: கணேஷ் அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.

    ஜனவரி 19: அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹவன்.

    ஜனவரி 20: கோயிலின் கருவறையை சரயுவின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தியும், அன்னதானமும் நடைபெறும்.

    ஜனவரி 21: 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பிறகு, ஷயதிவாஸ் செய்யப்படும்.

    ஜனவரி 22: காலை வழிபாட்டிற்குப் பிறகு, மதியம் மிருகசிர நட்சத்திரத்தில் ரமலாவின் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும். 

    பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தர உள்ளதால், அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அயோத்தி பயணத்தின் போது பிரதமர் மோடி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • உற்சவமூர்த்திகள் கோவில் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மஹா தீபாரதனை நடந்தது.
    • சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. பிறகு புஷ்கரணியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நேற்று காலை ஸ்ரீதேவி பூதேவி சகோதரா ஏழுமலையான் பிரம்மாண்ட தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இருந்த கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகள் செய்து பக்தர்களை பரவசப்படுத்தினர்.

    பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஏழுமலையான் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்தவாரி நடைபெறும் புஷ்கரணிக்கு கொண்டுவரப்பட்டனர்.

    அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சந்தன பொடிகள் மூலம் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் உற்சவமூர்த்திகள் கோவில் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மஹா தீபாரதனை நடந்தது.

    தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. பிறகு புஷ்கரணியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    கோவில் குளத்தில் அருகே காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க புஷ்கரணியை சுற்றிலும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். இன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    இந்த ஆண்டு 2 பிரமோற்சவம் உள்ளதால் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    திருப்பதியில் நேற்று 72,137 பேர் தரிசனம் செய்தனர். 23, 735 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 

    • சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இன்று காலை பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று ஏழுமலையான் கோவிலில் 62,745 பேர் சாமி தரிசனம் செய்தனர். 24,451 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 19 காத்திருப்பு அறைகள் நிரம்பியது. 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • சிவலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் இருந்து வருகிறது.
    • சிறப்பு யாகம் நடத்தி மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த மணவெளி சிவலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் இருந்து வருகிறது.

    இக்கோவிலில் 59-ஆம் ஆண்டு பிரமோற்சவ விழா. கடந்த 18-ந் தேதி இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 19-ந் தேதி இரவு இந்திர விமான வாகனத்தில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. 20-ந் தேதி இரவு அன்ன வாகனத்தில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று 21-ந் தேதி இரவு ராஜ அலங்காரத்தில் சிவசைலநாதர் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம் நடத்தி மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அய்யனார் கோவில் வீதி மற்றும் துளசிங்கம் நகர் குடிருப்பு பொதுமக்கள் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 25-ந் தேதி மாலை 6 மணியளவில் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வு வரும் 26-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.
    • இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தின் 4-வது புதிய ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சபை ஆயர் அருள்தனராஜ் முன்னிலை வகித்தார். இதில் 34-வது அசனப் பண்டிகை விழாவும் அனுசரிக்கப்பட்டது. பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஸ்டீபன் சுந்தர்சிங் இசைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்ற அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் பாடகர் குழுவினருக்கு கேடயங்களை வழங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ×