என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிவசைலநாதர் கோவில் பிரமோற்சவ விழா
    X

    ராஜ அலங்காரத்தில்  சாமி அலங்காரத்தில் உள்ள காட்சி.

    சிவசைலநாதர் கோவில் பிரமோற்சவ விழா

    • சிவலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் இருந்து வருகிறது.
    • சிறப்பு யாகம் நடத்தி மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த மணவெளி சிவலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் இருந்து வருகிறது.

    இக்கோவிலில் 59-ஆம் ஆண்டு பிரமோற்சவ விழா. கடந்த 18-ந் தேதி இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 19-ந் தேதி இரவு இந்திர விமான வாகனத்தில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. 20-ந் தேதி இரவு அன்ன வாகனத்தில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று 21-ந் தேதி இரவு ராஜ அலங்காரத்தில் சிவசைலநாதர் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம் நடத்தி மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அய்யனார் கோவில் வீதி மற்றும் துளசிங்கம் நகர் குடிருப்பு பொதுமக்கள் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 25-ந் தேதி மாலை 6 மணியளவில் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வு வரும் 26-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×