என் மலர்

  நீங்கள் தேடியது "சொத்து வரி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாநகராட்சி கூட்டம்: சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
  • அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

  மதுரை

  மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையிலும், கமிஷனர் சிம்ரன் ஜித் காலோன் முன்னிலையிலும் நடந்தது. பெரும்பாலான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னைக்கு சென்றுவிட்டதால், குறை வான கவுன்சிலர்களே கூட்டத்தில் பங்கேற்றனர்.

  அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். பின்னர் சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

  தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசும்போது, தெற்கு தொகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு இருப்பதால் கழிவுநீர் வெளி யேறி ரோட்டில் செல்கிறது. மேலும் குடிநீர் பிரச்சினை ஆங்காங்கே ஏற்படுகிறது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சென்னையில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 777 குடியிருப்புகள் உள்ளன.
  • அதன் உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

  சென்னை:

  சென்னையில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக கடந்த 30-ந்தேதி நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  அதன்படி சென்னையில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்காக சொத்து உரிமையாளர்களுக்கு படிவம் 6 நோட்டீசை சென்னை மாநகராட்சி வழங்க உள்ளது.

  படிவம் 6-ல் கட்டிடங்களின் அளவு, பரப்பளவு, தெரு, திருத்தப்பட்ட வரித்தொகை இடம்பெற்றிருக்கும்.

  சென்னையில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 777 குடியிருப்புகள் உள்ளன. அதன் உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

  இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-

  சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு வருகிற 13 அல்லது 14-ந்தேதி முதல் அச்சடித்து வினியோகம் செய்யப்படும். ஒவ்வொரு சொத்துக்களும் தனித்தனி நோட்டீசு இருக்கும். மொத்தம் 13 லட்சத்துக்கும் அதிகமான நோட்டீசுகளை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அச்சிட உள்ளோம்.

  உரிமையாளர்கள் பெயர், பில் எண் மற்ற விவரங்கள் நோட்டீசில் சேர்க்கப்படும். சொத்து உரிமையாளர்கள் புதிய வரி விகிதம், சொத்தின் அளவு ஆகியவற்றின் முரண்பாடுகளை கண்டறிந்தால் மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

  ஏற்கனவே இருந்த மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 150 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 125 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது.

  இதே போல் 601 சதுர அடி முதல் 1200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு வரி உயர்வு 175 மற்றும் 150 சதவீதமாக இருக்கும்.

  1201 சதுர அடி முதல் 1800 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 200 மற்றும் 175 சதவீதம் வரி உயர்வு இருக்கும். 1801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 250 சதவீதம் மற்றும் 200 சதவீத அளவுக்கு வரி உயரும்.

  சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளாக இருந்த போது சொத்து வரி உயர்த்தப்பட்டது. எனவே அங்கு சொத்து வரி உயர்வு குறைவாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் மாதத்தில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.
  • 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது

  பெங்களூரு:

  பெங்களூரு மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்து வரி வசூல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரி வசூல் தொடங்கியது. இது தொடங்கிய முதல் 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது. 28 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலானது இதுவே முதல் முறை ஆகும். இது வரி வசூலில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

  முதல் மாதத்தில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி மேலும் ஒரு மாதம் அதாவது கடந்த மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தள்ளுபடி வழங்கப்பட்ட 2 மாதங்களில் ரூ.2,000 கோடி சொத்து வரி வசூலாகியுள்ளது.

  இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தீபக் கூறுகையில், ''நாங்கள் சொத்துவரி செலுத்தும் நடைமுறையில் சில மாற்றங்களை செய்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் காரணமாக சொத்துவரி வசூல் அதிகரித்துள்ளது. வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் வரும் நாட்களில் சொத்துவரி செலுத்தும் நடைமுறையை மேலும் சீரமைப்போம். கட்டிடங்களின் உரிமையாளர்கள் சரியான முறையில் வரியை செலுத்துகிறார்களா? என்பது குறித்து கட்டிட சர்வே நடத்துகிறோம்'' என்றார்.

  ×