என் மலர்

  நீங்கள் தேடியது "ஆலோசனை கூட்டம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசுத்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் ஆலோசனை
  • மங்கலம் ரோட்டில் வரும் வாகனங்களை, அம்மாபாளையம் பிரிவில் இருந்து திருப்பூர் ரோடு நகருக்குள் வருமாறு ஆலோசிக்கப்பட்டது

  பல்லடம் :

  பல்லடம் நகர பகுதியில்ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசுத்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ஜெயதேவ்ராஜ், பல்லடம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலா தேவி, மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் வரும் கனரக வாகனங்களை, பனப்பாளையம் வழியாக தாராபுரம் ரோடு சென்று அங்கிருந்து பொள்ளாச்சி ரோடு வழியாக காரணம்பேட்டையை அடைந்து அங்கிருந்து கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் செல்லவும், மங்கலம் ரோட்டில் வரும் வாகனங்களை, அம்மாபாளையம் பிரிவில் இருந்து திருப்பூர் ரோடு நகருக்குள் வருமாறும் போக்குவரத்தை மாற்றியமைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உத்தரவு வந்த பின்னர் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜூலை 5-ம் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாட்டை சிறப்பாக நடத்துவது
  • மாநாட்டில் 2000 விவசாயிகளை பங்கேற்க செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கரூர்:

  கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி தலைமையில் நடந்தது.

  இதில் வரும் ஜூலை 5-ம் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாநாட்டில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவழைத்து கோரிக்கை மனுக்களை அளிப்பது, மாநாட்டில் 2000 விவசாயிகளை பங்கேற்க செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் தங்கராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆலோசகர் ராக்கி முருகேசன், நிர்வாகி காலனி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  • தமழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

  வத்தலக்குண்டு:

  திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

  இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜ், பொருளாளர் வளர்மதி பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர்களின் சம்பள ஊதியத்தை உயர்த்தி வழங்கியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

  3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்களாக வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வழங்கினால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்றும், மக்களின் குறைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் கேட்டறிந்து மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்று ஊராட்சி மன்றத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்மர், கோவிந்தராஜ், மொக்கையதேவர், ஜெயபால், ஜெயப்பிரியா நடராஜன், யசோதை முருகேசன், வனிதா மாணிக்கம், வசந்தா மணிவண்ணன், காமாட்சிகென்னடி, மகேஸ்வரி, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உழவர்கள் உரிமை மீட்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  விழுப்புரம்:

   தற்சார்பு உழவர்கள் உரிமை மீட்புசங்க ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது கூட்டத்திற்குசமூக நீதி மக்கள் விடுதலை முன்னணி நிறுவனத் தலைவர் நரையூர் வேலு தலைமை தாங்கினார். ராஜ சோழன் விவசாய சங்க மாநிலத் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.மாநிலத் தலைவர் கணேசன் வரவேற்றுப் பேசினார்.மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் சீர்காழி பிரபாகரன் தொடக்க உரையாற்றினார். உழவர் களம் ஆசிரியர்தெய்வீக தாஸ் அறிமுக உரையாற்றினார்.

  கூட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தை விவசாயத் தொழிலா ளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். திருக்கோவிலூர் தெ ன்பெண்ணை ஆற்று அணை இருந்து வரும் கால்வாய்கள் பண்ருட்டி வரை சிமெண்டு கா ல்வாயாக மாற்றம் செய்ய வேண்டும். இயற்கை உரம் தயா ரிக்க மாடுகள் வாங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
  • கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  பல்லடம் :

  பல்லடம் ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு இச்சிப்பட்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

  இந்தநிலையில் பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க.அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் கொ.ம.தே.க. மாவட்டசெயலாளர் கரைப்புதூர் ராஜேந்திரன், காங்கிரஸ் வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி,

  இந்தியக் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம், மதிமுக. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது.
  • இதில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பலர் கலந்து கொண்டனர்

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முப்பெரும் விழா நடந்தது.

  இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் கலந்துகொண்டு வேடசந்தூர் ஆத்துமேட்டில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர்.

  இதில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.பின்னர் தனியார் மகாலில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் பதவியேற்பு விழா நடந்தது.

  இதில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சதீஷ்குமார், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணிவண்ணன், நத்தம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுடர்வண்ணன், இளைஞர் காங்கிரஸ் வேடசந்தூர் தொகுதி தலைவர் ஏர்ஷாத் அகமது, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரத்தினவேலு நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓ.பி.எஸ் விட்டு கொடுக்க வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கூறினார்.
  • ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகார பூர்வமான கூட்டம் இல்லை.

  மதுரை

  மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறியதாவது:-

  அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொதுக் குழுவில் வாய்ப்புள்ளது. சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை, சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல.

  மாவட்டச் செயலாளர் 90 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர். நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிளைக் செயலாளர்கள், தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம், அவர்களது நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

  2019-ம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என தான் கூறினேன். 3 ஆண்டுகளாக இருவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டேன்.

  தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி. நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை.

  ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகார பூர்வமான கூட்டம் இல்லை.எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு ஜானகி அம்மாள் பெருந்தன்மையாக கட்சியை ஜெயலலிதாவுக்கு விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும். கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றோருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும்.

  எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதா தனிக்கட்சி ஆரம்பித்தபோது சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி 4 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு மற்றவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் வரவேற்று இயக்கத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர்.
  • 80 நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  உடுமலை,

  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சார்பில் தமிழகம் முழுவதும் மண்வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சத்குரு 100 நாட்களில் 25 நாடுகளுக்கு பைக் வாயிலாக 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். அந்த பயணம் வரும் 21 ல் நிறைவுபெறுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த உடுமலையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் மண் காப்போம் இயக்கம் சார்பில் உடுமலை ஐஎம்ஏ.ஹாலில் நடந்தது.

  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் வரவேற்று இயக்கத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர். மண் வளம் குறைந்ததால் இந்த தலைமுறை குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதித்துள்ளனர் மண்வளத்தை பாதுகாக்க விட்டால் எதிர்காலம் பிரச்சினை உள்ளாகும்.

  வரும் 25 ஆண்டுகளில் உணவு உற்பத்தி குறையும்போது மக்கள் தொகை இன்னும் அதிகரித்திருக்கும். எனவே இது சார்ந்த உலகளாவிய சட்டம் திட்டம் கொள்கையைக் கொண்டு வருவதே மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமாகும்.

  இதற்கு 80 நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. மண் வளத்தைப் பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதே அவர்களுக்கு நாம் தரும் பரிசு.

  மண்ணின் கரிம வளத்தை வெறும் ஒரு சதவீதம் அதிகரித்தால் ஏக்கருக்கு 75 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கூடுதலாக சேமிக்கலாம். தமிழக மண்ணின் சராசரி கரிமவளம்0.68 சதவீதமாக உள்ளது. இதை 8 முதல் 10 சதவீதமாக அதிகரித்தால் விவசாயத்திற்கான தண்ணீர் பயன்பாட்டை 70 சதவீதம் குறைக்க முடியும். இதற்கு மக்களின் குறிப்பாக விவசாயிகளின் ஆதரவு தேவையாகும் .இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் உடுமலை மக்கள் பேரவை தலைவர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். மழை உடுமலை, அபெக்ஸ் சங்கம், ராயல் அரிமா சங்கம், கிழக்கு அரிமா சங்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  வரும் ஜூன் 18ல் விடுமுறையில் மண்வளப் பாதுகாப்பு குறித்த பெரிய அளவிலான கருத்தரங்கம் நடத்த தீர்மானிக்கப்பட்டது .சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு பேசிய உரை காணொளியில் திரையிடப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார். #MKStalin #KamalHaasan
  சென்னை:

  காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

  இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக மே 19இல் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைக்க உள்ளேன். ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயர். என கூறினார்.

  கமல்ஹாசனின் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மு.க ஸ்டாலின் அதன்பின்னர் தெரிவித்தார். #MKStalin #KamalHaasan
  ×