என் மலர்

  நீங்கள் தேடியது "அரிவாள்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
  • காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள வி.கே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வினுபிரியா (வயது25). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால் வினுபிரியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

  இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அசோகா. சம்பவத்தன்று அசோகா, வினுபிரியா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

  அதன் பின் அசோகாவின் கணவர் ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் அரிவாளால் வினுபிரியாவை வெட்டினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ராமச்சந்திரன், அவரது மனைவி அசோகா மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தஞ்சை அருகே வெட்டிக்காடு பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் பலத்த காயங்களுடன் மனோகரன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.
  • மர்மநபர்கள் சிலர் மனோகரனை அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு ஆற்றில் பிணத்தை வீசி தப்பி சென்றுள்ளனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவரை சிலர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை தேடி வந்தனர்.

  இந்நிலையில் இன்று காலை தஞ்சை அருகே வெட்டிக்காடு பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் பலத்த காயங்களுடன் மனோகரன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் மனோகரன் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு இருந்தது. இதனால் மனோகரன் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து போலீசார் மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணை யில், தஞ்சையை சேர்ந்த சிலர் மனோகரனை மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லலாம் என அழைத்து சென்றுள்ளனர்.

  பின்னர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் அவர்கள் மனோகரனை அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு ஆற்றில் பிணத்தை வீசி தப்பி சென்றுள்ளனர் என்பதும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து மனோ கரனை கொலைசெய்தவ ர்கள் யார்? என விசா ரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுவாமி தாஸ் குடித்துவிட்டு ஆபாச வார்த்தையால் பேசியவாறு கையில் இருந்த அரிவாளால் ரெத்தின மணியை சரமாரியாக வெட்டியுள்ளார்
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

  கன்னியாகுமரி :

  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுவிளை குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ரெத்தினமணி (வயது62).

  இவர் மார்த்தாண்டம் சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

  இவர் வீட்டின் அருகாமையில் நின்று கொண்டிருந்தபோது குளக்கச்சி நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் சுவாமி தாஸ் (52), குடித்துவிட்டு ஆபாச வார்த்தையால் பேசியவாறு கையில் இருந்த அரிவாளால் ரெத்தின மணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

  இதனால் பலத்த காயமடைந்த ரத்தின மணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து ள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதேபோல மார்த்தா ண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குளக்கச்சி நெடுவிளையை சுவாமிதாஸ் (52) என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் எலக்ட்சியனாக பணிபுரிந்து வருவதாகவும்,

  வீட்டின் அருகாமையில் நின்றபோது ரெத்தினமணி குடித்துவிட்டு கம்பால் சரமாரியாக தாக்கி முதுகு, நெஞ்சு, உடல் முழுவதும் காயப்படுத்தியதாகவும் இதனால் படுகாயம் அடைந்த மார்த்தா ண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×