விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீச்சு

விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீசி தேடி வருகின்றனர். 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது
விவசாயியை அரிவாளால் வெட்டிய  பெண் உள்பட 4 பேருக்கு வலை வீச்சு
Published on

மதுரை

மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக தகராறு செய்து ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக ரமேஷ் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

இதில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் ரமேசை வெட்டியதாக முருகன், அவரது மனைவி செல்வி, மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ், தமிழரசன் ஆகிய 4 பேரையும் கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com